7. நேர்மறை மனப்பான்மை
7. நேர்மறை மனப்பான்மை
(திட்டத்தை/ செயலைச் சமாதானமாகவும் அர்த்தத்துடனும்
தொடர உதவும் ஆற்றல்)
மனப்பான்மை
மனப்பான்மை
என்பது நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் பாதிப்பதாகும்
சிந்தனையும் அதனோடு கூடச் செயலும்
நம்முடைய மனப்பான்மையின் வெளிப்பாடாக உள்ளது. மனப்பான்மை என்பது மனம்
சார்ந்ததாயினும், அது
மனம் மற்றும் உடல் சார்ந்த மற்ற காரியங்களையும் பாதிப்பதாய் உள்ளது. நாம் செய்யும்,
செய்ய விரும்பும் அனைத்து
காரியங்களையும் மனப்பான்மை பாதிக்கிறது, ஏனெனில் அது நம் சிந்தனைக்கு அடிப்படையாய் உள்ளது.
மனப்பான்மை
என்பது ஏதாவது காரியத்தைக் குறித்த நம்முடைய சிந்தனைகள் அல்லது உணர்வுகள்
இருக்கும் நிலையாகும்.
நம்முடைய சூழ்நிலைகளையும் நம்முடைய பின்னணியையும் பொருத்து நாம்
ஒவ்வொருவருக்கும் ஒரு சில யோசனைகள் இருக்கும். சில மதிப்பீடுகள் நம்முள்
மறைந்திருக்கும், அது
நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியாக இருக்கவும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துக்கொள்ள உதவும். மனப்பான்மை என்பது ஒரு காரியத்தைக்
குறித்த நம்முடைய சிந்தனை மற்றும் உணர்வுகளின் நிலையாகும்.
அது மரபு வழியாய் உள்வாங்கப்படுவதில்லை, ஒரு நபரின் தேர்வுகளால் பெற்றுக்கொள்ளப்படுகிறது
ஒரு நபரின் சிந்தனை மற்றும்
உணர்வுகளின் நிலைகள் அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் பின்னணிகளால்
பாதிக்கப்பட்டாலும், தலைமுறைகளிலிருந்து உள்வாங்கப்படுவதில்லை. மனப்பான்மையை நம்முடைய விருப்பத் தேர்வுகளால், விருப்பத்
தேர்வுகளிலிருந்து நாம் எடுக்கும்
தீர்மானங்களால் பெற முடியும்.
மனப்பான்மையின் அவசியம்
மனப்பான்மை
அனைத்து மனிதர்களுக்கும் அவசியமாகும் ஏனெனில் உணர்வது மற்றும் சிந்திப்பதுதான் ஒரு
மனிதனை மற்ற உயிரனங்களிலிருந்து வேறுபடுத்தும்.
நாம் சிந்திக்கும் காரியங்களுக்கும்
அதனால் உண்டாகும் செயலுக்கும் மனப்பான்மையே
அடித்தளம். உலகில் உள்ள மற்ற உயிரினங்களையும் மனிதர்களையும் வேறுப்படுத்துவதற்கு
மனப்பான்மை அவசியமாகும். மனப்பான்மையை பொறுத்தே நாம் நம் உணர்வுகளையும் அறிவையும் சிறந்த
முறையில் உபயோகிக்க முடியும்.
ஒரு நபரின் அனைத்து நடக்கைகளும், பழக்கங்களும், குணங்களும் அவரின் மனப்பான்மையையே சார்ந்திருக்கிறது.
செயல்கள் சிந்தனையின் வெளிப்பாடாயும், சிந்தனைகள் மனப்பான்மையின் வெளிப்பாடாயும் இருக்கின்றபடியால், எல்லா நடக்கைகளும் பழக்கங்களும்
குணங்களும் ஒரு நபரின் மனப்பான்மையை வலுவாகச் சார்ந்திருக்கின்றது.
ஒரு நபரின் தேர்வுகள் மனப்பான்மையை பொருத்து அவரை பாதிக்கிறது.
ஒரு சிறிய காரியத்திலிருந்து பெரிய
காரியம் வரை, அனைவருக்கும்
வெவ்வேறு விருப்பத் தேர்வுகள் உள்ளன. எல்லா விருப்பத்தேர்வுகளும் அனைவருக்கும் ஆர்வம் தரக்கூடியதாக
இருக்காது, ஏனெனில்
ஒவ்வொருக்கும் வெவ்வேறு ஆர்வமும் விருப்பமும் உள்ளது. நாம் என்ன தேர்ந்தெடுக்கிறோம், எவ்வாறு விருப்பத்தேர்வுகளிலிருந்து
முடிவெடுக்கிறோம் என்பது நம்முடைய மனப்பான்மையை சார்ந்திருக்கிறது.
எதிர்மறை மனப்பான்மையின் விளைவுகள்
ஒரு
நபரின் ஒவ்வொரு செயலும் அவர் மனப்பான்மையின் வெளிப்பாடாகும். ஒரு நபர் எதிர்மறை மனப்பான்மையை
கொண்டிருக்கும் பொழுது, அவரின் செயல்கள் விரும்பக்கூடிய விதத்தில் இருக்காது.
உணர்வியல் வெளிப்பாடுகளெல்லாம்
உள்ளிருக்கும் நினைவுகளால் தான், எனவே நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் ஒவ்வொரு காரியங்களும் நம்
மனப்பான்மையின் வெளிப்பாடாகும். நமது மனப்பான்மையை மெருகேற்றவும் சரியான மதிப்பீடுகள், சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகள் கொள்ளவும், நாம் எந்த முயற்சியும் செய்யாத பொழுது
நமது மனப்பான்மை எதிர்மறையாய் இருக்கும், நம்முடைய செயல்களும் விரும்பத் தகாதவையாகும்.
ஒரு
நபரின் எதிர்மறை மனப்பான்மை அவரைச் செயல்படமுடியாதவராகவோ அல்லது அதிகமாய் செயல்படுபவராகவோ
ஆக்கும், அவை இரண்டுமே அழிவுண்டாக்கும்
எதிர்மறை மனப்பான்மை பெரும்பாலும் சுயத்தை மையப்படுத்தும் மற்றும் ஒரு நபர் தமது சமூக பொருளாதார
காரணிகளைச் சுயத்தை திருப்திப்படுத்த பயன்படுத்துவர். அது ஒரு நபரை முற்றிலும் செயல்படாதவராகவோ
அதிகம் செயல்படுபவராகவோ ஆக்கும், இரண்டும் ஏதாவது வழியில் அழிவை உண்டாக்கும்.
எதிர்மறை மனப்பான்மையின் கிரயம்
எதிர்மறை மனப்பான்மை பலவீனமான உறவுகளை
விளைவிக்கும்
எதிர்மறையாய் இருக்கும் மனப்பான்மை ஒரு
நபரின் நடக்கை மற்றும் செயலில் குறைப்பாட்டை ஏற்படுத்தும், அது சமூகத்தில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படாததாய்
இருக்கும். எனவே அது பலவீனமான ஆரோக்கியமற்ற உறவுகளை ஏற்படுத்தும்.
அது
நொறுங்கிய இதயத்தை உண்டாக்கும்
எதிர்மறை மனப்பான்மை சுயத்தை மாத்திரம்
கருத்தில் கொண்டு, சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படாத சிந்தனைகளின் தொகுப்பைக்
கொண்டிருக்கும். ஒரு நபர் ஏற்றார் போல நடக்காததால், அவர்களின் உணர்வுகள் சமநிலையில் இருக்காது. அதுவே ஒரு சமயத்தில் நொறுங்கிய
இதயத்தை ஏற்படுத்தும்.
எதிர்மறை
மனப்பான்மை ஒரு நபரைச் சுற்றி, திரும்பவும் பெற முடியாத, அல்லது மாற்றியமைப்பதற்கு கடினமான மாற்றத்தை உண்டாக்க கூடும்.
எதிர்மறை மனப்பான்மை ஒரு நபரைச் சரியான சிந்தனைகளும்
உணர்வுகளுமின்றி ஏற்பில்லாதவாறு நடக்க செய்யும், அது தீங்கானதாகவும் இருக்கலாம். மற்றும் திரும்பவும் பெற முடியாததும், சாதாரண நிலைக்கு எளிதாக வர முடியாததுமான
கடினமான மாற்றத்தை உண்டாக்க செய்யும்.
மனப்பான்மையை மாற்றியமைத்தல்
தரிசனத்தை, இலக்குகளை, திட்டங்களைச் சமாதானத்துடனும், சந்தோஷமான விதத்திலும் அடைவதற்கு, மனப்பான்மையை மாற்றியமைப்பது அவசியமாகும்.
அனைத்து மக்களும் தாங்கள் சென்றடைய சுய திட்டங்களையும்
நோக்கத்தையும் கொண்டுள்ளனர். ஒரு நிலையை அடைவதற்கு வெறுமனே சில காரியங்களைச் செய்வது என்பது, நாம் திரும்பிப் பார்க்கும் போது
மதிப்புள்ளதாக இருக்காது, ஒரு நபர் முழுமையான வெற்றிபெறுவதற்கு இதயத்தில் சந்தோஷமும்
சமாதானமும் அவசியமாகும். நமது தரிசனத்தை ஆரோக்கியமான முறையில் அடைவதற்கு, நேர்மறை மனப்பான்மை அவசியமாகும், அதற்கு நம்முடைய மனப்பான்மையை வாழ்வின்
பல நேரங்களில் சரியான விதத்தில் மாற்றியமைப்பது அவசியமாகும்.
நமது மனப்பான்மை ஏற்கனவே நேர்மறையானதாகவோ
எதிர்மறையானதாகவோ, சில நேரங்களில் மாறுவதாகவோ இருக்கலாம். நேர்மறையான பகுத்தறிவுள்ள சிந்தனைகளால்
பெறக்கூடிய நேர்மறை மனப்பான்மையை நாம் அனைவரும் பெறுவதற்கும் அதில் நிலைத்திருப்பதற்கும் ஆவலாய் இருக்க வேண்டும்.
மனப்பான்மை அனைத்து நேரங்களிலும் நிலையாய்
இருப்பதில்லை, அது நாம் சந்திக்கும் சூழ்நிலைகளாலும் நாம் பெற்றிருக்கும்
வெளிப்பாட்டின் படியும் வலிமையாகப் பாதிக்கப்படுகிறது. சில கடுமையான உணர்வுப்பூர்வமான
காரியங்கள் ஏற்படும் போது இதயத்திலும் மனதிலும்
சில மாற்றங்கள் உண்டாகும். அது நாம் எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறோமோ, அப்படியாகச் செயல்பட
முடியாதவர்களாக்கும். சிந்தனைகளையும் உணர்வுகளையும் சரியாகக் கையாண்டு, மனப்பான்மையை மாற்றியமைத்து நேர்மறை
மனப்பான்மையில் நிலைத்திருக்க, நாம் ஒவ்வொருவரும் விருப்பம் கொள்வது அவசியமாகும்.
நேர்மறை மனப்பான்மையின் முக்கியத்துவம்.
ஒரு
நபரின் 15% தொழில்நுட்ப அறிவு மாத்திரம் தான் அவர்களின் வெற்றிக்குப் பொறுப்பாக
உள்ளது, மீதமுள்ள சதவீதம் அனைத்தும் அவர்களின் மனப்பான்மையை பொறுத்துள்ளது.
மனப்பான்மை ஒரு நபரின் சிந்தனைகளில்
பெரிதும் உதவும் தன்மையாகும். ஒரு நபர் நிறைய அறிவை பெற்றிருந்தாலும், அதை எப்படி, ஏன், எங்குப் பயன்படுத்த வேண்டுமெனத்
தெரியவில்லை எனில், அது பெரிய அளவில் உபயோகப்படாது. ஒரு நபரின் தொழில்நுட்ப அறிவு அவரின்
வெற்றிக்கு மிகக் குறுகிய அளவே காரணமாகிறது, ஆனால் அவரின் மனப்பான்மை அவருடைய வெற்றிக்குப் பெரிய பங்களிப்பு
தருகிறது. ஒரு நபர் சிறந்த மனப்பான்மையை பெற்றிருக்கும் பொழுது, அவர் நிர்ணயிக்கின்ற பேரறிவையும் பெற
முடியும்.
நமக்கு வெளியில் நடக்கும் காரியங்களை நம்மால்
கட்டுப்படுத்த முடியாது ஆனால் நாம் எப்படி அதற்கு உத்தரவு அளிக்கிறோம் என்பதை
நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.
நம்மைச் சுற்றியுள்ள சில சூழ்நிலைகளை
நம்மால் மாற்றியமைக்க முடியாது, ஏனெனில் அது பல காரணிகளைச் சார்ந்திருக்கும். எனவே நாம் நமக்கு வெளியில் நடக்கும்
காரியங்களுக்குப் பொறுப்பல்ல, எனினும் வெளியில் நடக்கும் காரியங்களுக்கு நாம் எப்படி உத்தரவு
அளிக்கிறோம் என்பதற்கு நிச்சயம் நாமே பொறுப்பு. நேர்மறை மனப்பான்மை நேர்மறையான மறுஉத்தரவுகளுக்கு
உதவும்.
நேர்மறை மனப்பான்மை ஒரு நபர் எல்லாவற்றையும்
நேர்மறை சிந்தனைகளோடு கையாள உதவுகிறது, மற்றும் சரியான சிந்தனைகளைச் சரியான
நேரத்தில் சரியான செயல்களாக மாற்றவும் உதவுகிறது.
எல்லா காரியங்களிலும், எல்லா மக்களிடத்தும் எப்பொழுதும்
வேறுபாடுகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் தங்களை சுற்றியுள்ள வெவ்வேறு தேர்வுகளில் சுய
விருப்பங்கள் உள்ளன. நேர்மறை சிந்தனைகளோடு கூட உள்ள நேர்மறை மனப்பான்மை, எண்ணங்களிலும் யோசனைகளிலும் உள்ள
வேறுபாடுகளைக் கையாள உதவும், அதன் மூலம் நாம் மற்றவர்களை ஏற்கவும் நம்மை நாமே அங்கீகரிக்கவும் முடியும். மற்றவர்களை ஏற்பது மாத்திரம் இல்லாமல், சரியான காரியங்களை யோசிக்கவும், சரியான காரியங்களைச் சரியான நேரத்தில்
செய்யவும் நேர்மறை சிந்தனை உதவும்.
நேர்மறை மனப்பான்மையை மேம்படுத்தல்
நீங்கள்
ஏற்கனவே பளுவுடன் இருக்கும் பொழுது, மேலும் உங்களைப் பாரப்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்களால் சில காரியங்களைச் செய்ய
முடிந்தாலும், உங்களுக்கு அதற்கான நேரம் இல்லை.
நேர்மறை மனப்பான்மை ஒரு நபர் தன்னை பற்றி
மாத்திரம் சிந்தியாமல் மற்றவர்களைக் குறித்தும் கருத்தில் கொள்ள உதவுகிறது. நேர்மறை மனப்பான்மை நமக்குத் தெரியாத
காரியங்களைக் கூடக் கற்றுக்கொண்டு, கையாள தன்னம்பிக்கை அளிக்கிறது. அதே சமயம் நாம் நமது நேரம், பொருள், தாலந்துகளை ஆராய்வது, பளுயடையாமல் இருக்க உதவும். தன்னம்பிக்கை இருப்பினும், அது தலைகனமாக மாறாமல் இருக்க வேண்டும். ஒரு நபரால் நிறைய காரியங்களைச் செய்ய
முடிந்தாலும், எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் பொழுது போதிய நேரமும் வளமும் இல்லாது சில
காரியங்களை நிறைவேற்ற முடியாமல் வெட்கமடைய கூடிய சூழல் உண்டாகலாம். அவ்வாறு
ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
உங்களுடைய
நம்பிக்கையை இழக்கக்கூடிய வகையில் மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதிருங்கள்.
ஒவ்வொருவரும் மற்றவர் தங்களை குறித்து
சொல்வதை தவிர்த்து, தங்களை தாங்களே ஏற்க வேண்டும். எந்தவொரு ஏற்றத் தாழ்வும் இல்லாமல் அனைவரிடத்திலும் உள்ள தனித்துவம்
மதிக்கப்படுவது அவசியம். நம்மிடத்திலோ மற்றவரிடத்திலோ உள்ள சில நேர்மறையான காரியங்களை
வியப்பதும், குறைப்பாடுகளை
சரி செய்வதும் நல்லது. தேவை இல்லாமல் மற்றவர்களோடு ஒப்பிடுவது, நம்மைத் தாழ்ந்த அல்லது மிக உயர்ந்த மனப்பான்மையோடு இருக்க செய்யும், இரண்டுமே ஆரோக்கியமற்றது, அது நம்முடைய மனப்பான்மையை பாதிக்கும்.
உங்களுடைய
திறன்களுக்கும், ஆர்வங்களுக்கும் ஏற்றவாறு இலக்குகளை நிர்ணயியுங்கள்
ஆயத்தமாகி, திட்டமிட்டு, நாம் செய்கின்ற காரியங்களில் கவனமாய் இருப்பது
அவசியமாகும். நாம் ஆயத்தமாக இருக்கும் பொழுதுதான், நமது நோக்கங்களை அறிந்து, செய்கின்ற காரியங்களைக் குறித்து
சிந்திப்போம். நம்முடைய திறன்களையும் ஆர்வங்களையும் அறிந்து இலக்குகளை நிர்ணயிப்பது, அதைச் சரியான மதிப்பீடுகளோடும், நேர்மறை மனப்பான்மையோடும் அடைய உதவும், அதில் நிலைத்திருக்கவும் உதவும்.
உங்களுக்கு
ஆர்வம் தரக்கூடிய காரியங்களில் அதிக நேரம் செலவளியுங்கள்,
அதே நேரம் உங்களுக்கு ஆர்வம் தராத
காரியங்களாயினும், அவசியமான காரியங்களில் சிறிது நேரமாகிலும் செலவழியுங்கள்.
ஒரு நபர் தம்மையே மேம்படுத்தவும், கட்டவும் நேர்மறை மனப்பான்மை உதவுகிறது. சென்றிராத ஒரு இடத்திற்கு போகவும், பார்த்திராத ஒரு நிலையைச் சென்றடையவும்
நேர்மறை மனப்பான்மை உதவுகிறது. நேர்மறை மனப்பான்மை நாம் விருப்பமாயிருக்கும் காரியங்களில் நமது
நேரத்தைச் செலவு செய்து, அதில் சிறந்து விளங்க உதவும். அதே நேரம் நம்மைக் கட்டக்கூடிய புதிய காரியங்களைக் கற்பது அவசியம், அது நிறைய காரியங்களைத்
தொடர்புப்படுத்தி பார்க்க உதவும். இரண்டுமே ஒரு நபரின் நேர்மறை மனப்பான்மையை வளர்க்க உதவும்.
நம்மைப்
போல் உள்ள சக மனிதர்களால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு காரியமும் நம்முடைய அறிவிற்கும், புரிந்துக்கொள்ளுதலுக்கும்
அப்பாற்பட்டதல்ல. ஆனால் காரியங்களைப் புரிந்துக்கொள்வதற்கு எடுக்கப்படும் நேரம்
நபருக்கு நபர் அவர்களுடைய அனுபவத்திற்கும் எதிர்ப்பார்ப்பிற்கும் ஏற்றப்படி மாறும்.
சில சமயங்களில் நாம் காரியங்களை
முயன்று பார்த்து நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம், இன்னும் கொஞ்சம் முயல்வது நிச்சயம் அறிவையும்
புரிந்துக்கொள்ளுதலையும் பெற உதவும் என்பதை உணர தவறுகிறோம். கண்டுப்பிடிக்கப்பட்ட உருவாக்கப்பட்ட
அனைத்தும் நம்மைப் போல் உள்ள சக மனிதர்களாலேயே உள்ளது, அவர்கள் மிக உயரிய இடத்திலிருந்து வந்தவர்களல்ல. நாம் எப்படியாக நம்முடைய
மனப்பான்மையையும், மனதையும் உபயோகிக்கிறோம் என்பது ஒரு பெரிய வேறுபாட்டை உண்டாக்குகிறது. அனைவராலும் அனைத்திலும் சிறந்து விளங்க
முடியும், ஆனால் ஒவ்வொருவரும் தமக்கிருக்கும்
அனுபவத்தின் வெளிப்பாட்டின் அடிப்படையில் வெவ்வேறு கால அளவை கொள்வர்.
காரியங்களைத்
தொடர்ச்சியாகப் பயிற்சி செய்வது அதில் சிறக்க செய்யும். அதில் சிறந்து விளங்க எடுக்கும்
காலத்தைக் குறித்து கவலைக்கொள்ளாதிருங்கள், நபருக்கு நபர் அது மாறுபடும்.
நாம் ஒவ்வொருவருக்கும் நமக்குரிய
பலங்களும் பலவீனங்களும் உள்ளன. நம்முடைய பலங்கள் மற்றவருக்குப் பலவீனமாக இருக்கலாம், நம்முடைய பலவீனங்கள் மற்றவருக்குப்
பலங்களாக இருக்கலாம். நாம் ஒவ்வொருவருக்கும் நமக்குரிய திறன்களும் ஆற்றல்களும் உள்ளன, எனினும் சில காரியங்களைப் பொறுமையுடன்
பயிற்சி செய்யும் பொழுது நாம் விரும்பிய நிலையை அடைந்து சிறந்து விளங்க முடியும். நிர்ணயித்த ஒரு இலக்கை அடைய செலவாகும்
நேரத்தைக் குறித்து கவலைக்கொள்ள அவசியமில்லை, ஆனால் தன்னம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் அதை நோக்கி முன்னேறுவது
அவசியம், அதன் மூலம் அதை வாழ்வின் ஒரு சமயத்தில்
சென்றடைய முடியும்.
தினந்தோறும்
புதிய காரியங்களைக் கற்பது, நீடிய காலத்தில் துன்புறுதல் இல்லாமல் நிறைய காரியங்களைக் கற்க உதவும்.
நம்மைச் சுற்றியுள்ள நிறைய காரியங்களைக்
குறித்த அறிவு நிறைய விருப்பத்தேர்வுகளை கொண்டிருக்க உதவும். ஒரு சில புதிய காரியங்களையாவது
தினந்தோறும் கற்பது, தினந்தோற வாழ்விற்கு பங்களிக்கும், அதுவே கால போக்கில் நிறைய அறிவை பெற்று தரும். தன்னம்பிக்கையோடும் நேர்மறை
மனப்பான்மையோடும் ஒரு சில படிகள் நாம் முன்னெடுத்து வைக்கவும் முன்னேரவும் நிச்சயம்
அது உதவும்.
தேவையான
நேரத்தில் உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்ளுங்கள்
மனிதர்களாக நாம் சமூகத்திற்கு
உட்பட்டிருக்கிறோம், மற்றும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு ஊக்கம் தேவைப்படுகிறது. எல்லா நேரமும் மற்றவர்கள் நம்மோடு இருக்க
வேண்டுமென நாம் எதிர்பார்க்க முடியாது, அது சாத்தியமும் இல்லை. எனவே நாம் அனைவரும் முன்னேற, வாழ்வின் சில நேரங்களிலாவது சுய- ஊக்கப்படுதல் அவசியமாகும்.
உங்களைவிடக்
குறைந்த வளங்கள் உள்ளவர்களுக்கு உதவுங்கள், அதன் மூலம் உங்கள் மனப்பான்மையை மேம்படுத்த முடியும்.
நாம் செய்கின்ற காரியங்களை மற்றவர்கள், நெருங்கியவர்களாயினும் ஏற்றுக்கொள்ள
வேண்டுமெனவும், அங்கீகரிக்க
வேண்டுமெனவும், புகழ
வேண்டுமெனவும் எண்ணுகிறோம். உங்களைவிடக் குறைந்த வளங்கள் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவும் பொழுது
சமூக உறவுகளை மேம்படுத்தி, மற்றவர்களை ஏற்கவும், நம்மைப் போலப் பிறரை நேசிக்கவும் முடியும். மற்றும் அது நம்மில் நேர்மறை
மனப்பான்மையை பெருக்கவும் வளர்க்கவும் உதவும்.
தோல்விக்கு உத்தரவு அளித்தல்:
“நான் ஒரு பெரிய முட்டாள்! திரும்பவும் அதை முயற்சிக்க மாட்டேன்! அல்லது நான் இந்த அனுபவத்திலிருந்து
என்ன கற்க முடியும்?”
ஒரு புதிய காரியத்தை முயற்சித்தல், ஒரு செயல் புரிதல், அல்லது ஒரு காரியத்தில் ஈடுபடுதல்
ஆகிவற்றில் தோல்வி ஏற்படும் பொழுது பெரும்பாலும் இரண்டு வகையில் அதற்குப் பதில்
கொடுக்கிறோம். ஒரு வகையான மறுஉத்தரவில் அந்தச் சூழ்நிலையைத் தனியாகப் பார்த்து, அதைத் திரும்பவும் முயற்சிப்பது
உபயோகமற்றது என எண்ணுகிறோம். மற்ற மறுஉத்தரவில் அதில் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு, வருங்காலத்தில் அதைச் செயல்படுத்த
காரியங்களை எடுத்துக்கொள்கிறோம்.
இடையூறுகள்
தோல்விகள்
தடுமாற செய்யும். ஆனால் அதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல், கற்பதற்கான நிகழ்வாகப் பார்க்கலாம்.
இந்த உலகில் பெரும்பாலானோர் தாங்கள்
நிர்ணயித்த இலக்கை முதல் முயற்சியில் செய்து முடிக்கவில்லை. ஒரு சில காரியத்தில் நாம் முதல்
முயற்சியில் வெற்றி பெற்றால், அது நிறைய வெளிபாடுகளும் அனுபவங்களும் இல்லாததாகவும் குறுகியதாகவுமே
இருக்கும். நிறைய முயற்சிகளால் கிடைக்கப்படும் எதிர்ப்பார்புடைய வெற்றி நிறைய
கற்றலை கொண்டு பெரியதாக இருக்கும். தோல்விகள் நிறைய தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அதை நாம் நேர்மறை மனப்பான்மையோடு
கற்றலுக்கான ஒரு செயலாகப் பார்க்கலாம்.
நாம்
99 முறை ஒரு காரியத்தை முயற்சித்து வெறுப்பாகி இருக்கலாம், ஆனால் 100வது முறை நாம் முயற்சியைத் தொடரவில்லை
எனில், அதே நேரத்தில் நாம் தோற்கிறோம்.
ஒரு குறித்த இலக்கைச் சென்றடைவது
மாத்திரம் வெற்றி இல்லை, ஒரு காரியத்தை அடைய முயற்சிக்கும் ஒவ்வொரு செயல்முறையும் வெற்றி
ஆகும். ஒரு
குறிப்பிட்ட விதத்தில் காரியங்கள் நடைபெறவில்லை எனில் வேறு விதத்தில் அதைக்
கையாள்வது அவசியமாகும். காரியங்களை யோசிப்பதும் முயற்சிப்பதும் சகிப்பின்மையை ஏற்படுத்தும், ஆனால் நாம் தொடர்ந்து முயற்சிக்கும்
பொழுதுதான் நாம் நிர்ணயித்த இலக்கை நம்மால் அடைய முடியும். நாம் காரியங்களை முயிற்சிக்க தவறும்
பொழுது, அதே நேரத்தில் தோல்வியடைகிறோம், அதனால் மனப்பான்மையும்
பாதிக்கப்படுகிறது.
தவறுகள்
நடக்கலாம் ஆனால் அதிலிருந்து கற்றுக்கொண்டு, கூடுமானவரை திரும்பவும் அதைச் செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
மனிதர்களாகிய நாம் முழுதும்
நேர்த்தியானவர்களல்ல, ஒவ்வொருவரும் நமக்கே உரித்தான குறைப்பாடுகளை கொண்டுள்ளோம். நாம் அறிந்தோ அறியாமலோ நிறைய தவறுகளைச்
செய்கிறோம். செய்த தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்வது சரியல்ல, மற்றும் நம்முடைய தவறுகளிலிருந்து
கற்று அதை எந்தச் சூழலிலும் தொடராதிருப்பது நம்முடைய நேர்மறை மனப்பான்மையை
வளர்க்கும்.
நேர்மறை மனப்பான்மையின் பயன்கள்:
நேர்மறை
மனப்பான்மை ஒரு நபர் தன்ளை சுற்றியுள்ள மற்றவர்களோடு நல்ல முறையில் உறவு கொள்ள
உதவுகிறது.
மனப்பான்மை சரியான முறையில் இருக்கும்
பொழுது, ஆட்களுக்கிடையிலான உறவுகள் சிறந்த
முறையில் வஞ்சனையில்லாதிருக்கும். எப்பொழுது ஒரு நபர் மற்றவரை அவர்களின் குறைகள் மற்றும் இயலாமையின்
நிமித்தமும் ஏற்கின்றனரோ, அப்பொழுது ஆரோக்கியமான உறவுகள் இருக்கும். ஒரு நபர் தவறாக இருப்பினும் அவரோடு
நல்ல முறையிலும் வியக்கத் தக்க முறையிலும் தொடர்புக்கொள்ள நேர்மறை மனப்பான்மை உதவும்.
நேர்மறை
மனப்பான்மையுடைய நபர் ஒரு தவறிற்காகவோ அல்லது பிரச்சனைக்காகவோ சோர்ந்துப்போகாமல், அதை எப்பொழுதும் தீர்க்க முயல்வார்.
நேர்மறை மனப்பான்மையுடைய நபர் ஒரு தவறு
அல்லது பிரச்சனைக்கான பொறுப்பை உணர்ந்திருப்பதால், தொடர்ந்து வருந்திச் சோகத்தில் மூழ்கமாட்டார்கள். நேர்மறை மனப்பான்மையுள்ள நபர் ஏற்கனவே
நடந்த ஒரு தவறை சரிசெய்வார், பிரச்சனைகளைத் தீர்க்க முயல்வார்.
நேர்மறை
மனப்பான்மையுள்ள நபர் சமநிலையுடன் கூடிய திருப்தியான, சந்தோஷமான, சமாதானமான வாழ்வை மேற்கொள்வர்.
நேர்மறை மனப்பான்மையுள்ள நபர் ஒன்றும்
செய்யாமல் இருக்க மாட்டார்கள், தங்களுடைய மேம்பாட்டிற்கோ மற்றவர் மேம்பாட்டிற்கோ ஏதாவது ஒரு
காரியத்தில் ஈடுப்படுத்திக்கொள்வர். புதிய காரியங்களைக் கற்று தங்கள் அறிவையும்,
விருப்பத்தேர்வுகளையும் அதிகரிப்பர். அதனால் நேர்மறை மனப்பான்மையுள்ள நபர்
எதினாலும் தடைப்படாமல் திருப்தியான, சந்தோஷமான, சமாதானமான வாழ்வை மேற்க்கொள்வர், ஏனெனில் காரியங்களை எப்படி சமநிலைப்படுத்த வேண்டுமென அவர்களுக்குத்
தெரியும்.
நேர்மறை
மனப்பான்மையுள்ள நபர் சுயநலமற்றவராய், பகுதறிபவராய், சாதிப்பவராய் எப்பொழுதும் அழகான வாழ்வை கொள்வர்.
தங்களை மாத்திரம் திருப்திப் படுத்திக்கொள்வது
மனிதர்கள் அனைவரின் வாழ்வினை தன்னிறைவுச்செய்யாது என்பதை நேர்மறை மனப்பான்மையுள்ள
நபர் அறிந்தவர், ஏனெனில்
அது ஆக்கப்பூர்வமானதாகவும் காரணமிக்கதாகவும் இருக்காது. எனவே அவர்கள் சுயநலமின்றி, சரி தவறை பகுத்தறிந்து, நேர்மறை விளைவுகளை அடைந்து, விரும்பத் தக்க, மதிப்புள்ள அழகான வாழ்வை மேற்கொள்வர்.
இந்தச் சுழற்சியைத் தினந்தோறும்
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்

Comments
Post a Comment