7. நேர்மறை மனப்பான்மை
7 . நேர்மறை மனப்பான்மை (திட்டத்தை / செயலைச் சமாதானமாகவும் அர்த்தத்துடனும் தொடர உதவும் ஆற்றல்) மனப்பான்மை மனப்பான்மை என்பது நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் பாதிப்பதாகும் சிந்தனையும் அதனோடு கூடச் செயலும் நம்முடைய மனப்பான்மையின் வெளிப்பாடாக உள்ளது . மனப்பான்மை என்பது மனம் சார்ந்ததாயினும் , அது மனம் மற்றும் உடல் சார்ந்த மற்ற காரியங்களையும் பாதிப்பதாய் உள்ளது . நாம் செய்யும் , செய்ய விரும்பும் அனைத்து காரியங்களையும் மனப்பான்மை பாதிக்கிறது , ஏனெனில் அது நம் சிந்தனைக்கு அடிப்படையாய் உள்ளது . மனப்பான்மை என்பது ஏதாவது காரியத்தைக் குறித்த நம்முடைய சிந்தனைகள் அல்லது உணர்வுகள் இருக்கும் நிலையாகும் . நம்முடைய சூழ்நிலைகளையும் நம்முடைய பின்னணியையும் பொருத்து நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு சில யோசனைகள் இருக்கும் . சில மதிப்பீடுகள் நம்முள் மறைந்திருக்கும் , அது நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியாக இருக்கவும் , நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துக்கொள்ள உதவும் . மனப்பான்மை என்பது ஒரு காரியத்தைக் குறித்த நம்முடைய சிந்தனை மற்றும் உணர்வுகளின் நிலையாகும் . அது...