10. வெற்றி- வாழ்வின் உண்மையான கனிகள்

10. வெற்றி- வாழ்வின் உண்மையான கனிகள்:

(சுய உந்துதலோடு திருப்தியான வாழ்விற்கு, ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் விவரிக்க வேண்டிய அவசியமான காரியம்)

தனிப்பட்ட நபரின் தேவைகள்:

ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய தேவைகளை சந்திக்க வேண்டும்.

நம் அனைவருக்கும் வெவ்வேறு சூழ்நிலை உள்ளது, மற்றும் நாம் வளர்ந்த விதமும் வெவ்வேறு வழிகளில் இருக்கிறது, எனவே நம்முடைய தேவைகளை நம்முடைய சூழ்நிலைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் நமக்கே உரித்தான தேவை இருக்கிறது என்பதுதான் உண்மை, அதை ஏதாவது வழியில் கடின முயற்சியோடு நிவிர்த்தி செய்ய நினைக்கிறோம்.

தேவை என்பது மிகவும் அடிப்படையான காரியத்தில் இருந்து, அங்கீகாரம் மற்றும் வெகுமானத்திற்கான தேவையாக இருக்கலாம்.

மாஸ்லோ இயற்றிய தேவைகளுக்கான படிநிலை

 

உலகில் உள்ள மனிதர்களுக்கு அடிப்படை தேவை என்பது உணவு, நீர், காற்றை உட்கொள்வது, மற்றும் தங்கள் உடல்சார்ந்த காரியங்களை சேர்த்து வாழ்வதற்கு தேவையான இடம். அதற்கு அடுத்ததாக மனிதர்கள் தங்கள் தன்மானத்தையும் சுய மதிப்பீட்டையும் காக்க தேவையான உடை. தேவை என்பது அடிப்படை நிலையிலிருந்து அங்கீகாரம் மற்றும் வெகுமானம் பெற வேண்டும் என்ற உயரிய நிலை வரை வேறுபடுகிறது.

ஒரு நபரின் வெற்றி அவர்களின் தேவையை விவரிப்பதில் அதிகமாக சார்ந்திருக்கிறது.

நம்முடைய இலக்குகளும் தேவைகளும் சரியான தளத்தில் இருக்கும் பொழுது தான், நம்மால் வெற்றியை விவரிக்க முடியும். ஒரு தனிப்பட்ட நபரின் வெற்றியென்பது, ஒரு காரியத்தின் இறுதியில் என்ன அடைய வேண்டும் என்பதை, செயல்முறையில் திரும்திகரமான செயல்களால் தங்களை பூர்த்தி செய்வதை பெரிதும் சார்ந்திருக்கிறது.

தேவை என்பது அவசியமானதும் மிகவும் முக்கியமான காரியமுமாகும், ஒரு நபரின் விருப்பமாக இருப்பதல்ல.

ஒரு தனிப்பட்ட நபரின் தேவைகளை பூர்த்தி செய்யாத வெற்றி விசேஷமானதாக இருக்காது, மற்றும் ஒரு நபருக்கு மகிழ்ச்சிகரமான காரியமாகவும் இருக்காது. வெற்றி என்பது எல்லோராலும் விரும்பப்படுகிறது ஆனால் தேவைகள் அனைவருக்கும் அவசியமானவை. ஒரு நபரின் உண்மையான தேவைகளை சந்திப்பது அனைத்தும் வெற்றியே


வெற்றி- விளக்கம்:

வெற்றி என்பது குறிக்கோள் அல்லது நோக்கத்தை அடைவதாகும்.

சில காரியங்களை சரியான நேரத்தில் சரியான திசையில் நிறைவேற்றுவது வெற்றி. எனவே அது முன்னரே சரியான நோக்கங்கள் உடையதாகவும், நோக்கங்களை அடையத்தக்க வழிகாட்டுதல்கள் உடையதாகவும் இருக்க வேண்டும். இலக்குகள் வெற்றியாக மாறுவதற்கு சீரிய குறிக்கோள் அல்லது நோக்கம் மிகவும் அவசியமாகும்.

சில நபர்கள் புகழை, பொருளை, சமூக உயர்நிலையை (சுய மதிப்பீட்டை பெறுவதற்கு)  சென்றடைவதை வெற்றி என விவரிப்பர்.

நிறைய மக்கள் தங்கள் வாழ்வில் உயரிய மதிப்பளவை கொண்டுள்ளனர். பெரிய செல்வத்தை அடைவது, நிறைய மனிதர்களின் பாராட்டை பெறுவது, உயரிய பதவியை சமூகத்தில் பெற்றிருப்பது வெற்றி என கூறுவர், ஏனெனில் அது அவர்கள் உயர்ந்தவர்களாக உணரவும், அவர்களின் சுய மதிப்பீட்டை அதிகரிக்கவும் உதவும்.

சில நபர்கள் திருப்திகரமாக சில காரியங்களை முடிப்பதை வெற்றி என விவரிப்பர்.

நிறைய நல் வாய்ப்புடையவர்கள், திருப்திகரமாக சில காரியங்களை முடிப்பதை வெற்றி என விவரிப்பர். அவர்கள் ஒப்பிட்டு பார்த்து மதிப்பளவையும், மதிப்பீடுகளையும் கொண்டிருக்க மாட்டார்கள், ஆனால் தங்களுக்கு தாங்களே சரியான வரையறைகளை வகுத்து திருப்தியாக இருப்பர், மற்றும் தங்களால் முயன்ற வரையில் சிறப்பாக காரியங்களை அடைய  விரும்புவர்.

சில நேரங்களில் முயற்சித்த காரியங்களில் விருப்பமான ஒரு விளைவு ஏற்படுவதை வெற்றி என சிலர் விவரிப்பர்.

சில காரியங்களை முயற்சிக்கும் பொழுது நேர்மறையான விளைவுகள் ஏற்படுமானால், அது சாதகமான பலனாகவும் இருக்கும், அதுவே வெற்றி. எப்பொழுதும் ஒரு காரியத்தை முழுவதும் முடிப்பது சாத்தியமாக இருக்காது, மற்றும் சில காரியங்களை முயற்சிக்கும் பொழுது வேறு சில காரியங்கள் செயல் முறையில் கிடைக்கப்பட்டிருக்கும், அதுவே சாதகமான பலனாகி, சில நேரங்களில் வெற்றியும் ஆகும்.

இலக்குகள் அமைத்தல்

நிறைய நேரங்களில் மக்கள் அதிகம் யோசிக்காமல் மிகவும் குறுகிய நோக்கு உடையவர்களாக இருக்கின்றனர், தங்கள் தனிப்பட்ட முன்னேற்றத்திற்குரிய இலக்குகளையும் அமைப்பதில்லை.

எல்லா மனிதர்களும் வாழ்வில் சவால்களை எடுத்துகொள்வதில்லை, காரியங்கள் போகிற போக்கில் நேரத்தை செலவழிக்கின்றனர், உண்மையிலேயே நேரத்தை பயன்படுத்துவதில்லை. நிறைய நேரங்களில் குறுகிய நோக்கு உடையவர்களாக இருக்கிறோம், குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் காரியங்களை மாத்திரம் செய்கிறோம், அது நம்முடைய ஆளுமையை நீடிய காலத்தில் மேம்படுத்துவதில்லை.

நிறைய மக்கள் இலக்குகள் உடையவர்களாக இருக்கின்றனர், ஆனால் அதற்கான செயல்களை செய்வதில்லை, அவர்களின் குறுகிய திட்டம், நீண்ட கால திட்டத்திற்கு ஒத்திருப்பதில்லை.

சில நபர்கள் தங்கள் கனவை அடைய நல்ல இலக்குகளையும் ஆர்வங்களையும் கொண்டுள்ளனர், ஆனால் தங்கள் குறுகிய பார்வையில் என்ன காரியம் ஏற்றார் போல உள்ளதோ அதை செய்கின்றனர், மற்றும் நீடிய கால இலக்குகளோடு தொடர்புடைய அவசியமான காரியங்களை செய்வதில்லை. காலப்போக்கில் அவர்களின் இலக்குகள் நொறுங்கி, சரியான செயல்கள் இல்லாமல் மாற்றமடைகிறது.

நிறைய மக்கள் தங்களுக்கென குறிப்பிட்ட எந்த இலக்குகளும் நிர்ணயிப்பதில்லை, அவர்கள் தங்கள் சூழ்நிலைகளை, வரையறைகளை, நன்மைகளை கருத்தில் கொள்ளவும் தவறுகின்றனர்.

அடையப்படாத இலக்குகளுக்கு காரணம், இலக்குகளை நிர்ணயிக்கும் பொழுது பகுத்தறிவில்லாத சாத்தியமற்ற எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருப்பது. சில மக்கள் தங்களின் தற்போதைய சூழ்நிலைகளை, நேர்மறைகளை, எதிர்மறைகளை, இலக்குகள் நிர்ணயிக்கும் பொழுது சிந்திப்பதில்லை. உயரிய காரியங்களை குறிவைப்பது நல்லது, ஆனால் நாம் உயரிய நிலைக்கு போவதற்கு, தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிய வேண்டும்.

இலக்குகள் துவக்க முயற்சியுடன் முழுமையானதாக, அடையக்கூடியதாக, பகுத்தறிவுள்ளதாக, நேர்மறையானதாக, அறநெறிகள் உள்ளதாக இருக்க வேண்டும்.

நாம் கொண்டுள்ள இலக்குகளை எல்லாம் நாம் எதிர்பார்க்கின்ற, விரும்புகின்ற விளைவுகளை ஏற்படுத்தாது. சுயநல / சுய லாபமுடைய இலக்குகளை அடைந்த பிறகு அது விரும்பத்தக்கதாக இருக்காது. நம்முடைய இலக்குகள் திருப்தியாக இருக்க, அது முழுமையானதாகவும் எல்லா காரியங்களையும் கருத்தில் கொண்டதாகவும் இருத்தல் அவசியம், மற்றும் அடைவதற்கு சாத்தியமானதாகவும், யோசிப்பதற்கு காரணத்துவமிக்கதாகவும், அணுக நேர்மறையானதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடிய அறநெறிகளை கொண்டதாகவும், துவக்க முயற்சியுடன் முன்னேற கூடியதாகவும் இருக்க வேண்டும்.

வெற்றி அடைதல்

வெற்றி என்பது தோல்வியே அடையாமல் இருப்பதல்ல; அது எல்லா தோல்விகளையும் கடப்பது. அது தவறுகளில் இருந்து கற்பது.

ஒரு சில நேரங்களில், நம்முடைய தவறுகள் மற்றும் எதிர்பாராத விபத்துகளால் நிறைய காரியங்களை நம்மால் அடைய முடியாது, அவற்றை நமது வாழ்வின் போக்கில் வரையறுக்க முடியாது. ஆனால் நாம் தோல்விகள் மற்றும் தவறுகள் போன்ற அனைத்திலிருந்தும் கூட சில காரியங்களை கற்கலாம், அது நம்முடைய வருங்கால சூழ்நிலைகளை கையாள உதவும்.

வெற்றி என்பது ஏதோவொரு வழியில் சில காரியங்களை அடைவது அல்ல, அது நிலைக்காது, அது நிலைத்தாலும், அடைந்த வெற்றி ஆர்வமிக்கதாகவும் விரும்பக்கூடியதாகவும் இருக்காது. வெற்றி என்பது நம்முடைய நேரம், பொருள், தாலந்தை நேர்மறையான மனப்பான்மையுடன் கூடிய நேர்மறையான நோக்கத்தோடு உபயோகித்து, ஒரு காரியத்தை அடைவதாகும்.

நம்முடைய இலக்குகள், விருப்பங்கள், பொறுப்புகள் நிறைவேற்ற படுவதற்கு, நாம் எந்த முறையில் வேண்டுமானாலும் அதை நகர்த்தலாம். ஆனால் அப்படி செய்தால் சுத்த மனசாட்சியுடன் விஞ்சிய நிலையை தக்க வைக்க முடியாது. வெற்றி என்பது ஒரு சில காரியங்களை தொடர்ச்சியான விதத்திலும் விரும்பத்தக்க விதத்திலும் அடைவதாகும். மறைந்திருக்கும் தன்மைகளையும், ஒரு மனிதருக்கு அவசியமான தன்மையையும் உள்வாங்குவதற்கு கடின உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி அவசியமாகும். வெற்றி என்பது நேரம், பொருள், தாலந்து முதலியவற்றை ஒரு பொதுவான நன்மைக்காக நேர்மையான நோக்கத்துடனும் நல்ல மனப்பான்மையுடனும் உபயோகிப்பதாகும்.

வெற்றி என்பது சேரும் இடம் மாத்திரம் அல்ல ஆனால் அது ஒரு நபர் கடந்து வரும் பாதையாகும், மற்றும் ஒரு நபர் எடுத்துவைக்கும் அனைத்து அடிகளுமாகும்.

உலகில் உள்ள நிறைய நபர்கள், வெற்றி என்பது கடினமான சில இலக்குகளை தம்மை வருத்திக்கொண்டு அடைவது என்று எண்ணுவர். ஆனால் அனைவரும் நாளை என்பது நிச்சயமானதல்ல என்பதை  புரிந்துக்கொள்ள வேண்டும். எனவே, நாம் வாழ்வின் அனைத்து தருனங்களிலும் வெற்றியை உணர வேண்டும், மற்றும் வெற்றி என்பது நாம் பயனிக்கின்ற பாதை, நாம் முன்னேற எடுக்கின்ற அனைத்து நேர்மறையான அடிகளுமாகும். 

வெற்றிக்கான பரிந்துரைகள்:

சுயத்தை மதியுங்கள் மற்றும் மற்றவரை மதியுங்கள்.

மற்றவர்கள் நம்மை பார்க்கும் விதத்தை தவிர்த்து, சரியான மதிப்பீடுகளுடனும், சிந்தனைகளுடனும் நாம் தன்மானம் உடையவர்களாக இருப்பது அவசியம். அதனை அடுத்து நாம் கொண்டுள்ள எல்லா வேறுபாடுகள் மற்றும் கருத்துக்களின் நிமித்தம் ஒத்துழையாமையின் மத்தியில் மற்றவர்களை ஏற்க அவர்களோடு செயல்ப்பட, மற்றவரிடத்து மரியாதையுடன் இருப்பதும் அவசியம்.  

தானாக செயல்படுவதை வளர்த்துக்கொள்ளுங்கள் மற்றும் நல்ல மனிதரோடு உறவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

உலகில் மக்களே அனைத்தையும் ஆளுகைப்பவர்கள். வாழ்வில் நாம் சிறந்த மனிதரோடு நல்ல உறவினை வைத்திருப்பது அவசியம், அதே சமயம் சரியான மனப்பான்மை, செயல், மதிப்பீடுகளுடன் நாம் தானாக காரியங்களை செய்யக்கூடியவர்களாக நம்மை வளர்த்துக்கொள்வதும் அவசியம்.

உங்கள் நேரத்தை நிர்வகியுங்கள்.

நேரமே மதிப்புள்ளதாயும், அனைவருக்கும் மிகவும் பொதுவான ஒரு வளமாகவும் உள்ளது. நாம் நம்முடைய நேரத்தை சரியான காரியத்திற்கு, நம்முடைய குறுகிய மற்றும் நீண்ட கால குறிக்கோள்களுக்கு செலவழிப்பது அவசியம்.

மதிப்பீடுகளுடனோடு கூடிய பகுத்தறிவோடிருங்கள்.

நாம் ஏற்கப்பட கூடிய வகையிலும், சாதாரணமாகவும் இருக்க நமக்கு சமநிலையுடன் கூடிய அனைத்து காரியங்களை பற்றிய ஒரு நோக்கு அவசியம். பகுத்தறிவுடன் கூடிய மதிப்பீடுகள் மற்றவர்கள் நம்மை அணுகவும் ஏற்கவும் உதவும்.

நோக்கத்துடன் ஞானவான்களாக இருங்கள்

தெரிவதற்கும் பகுத்தறிவதர்க்கும் மத்தியில் அகன்ற வேறுபாடு உள்ளது. தெரிவது அறிவினால், பகுத்தறிவது ஞானத்தினால். நாம் சரியான நோக்கத்துடன் ஞானிகளாக இருப்பது அவசியம்.

ஒழுக்கத்துடன் பொறுப்புள்ளவர்களாக இருங்கள்.

நம்முடைய ஒப்புதலில் நாம் எடுத்துக்கொண்ட, நமக்கு கொடுக்கப்பட்ட காரியங்களுக்கு பொறுப்புள்ளவர்களாக செயல்களை ஒழுக்கத்துடன் செய்து,  நாம் அதற்கு பதிலளிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.

விடாமுயற்சியுடன் பொறுப்புள்ளவர்களாக இருங்கள்.

எல்லா காரியங்களும் நமக்கு உடனடியாக அணுக கூடியதாகவும் அடையக்கூடியதாகவும் இருக்காது, மற்றும் நாம் சில நேரங்களில் முன்னேறுவதற்கு விடாமுயற்சியுடன் பொறுமையாக இருப்பது அவசியம்.

அறிவுடன் துவக்க முயற்சியுடைவராக இருங்கள் (புதிய காரியங்களை கற்றுக்கொள்ளுங்கள்).

நாம் சில நேரங்களில் எளிதாக சில காரியங்களை அணுக முடிவதில்லை, மற்றும் அதற்கான வாய்ப்புகளும் நமக்கு கிடைப்பதில்லை, நாம் நம்மை நாமே முன் தள்ளி, நிறைய காரியங்களை குறித்த அறிவிடன் புதிய காரியங்களை கற்பதனால், காரியங்களை தொடங்குவது அவசியம்.

பணித்திட்டதுடன் தரிசனம் உடையவராக இருங்கள்.   

நிறைய காரியங்களை குறித்த விரிவான தொலைநோக்கு பார்வை நாம் சில காரியங்களை நீண்ட மற்றும் குறுகிய செயல் திட்டங்களாக செயல்ப்படுத்த உதவும். நாம் வெற்றிகரமான பணியை செய்ய தெளிவான தரிசனம் உடையவராக இருப்பது அவசியம்.

நேர்மறை மனப்பான்மை கொண்டிருங்கள்.

மனப்பான்மை என்பது உணர்வும் புத்தியும் சேர்ந்ததாகும். சரியான மதிப்பீடுகளுடனும், மதிப்பளவுடனும் எப்பொழுதும் நேர்மறையாக இருப்பது வாழ்வின் அனைத்து புள்ளிகளிலும் நாம் திருப்திகரமாக மகிழ்ச்சியாக இருக்க உதவும்.

நிலைத்திருக்க கூடிய வெற்றி:

வெற்றி என்பது சில நேரங்களில் பார்க்க கூடியதாக இருக்கும், சில நேரங்களில் பார்க்க கூடாததாக இருக்கும். சரியான மனப்பான்மையுடன் சரியான நோக்கத்திற்காக எடுக்கப்படும் எந்த சரியான செயலும் நீடித்திருக்கும் வெற்றியாகும்.

நாம் அனைவருக்கும் விரும்பிய இலக்குகளை அடைவதற்கு நமக்கே உரித்தான தடைகள் உள்ளது, மற்றும் இலக்குகளை அடைவதென்பது எல்லா நேரமும் சாத்தியமானதாக இருப்பதுமில்லை. நிறைய நேரங்களில், நாம் சில இலக்குகளை அடையும் போது வெற்றிகரமாக உணர்கிறோம், மற்றும் சில நேரங்களில் இலக்குகளை அடைய தவறும் பொழுது நம் கண்களை கண்ணீரினால் நிரப்பி நேர்மறையான காரியங்களை பார்க்க தவறுகிறோம். வெற்றி சில நேரங்களில் பார்க்க கூடாததாக இருக்கிறது, சில நேரங்களில் மறைந்திருக்கிறது. நம்மால் முடிக்க முடியவில்லை எனினும் சரியான மனப்பான்மையோடும் சரியான நோக்கத்தோடும் நாம் செய்வதெல்லாம் வெற்றியாகும்.

வெற்றி என்பது பெரும்பாலும், அதை அடைந்த நேரத்தில் மாத்திரம் மதிப்புள்ள ஒரு பொருள் சார்ந்த காரியமாகவே பார்க்கப்படுகிறது. மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஆர்வத்தை தரக்கூடியதாக இருப்பதில்லை. ஆனால் நீடித்திருக்க கூடிய வெற்றி என்பது எப்பொழுதும் தேவைப்படுகிற மகிழ்ச்சி, சமாதானம், அன்பு போன்ற பொருள் சாராத காரியங்களாகும்.

சில நபர்கள் உலகில் மிக பெரிய பணக்காரராக ஆவது வெற்றி என எண்ணுவர், ஆனால் வெற்றி என்பது பொருள் சார்ந்த காரியமல்ல, ஏனெனில் பொருட்கள் குறிப்பிட்ட காலமே ஆர்வம் அளிக்க கூடியதாக இருக்கும். உண்மையான வெற்றியுள்ள வாழ்வு மகிழ்ச்சிகரமானது, சமாதானமானது, அன்பு நிறைந்தது.

வெற்றி என்பது சுய மதிப்பீட்டை அடைவது மாத்திரம் அல்ல. அது ஒரு மனிதர் தம் நோக்கம் மற்றும் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து, சுய உண்மை நிலையை அடைவதாகும்.

சில மக்கள் உயரிய நிலையில் இருப்பது வெற்றி என எண்ணுவர் ஆனால் அதில் நிறைய குறைப்பாடுகள் உள்ளது. சுய மதிப்பீடு மாத்திரம் வெற்றியல்ல, ஆனால் பதவியின் மூலம் நாம் உபயோகமாக இருப்பதும், பொறுப்புகளை நிறைவேற்றுவதும் வெற்றியாகும். வெற்றி என்பது சுயத்தை அறிந்து, நோக்கத்தை புரிந்த அர்த்தமுள்ள வாழ்வதாகும்.

வெற்றி என்பது ஒரு தனிப்பட்ட நபர் தன்னுடைய சுயத்திற்கு உபயோகமாகவும் சுயத்தை திருப்திப்படுத்துவதும் மாத்திரம் அல்ல, மற்றவரின் ஆர்வங்களையும் நலனையும் கருத்தில் கொண்டு மற்றவருக்கு உபயோகமாக இருப்பதுமாகும். 

சுயத்தை சுற்றியதான வாழ்வு சுயத்தை திருப்திப்படுத்தினாலும் நிலைத்திருக்க கூடிய வெற்றியை தரக்கூடிய வாழ்வாக இருக்காது. மனிதர்களே உலகில் மிக மதிப்புமிக்க வளங்களாக இருக்கிறார்கள், மற்றவர்களை சுய லாபத்திற்காக சுரண்டுவது, நமக்கே விரோதமாக எந்த நேரத்திலும் மாறலாம். எப்பொழுது ஒற்றுமை இருக்கிறதோ, அப்பொழுது ஒருவருக்கு ஒருவர் உண்மையிருக்கும், ஒருவர் மற்றவரின் ஆர்வங்களையும் நலனையும் கருத்தில் கொள்வர்.

வாழ்வின் உண்மையான நலன்கள்:

அன்பு

உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் ஏக்கமும், மற்றவரை நேசிப்பதும் மற்றவரால் நேசிக்கப்படுவதுமாகிய சேர்ந்திருத்தலுக்கான உணர்வாகும். நம் வாழ்வில் நிறைய கஷ்டங்களை அடைந்தாலும், நாம் வெற்றிகரமாக உணர அன்பு என்பது மதிப்புமிக்க உணர்வாகும்.

மகிழ்ச்சி

அனைவருக்கும் பாடுகள் உள்ளது, மற்றும் நாம் ஒவ்வொருவரும் நமக்கே உரித்தான கஷ்டங்களை சமாளிக்க வேண்டியுள்ளது. அதை தவிர்க்க முடியாமல் இருப்பினும், நாம் சரியாக இருக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கலாம், தற்போதைய கஷ்டமான வாழ்க்கை சூழல்களால் கண்களை கண்ணீரினால் மறைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறலாம்.

சமாதானம்

உலகில் அனைத்து மக்களும் எதிர்நோக்கி காத்திருக்கும் பெரிய காரியம் சமாதானம். நாம் நிறைய கல்வியறிவோடு இருந்தாலும், நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட்டாலும், நம்முடைய தலைகனமும் சுயநலமும் நம்மை திருப்தியின்மை ஆக்கும். போதுமென்றிருப்பது நமக்கு சமாதானம் அளிக்கும், வெற்றியுள்ளவர்களாக்கும்.

பொறுமை

சில குழப்பங்களினாலும், காரியங்களை அவசரமாக செய்வதாலும் நாம் நிறைய காரியங்களை தவற விடுகிறோம். இழந்துவிடுவோம் என்ற பயத்தினால், நாம் மிக குறுகிய சிந்தனை உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் பொறுமையாக இருப்பது நீண்ட கால வெற்றியை பெற, சில நேரங்களில் காரியங்களை இழக்கவும், மேம்பட்ட காரியங்களை பெறவும், சில வேளைகளில் சிறந்த காரியங்களை பெறவும் உதவும்.

தயவு

நம் அனைவருக்கும் குறைப்பாடுகளும் வேறுபாடுகளும் இருந்தாலும், மற்றவர்கள் நம்மை ஏற்க வேண்டும் என விரும்புகிறோம். தயவாக இருக்கும் தன்மை, நாம் மற்றவர்களை மதிக்கவும், மற்ற மனிதர்களின் இதயத்தை வெல்லவும் உதவும். அது மற்றவர்களை ஏற்றுக்கொள்ளவும், நம்முடைய வாழ்வின் வெற்றியை பகிரவும் கூட உதவும்.

நற்குணம்  

மனிதர்களே நம்முடைய வாழ்வில் மிக பெரிய வளங்கள், நற்குணம் நாம் மற்றவர்களோடு சேர, அனைவரும் சேர்ந்து வெற்றியுடன் இருக்க உதவும்.

உண்மைத்தன்மை

நாம் ஒருவரோடொருவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ சேர்ந்திருக்கிறோம், நாம் காரியங்களை பரிமாறிக்கொள்வதால் ஒருவருக்கொருவர் பொறுப்பாளிகளாகவும் இருக்கிறோம். ஒருவரோடொருவர் நாம் வெற்றியாளர்களாக இருக்க உண்மைத்தன்மை மிகவும் அவசியம்.

சாந்தத்தன்மை

பெருமை வீழ்வதற்கான அறிகுறி என்று ஒரு பழமொழி உண்டு, சாந்தத்தன்மை நாம் வெற்றியுள்ள வாழ்க்கையுடன் திருப்தியாக இருக்க, சுயத்தை தெரிந்துக்கொள்ள, மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க உதவும்.

சுய கட்டுப்பாடு

நாம் யோசிக்கும் அனைத்தையும் நம்மால் செயல்படுத்த முடியாது, நாம் உணரும் அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது, ஏனெனில் நாம் ஒரு சமூக வலைதளத்தில் இருக்கிறோம், அது மதிப்பளவுகளையும் ஒரு சில எதிர்ப்பார்ப்பையும் கொண்டுள்ளது. சரியான மதிப்பீடுகளுடன், ஒழுக்கங்களை  உடையவர்களாக இருக்க, நாம் சுய கட்டுப்பாடு கொண்டிருப்பது அவசியம். 

தொகுப்புரை:

வெற்றி என்பது மனிதர்களுடைய பார்வையில் ஒரு நபரின் பொருள் சார்ந்த காரியங்களின் சேகரிப்பாக இருக்கலாம், ஆனால் ஒரு நபருக்கு வெற்றி என்பது பொருள் சாராத காரியங்களான வியக்கத்தக்க குணம், நடத்தை, செயல் போன்றவற்றை பெறுவதாகும். ஏனெனில் அனைத்து மதிப்புள்ள விரும்பத்தக்க  பொருள் சார்ந்த காரியங்களையும் ஒரு நபர் அடைந்த பிறகு, குறிப்பிட்ட நேரமே அது மகிழ்ச்சியை அளிக்கும், தற்காலிக திருப்தியே தரும். ஆனால் மதிப்புமிக்க பொருள் சாராத காரியங்கள் அனைத்தும் வாழ்வு முழுவதும் நம்மோடிருக்கும்.


Comments