Posts

Showing posts from March, 2021

2. ஆள்களுக்கிடையிலான திறன்கள்

2.       ஆள்களுக்கிடையிலான திறன்கள்   ( ஒருவரோடொருவர் சிறந்த முறையில் தொடர்புக் கொள்ள உதவும் திறன் ) இந்த உலகில் எவராலும் எல்லாவற்றையும் , மற்ற மனிதர்களையும்   விடுத்து தனிமையாக இருக்க முடியாது . சிலர் தங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள மனிதர்களால் ஏற்பட்ட கசப்பினால் கஷ்டங்களினால் அவ்வாறு கூறினாலும் , அவர்களால் அதைச்               செய்ய முடியாது . நாம் சக மனிதர்கள் இல்லாமல் காரியங்களை வெளிப்படுத்த இயலாத படி , சிறப்பம்சமும் தன்மையும் உடையவர்கள் . நாம் ஒவ்வொருவரும் நிறைய மனிதர்களைத் தினந்தோற வாழ்வில் கடந்து வருகிறோம் , எனினும் நாம் அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்துக் கொள்வதில்லை . நாம் தற்காலிக காரியத்திற்கும் செயலுக்கும் மிகவும் மேலோட்டமாக உறவுக் கொள்கிறோம் , தொடர்ந்து பழகுபவர்களிடம் சாதாரண முறையில் நெருக்கமான உறவு கொள்கிறோம் . நாம் வாழ்வு முழுவதும் தொடரக்கூடிய உறவுகளைக் குடும்பத்தினர் , நண்பர்கள்கள் , உறவினர்கள் மூலம் பெறுகிறோம் . மற்றும் மேலோட்டமான உறவினை கல்வி கூடங்கள் , வேலையிடம் , சந்தை , போக்கு...