4. தீர்மானிக்கும் திறன்

4. தீர்மானிக்கும் திறன்

 (நம்முடைய வாழ்வில் மாற்றத்தை உண்டுபண்ணக்கூடிய முக்கியமான திறன்)

தீர்மானங்கள்

மிகச் சிறிய காரியங்கள் முதல் முக்கியமான காரியங்கள் வரை, தினந்தோற வாழ்வில் தீர்மானங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க்கிறது

தினந்தோறும் நாம் எல்லாவற்றிலும் எல்லா நேரமும் தீர்மானங்கள் எடுக்கிறோம். நாம் எப்பொழுது தூங்க வேண்டும், விழிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் முதலியவற்றில் முடிவெடுக்கிறோம். பல் துலக்க வேண்டுமா வேண்டாமா என்கிற சிறிய காரியத்திலிருந்து, நம்முடைய வாழ்வை கிரயமாக வைத்துச் சாதிக்க கூடிய பெரிய காரியம் வரை தீர்மானங்கள் இருக்கலாம்.

தீர்மானங்கள் என்பது காரியங்களைக் கருத்தில் கொண்டு முடிவு செய்வது அல்லது உறுதி செய்வதாகும்

நாம் சில காரியங்களில் முன்னேறும் பொழுது எடுப்பது மாத்திரம் தீர்மானம் அல்ல, முன்னேற்றத்திற்காக எடுக்கபடுவதும் தீர்மானமாகும். தீர்மானம் என்பது செயல்படுவதற்கு, நிறைய காரியங்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்காக எடுக்கப்படும் உறுதியான வாக்குறுதியாகும்.

அனைவரும் எல்லா நேரமும் எல்லா இடங்களிலும், எல்லா காரியங்களைக் குறித்தும் தீர்மானம் எடுக்கின்றனர்

தீர்மானங்கள் எல்லா இடங்களிலும், எல்லா நேரமும், நம்முடைய வாழ்வு முழுவதும் எடுக்கப்படுகிறது. தங்களுக்கு இருக்கும் விருப்பத்தேர்வுகளிலிருந்து தீர்மானம் எடுக்க ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. ஒவ்வொருவரின் சூழ்நிலையும் சில நேரம் அவர்களைப் பாதித்தாலும், அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் தீர்மானிக்கின்றனர், இல்லையேல் அந்தச் சூல்நிலையிலிருந்தே வெளியேறத் தீர்மானிக்கின்றனர். வாழ்வின் அனைத்து நேரங்களிலும், இடங்களிலும் நாம் நிறைய காரியங்களைக் கடந்து வருகிறோம், நிறைய தீர்மானங்களும் எடுக்கிறோம்.

தீர்மானம் எடுப்பது என்பது ஒரு முடிவில்லா செயலாகும், அது நம் வாழ்வின் இறுதிவரை தொடரும்

தீர்மானம் எடுக்கும் செயல் முடிவில்லாதது. வாழ்வின் சில சமயங்களில், குறிப்பாகக் குழந்தை பருவம் மற்றும் முதிர்வயதான பருவம் ஆகியவற்றில் நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறோம். சார்ந்திருக்கும் பொழுது கூட, யார் மேல் சார்ந்திருக்கின்றோமோ அதற்கு ஏற்பத் தீர்மானங்கள் எடுக்கிறோம். நமது முடிவு காலம் வரைக்கும் தீர்மானம் எடுப்பது தொடர்ந்து மிக முக்கியமான காரியமாக இருக்கிறது.

தீர்மானத்தின் வகைகள்

திட்டமிடப்பட்ட தீர்மானங்கள்

இது நடைமுறையில், திரும்பத் திரும்ப, முறைப்படி எடுக்கும் தீர்மானமாகும்

வாழ்வில் ஒரு சில தீர்மானங்கள், அதிகம் தொகுத்து, ஆராய தேவை இல்லாமல், சாதாரனமான பழக்கமாக ஆகியிருக்கும். அவை முறையாகத் திரும்பத் திரும்ப ஒரு கால இடைவெளியில் செய்யப்படும் செயலாகும்.

இந்த வகையான தீர்மானத்திற்கு அதிக யோசனை தேவையில்லை, அது ஒரு அமைப்புடன் இருக்கும்

திட்டமிடப்பட்ட தீர்மானம் என்பது ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானமாகும், எந்த மாற்றமும் உறுதியோடு நிகழாதவரை அது பாதிக்கப்படாது. அதிகம் யோசிக்காமல் செயல்ப்பட கூடிய விதத்தில் அதற்கு ஒரு அமைப்பும் கட்டுமானமும் இருக்கும். 

இந்தத் தீர்மானங்கள் நீடிய பாதிப்பை ஏற்படுத்தாது

திட்டமிடப்பட்ட தீர்மானங்களுக்குக் கட்டமைப்பும், முறையும் உள்ள படியால், அதிகம் யோசிக்க தேவையில்லை என்பதால், தவறாகப் பின்பற்றாத வரை அதற்கு நீடிய கால பாதிப்பு இருக்காது.

திட்டமிடப்படாத தீர்மானங்கள்

புதிய, புதுமை வாய்ந்த சூழ்நிலைகளில் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்படுவதால் இதற்கு அதிக கவனம் தேவை

சில தீர்மானங்கள் தொடர் தருவாய்களில் எடுக்கப்படாததால், அதற்கு அதிக கவனம் தந்து, நிறைய காரியங்களைக் கலந்தாலோசிப்பது அவசியமாகும். திட்டமிடப்படாத தீர்மானங்கள் புதிய சிக்கலான சில சூழ்நிலைகளைக் கொண்டிருக்கும். 

இந்த வகையான தீர்மானத்திற்கு அதிக கவனம் தேவை, ஏனெனில் அவை மிகவும் முக்கியமானவை, பெரிதும் பாதிக்கக்கூடியவை

திட்டமிடப்படாத தீர்மானங்களில் விருப்பத்தேர்வுகளையும், விளைவுகளையும் குறித்த அதிக கவனம் தேவை. தீர்மானத்தின் விளைவுகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், இந்த வகை தீர்மானங்கள் முக்கியமானவையாகும். இந்த வகை தீர்மானத்திற்கு அதிகம் யோசிப்பதும் நிறைய யுக்திகளை கையாள்வதும் அவசியமாகும்.

அவை நீடிய கால பாதிப்பை ஏற்படுத்தும்

திட்டமிடப்படாத தீர்மானங்கள் ஒரு நபரின் வாழ்வை தலைகீழாக மாற்றக்கூடியவை. ஒரு நபரின் வாழ்வை மேன்மையுடையதாகவோ, அழுத்தம் நிறைந்ததாகவோ ஆக்கத் திட்டமிடப்படாத தீர்மானங்களால் இயலும். ஒரு சில திட்டமிடப்படாத தீர்மானங்களை நாம் மாற்ற முடிந்தாலும், அவற்றில் சிலவற்றால் நீண்ட கால பாதிப்பு உண்டு.

தீர்மானம் எடுப்பதின் முக்கியத்துவம்

தீர்மானம் எடுப்பது நம்முடைய நடவடிக்கையையும், வெற்றிக்காணலையும் பெரிதும் பாதிக்கும்

அனைவருக்கும் இலக்குகளும், அதைச் சென்றடைய நிறைய வழிகளும் உள்ளன. நாம் நம்முடைய வாழ்வை குறித்து நிறைய திட்டமிட்டு, நமக்குக் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்துகிறோம். நாம் எப்பொழுது சரியான விதத்தில் தீர்மானித்து, ஒரு சரியான மதிப்பீடுகளுள்ள வழியைச் சர்ந்திருப்போமோ, அப்பொழுது நாம் நன்னடத்தையோடு, நாம் விரும்பத் தக்க சாதனையைப் பெற முடியும்.

நாம் வாழ்வில் எடுக்கும் சில தீர்மானத்திற்கு குறுகிய கால பாதிப்பிருக்கும், சில தீர்மானத்திற்கு நீடிய கால பாதிப்பிருக்கும்

நாம் தொடர்ச்சியாகச் செய்யும் சில காரியங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நம்முடைய பின்னணியை சார்ந்து எடுக்கபடுவதால், அது அதிகம் நம்மைப் பாதிப்பதில்லை, சில எதிர்மறை பாதிப்பு ஏற்பட்டாலும், அது நிர்வகிக்கக் கூடியதாக இருக்கும். புதுமை வாய்ந்த அல்லது வேற்றுமையான சூழல்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நம் வாழ்வையே மாற்றியமைக்க கூடியதாக இருக்கும்.

சிறந்த முறையில் தீர்மானங்கள் எடுப்பது, ஒரு மனிதன் வாழ்வில் திருப்தியோடும், வெற்றியோடும் முன்னேற உதவுகிறது

தீர்மானங்கள் ஒரு மனிதன் நிகழ் காலத்தில் செய்யும் காரியங்களையும், இறந்த காலத்தின் சில வற்றையும், வருங்காலத்தையும் கூடப் பாதிக்கக் கூடியதாய் உள்ளது. இறந்த காலத்தின் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டு, வாழ்வில் முன்னேற உதவுகிறது. சிறந்த முடிவுகள் நிகழ்கால வருங்கால செயல்களைத் திருப்தியானதாகவும், வெற்றிகரமானதாகவும் ஆக்குகிறது.

தொடர்ச்சியாகத் தீர்மானம் எடுப்பது ஒரு நபர் தனது திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது, விசேஷமாகத் தலைமைத்துவ திறன்களை அதிகரிக்கிறது

காரியங்களை இழுத்தடிக்கும் நபர் பெரும்பாலும் மற்றவரால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார், ஆனால் நிலையான நபர் நிறைய காரியங்களைக் கருத்தில் கொண்டு சிறந்ததை தேர்ந்தெடுப்பார், அதனால் அனைவராலும் பாராட்டப்படுவார். தீர்மானங்கள் எடுப்பது சிந்தனையைச் சார்ந்தது, அதனால் திறன்களும் வளரும். அறநெறிகளை கொண்டு உணர்வுகள் மற்றும் சிந்தனையின் சமநிலையோடு மற்றவரின் நலனில் அக்கரைக்கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் சிறந்தவையாகும், அதனால் அவை தலைமைத்துவ திறன்களை வளர்க்கவும் உதவும்.

தீர்மானம் எடுப்பதை பாதிக்கும் காரணிகள்

தனிப்பட்ட காரணிகள்

கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால நம்பிக்கைகள் எதிர்கால எதிர்பார்ப்புகள், தீர்மானம் எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன

ஒரு நபரின் கடந்த கால அனுபவங்கள் அவர்களின் சிந்தனையில் சில கருத்துக்களை உள்வாங்கச் செய்யும். ஒரு நபர் தன் வாழ்வில் தீர்மானம் எடுப்பதற்கு அவரின் நம்பிக்கைகளும் முக்கியமான காரணமாகும். வாழ்வின் சில காரியங்கள் முக்கியமானதா இல்லையா என்பதை நம்பிக்கைகளினாலேயே தீர்மானிக்கின்றோம். எதிர்காலத்தைக் குறித்த எதிர்பார்ப்புகளும், நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் தீர்மானத்தைப் பாதிக்கின்றன.

சமூக காரணிகள்

கலாச்சார பழக்கங்கள், குடும்ப சூழ்நிலை, படிப்பு/ வேலை சூழல், முதலியன நாம் தீர்மானம் எடுப்பதை பாதிக்கின்றன

சமூகத்தினோடு உள்ள தொடர்பு, குடும்ப பின்னணி, கலாச்சார பின்னணி, மொழி பின்னணி, படிப்பு/ வேலை சூழல், ஆகியன ஒரு நபர் தன் வாழ்வின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக காரணிகள் ஒரு நபரின் வாழ்வை பெரிதும் பாதிக்கின்றன.  

பொருளாதார காரணிகள்

வருவாய், நிதிநிலை, ஆற்றல், வாழ்வாதாரம் முதலியன தீர்மானம் எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன

ஒரு நபர் தன் நிலையைப் பணம் மற்றும் செல்வத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கும் பொழுது அவர்களின் தீர்மானங்கள் அதனால் பாதிக்கப்படும்., விஷேஷமாக அவர்கள் மற்றவருக்கு உதவ வேண்டுமா அல்லது பொருள் ஈட்ட வேண்டுமா என்பதை பற்றின தீர்மானங்கள் அவர்கள் காரியங்களை வரையறை செய்யும் விதத்தால் பாதிக்கப்படுகிறது. ஒரு நபரின் ஆற்றலும், வாழ்வாதாரங்களும் கூட அவர்கள் எடுக்கும் தீர்மானங்களைப்  பெரிதும் பாதிக்கின்றன.  

தீர்மானம் எடுப்பதின் படிமுறைகள்

1.       பிரச்சனையை விவரியுங்கள்

தீர்மானம் எடுக்க வேண்டிய பிரச்சனையைக் கண்டறிவது அவசியம்

வெவ்வேறு சூழலைச் சார்ந்து ஒவ்வொரு மனிதருக்கும் தேவைகளும், ஆசைகளும் உள்ளன. தேவைகளும் ஆசைகளும் திருப்தியின்மையுடனும், தடைகளுடனும் இருக்கும் பொழுது, அதைப் பிரச்சனையாக எண்ணி அதற்கு வேண்டிய தீர்வைக் கண்டறிய முயல்வோம். தீர்மானம் எடுப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் பிரச்சனையைக் கண்டறிவது முதற் படிநிலையாகும்.  

பிரச்சனயை கண்டறிந்தவுடன் அதை விவரிப்பது அவசியமாகும்

பிரச்சனையைக் கண்டறிந்தவுடன், பிரச்சனையின் காரணத்தைப் பற்றி ஆராய்வது அவசியமாகும். பிரச்சனையின் பின்னணி, ஈடுபட்டுள்ள மக்கள்/ காரியங்கள், பிரச்சனையால் ஏற்படும் பின்விளைவுகள் போன்றவற்றை ஆராய்வது சிறந்த தீர்மானங்கள் எடுக்க உதவும்.

2.       நோக்கங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள்

பிரச்சனைகளுக்கான தீர்மானங்களை எடுக்கும் முன்னர் நோக்கங்களை அறிந்திருக்க வேண்டும்

நமது வாழ்வின் சூழல்களை நாம் சந்திக்க தயாராகாத வரை, நம்மைச் சுற்றி பிரச்சனைகள் இருந்துக் கொண்டே தான் இருக்கும். சில பிரச்சனைகளை நாம் தீர்த்தே ஆக வேண்டியது அவசியமாகும், சில பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை எனில் ஒதுங்குவது அல்லது வேறுபட்டுச் செல்வது அவசியமாகும்.

நோக்கங்கள் சென்றடைய கூடியதாகவும், நமது நீண்ட கால அல்லது குறுகிய கால இலக்குகளுக்கு உபயோகமானதாகவும் இருக்க வேண்டும்

நோக்கங்கள் தெளிவுடையதாகவும், சாத்தியமானதாகவும் இருக்கும் பொழுது தான், அவை நல்ல தீர்மானங்களை எடுக்கச் செய்வதாகவும், அடைய கூடியதாக இருக்கும். மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நோக்கங்கள் நமது நீண்ட கால அல்லது குறுகிய கால இலக்குகளைச் சென்றடைய உதவுவதாகவும், அறநெறிகளை கொண்ட மதிப்பீடுகளை உடையதாகவும் இருக்க வேண்டும்.

3.       விருப்பத்தேர்வுகளைக் கண்டறிதல்

நோக்கங்களில் நாம் தெளிவடைந்த பிறகு, நாம் செயல்படுத்துவதற்கு ஏற்ற நோக்கங்களை அடைவதற்கு உரிய விருப்பத்தேர்வுகளைக் கண்டறிய வேண்டும்

நம்முடைய இலக்குகளை அடைவதற்கு நிறைய வழிகள் உள்ளன. முதலில், நம்முடைய நோக்கங்களை நாம் மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இலக்குகளை அடைய நாம் விருப்பத் தேர்வுகளைக் கண்டறிந்து, அதில் சிறந்ததை சிறந்த தீர்மானத்தைக் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

சில விருப்பத்தேர்வுகள் பயனுள்ளதாகவும், தேவையானதாகவும் இருக்கும், சில அவ்வாறு இருக்காது

முயற்சியால் சில விருப்பத்தேர்வுகளை முன்னெடுக்க முடிந்தாலும், எல்லா விருப்பத்தேர்வுகளும் மதிப்பீடுகளோடு சிறந்ததாக இருப்பதில்லை. சில விருப்பத்தேர்வுகளை முன்னெடுப்பது கடினமாக இருப்பினும், நேரம் அதிகமாகச் செலவாகினும், சிறந்த முடிவுகளைக் கொடுக்கும். தீர்மானம் எடுக்கும் செயலில் ஒரு சில விருப்பத்தேர்வுகளே பயனுள்ளதாகவும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

பயனில்லாததும் தேவையில்லாததுமான விருப்பத்தேர்வுகளை விட்டுவிடுங்கள்

சாத்தியமான எல்லா விருப்பத்தேர்வுகளையும் எண்ணிப்பார்த்து சிறந்த தீர்விற்கானதைச் செயல்படுத்த முடியாது. பயனில்லாத தேவையில்லாத விருப்பத்தேர்வுகளை விட்டுவிடலாம்.

4.       விளைவுகளை ஆராயந்துப்பாருங்கள்

ஒவ்வொரு விருப்பத்தேர்வுகளிலும் குறைப்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்

நோக்கத்தை அடைய உதவும் அனைத்து விருப்பத்தேர்வுகளும் சாதகமானதாக இருக்காது. சில குறைபாடுகள் நிவிர்த்தி செய்யக் கூடியவை, ஆனால் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. விருப்பத்தேர்வுகளில் உள்ள சாத்தியமான விளைவுகளைக் கண்டறிந்து, குறைபாடுகள் உள்ளதாயினும் கையாளக்கூடிய சிறந்ததை தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

வெவ்வேறு விருப்பத்தேர்வுகளில் உள்ள நன்மைகளை ஆராய வேண்டும்

.

நோக்கங்களை அடைய சில விருப்பத்தேர்வுகள் உதவியாக இருக்கும், சில காரியங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு நன்மையாக இருந்தாலும், அறநெறிகளும் மதிப்பீடுகளுமின்றி நேராகவோ மறைமுகமாகவோ மற்றவருக்கும் சுற்றுப்புறத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம். எனவே, ஆராய்ந்து பார்த்து மக்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தாத சிறந்த மாற்று விருப்ப தேர்வைக் கண்டறிவது அவசியமாகும்.

5.       தேர்ந்தெடுங்கள்

வெவ்வேறு விருப்பத்தேர்வுகளில் உள்ள விளைவுகளைக் கண்டறிந்த பிறகு, நீங்கள் கையாளக்கூடிய வகையில் உள்ள காரணிகளைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுங்கள்

கண்டறிந்த விருப்பத்தேர்வுகளில் உள்ள பயன்களையும், விளைவுகளையும் ஆராய்ந்த பிறகு தான் தேர்வுகளைத் தீர்மானிக்க வேண்டும். வளங்களோ திறன்களோயின்றி நம்மால் தொடர முடியாத காரியத்தை நாம் தேர்ந்தெடுக்க கூடாது. நம்மால் கையாள முடிகின்ற காரியங்களைக் குறித்து ஆலோசிப்பது தீர்மானம் எடுக்கும் பொழுது அவசியமாகும்.

தேர்வுகள் தேவைக்கு ஏற்றதாகவும், நாம் முன்பே யோசித்த அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்ற உதவுவதாகவும் இருக்க வேண்டும்

தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்டதாயும், விருப்பத்தேர்வுகளில் சிறந்ததாயும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட காரியம் தேவைக்கு ஏற்றதாகவும், தரத்தை விட்டுக்கொடுக்காது, கையாளக்கூடியதாகவும், சில குறைபாடுகளைச் சரி செய்து நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் இருக்க வேண்டும்.

நோக்கங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் அடைய முடியாத பொழுது, தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தேர்வுகள் அவசியமான முக்கியமான நோக்கங்களை வரிசை முறையில் நிவிர்த்தி செய்ய வேண்டும்

நமக்கு எப்பொழுதும் முக்கியமெனக் கருதப்படும் காரியங்கள் உள்ளன, அவசரமான காரியங்களும் உள்ளன. நிரைவேற்ற நேரம் அதிகம் இருக்கும் சில முக்கிய காரியங்களைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம், அவசரமான சில முக்கியமான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முடிப்பது அவசியமாகும். தீர்மானிக்கப்பட்ட விருப்பத்தேர்வுகள் நம்முடைய அவசர மற்றும் முக்கியமான நோக்கங்களை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

மேம்பட்ட தீர்மானங்கள் எடுத்தல்

சமநிலையோடு கூடிய பகுத்தறிவு மற்றும் தன்னம்பிக்கையோடிருங்கள்

சிறந்த தீர்மானங்களை எடுக்க நாம் பகுத்தறியக்கூடியவர்களாயும், காரணங்களை ஆராய்கிறவர்களாயும் இருக்க வேண்டும். இருக்கின்ற வளங்களை, திறன்களைக் கவனத்தில் கொண்டு சமநிலையோடு தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

நீங்களே உங்கள் வாழ்க்கைக்கு பொறுப்பானவர்கள், அதனால் எந்த நேரத்திலும் காரியங்களைத் தவிர்க்காதிருங்க்ள. ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, ஒரு பிரச்சனைக்கான தீர்வைக் கண்டறிய ஏதாகிலும் செய்யுங்கள்

வெவ்வேறு சூழல்களில், நிறைய பாதிக்கக்கூடிய காரியங்கள் இருப்பினும், நம்முடைய வாழ்விற்கு நாம் ஒவ்வொருவரும் தான் பொறுப்பானவர்கள், எனவே அதை அப்படியே விட்டுவிடுவது ஒரு தேர்வாக இருக்க முடியாது. ஒரு பிரச்சனையை நாம் கண்டுக்கொள்ளாமல் தவிர்ப்பதை விட, அதைத் தீர்ப்பதற்கு ஏதாகிலும் செய்வது அவசியமாகும்.

முறையாகப் புதியக் காரியங்களைக் கற்று உங்கள் அறிவை பெருக்கி கொள்ளுங்கள்

நமக்கு இருக்கின்ற அதிகப்பட்ச வாய்ப்புகளைக் கண்டறிவதன் மூலம் மேம்பட்ட தீர்மானங்களை எடுக்க முடியும். எனவே தினந்தோறும் புதிய காரியங்களை முறையாகக் கற்று அறிவை வளர்ப்பது அவசியமாகும்.

நாம் நிறைய காரியங்களைக் கற்க அனுபவம் உதவுகிறது, எனவே மூத்தவர்களின் அறிவுரையைக் கவனிக்க வேண்டும்

நிறைய காரியங்களை நாம் படித்துப் புரிந்துக்கொள்ளலாம், ஆனால் சில காரியங்களைப் புரிந்துக்கொள்ள அனுபவம் தேவை. எனவே, ஒவ்வொரு காரியத்திலும் உதவி தேவைப்படும் பொழுது அதில் கற்றுத்தேர்ந்த மூத்தவர்களின் அறிவுரைகளைப் பெறுவதை நாம் பழக வேண்டும். அதே நேரம், உங்கள் வாழ்க்கைக்கு இன்னொருவர் தீர்மானம் எடுக்க விடாதிருங்கள், அப்படி இருந்தால் மற்றவர் இல்லாத பொழுது தடைப்பட்டவர்களாக உணர்வீர்கள். உலகில் எந்த நபருடனும் இன்னொருவர் எப்பொழுதும் உடன் இருப்பதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

எதிர்மறை உணர்வுகளுக்குச் செவிகொடாதிருங்கள், தீர்மானம் எடுக்கும் பொழுது நேர்மறை மனப்பான்மையுடையவர்களாய் இருங்கள்

சில நேரத்தில் நம்மை விரக்தியாக்குகிற எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படலாம். மக்களைச் சார்ந்துள்ள தீர்மானங்களை அதில் ஈடுப்பட்டுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை, எனவே நாம் எளிதாக எதிர்மறை உணர்வுகளைப் பெற வாய்ப்பு உள்ளது. மேம்பட்ட தீர்மானங்களை எடுக்க நேர்மறை எண்ணமுடையவர்களாய் உங்கள் இலக்குகளை நோக்கி நகருங்கள்.

தீர்மானம் எடுப்பதும் வெற்றியும்

நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் முக்கியமானதில்லை, எனினும் சில தீர்மானங்கள் நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் நீடிய கால விளைவை ஏற்படுத்தக் கூடியவையாகும்

சில தீர்மானங்களால்தான் நாம் நம்முடைய நேரத்தை, பொருளை, தாலந்துகளை உபயோகிக்கிறோம், அவை நம்முடைய மகிழ்ச்சிக்காகவும், திருப்திக்காகவும் பெரும்பாலும் இருக்கும். மற்றும் சில தீர்மானங்களால் நாம் நம்முடைய நேரம், பொருள், தாலந்துகளை சேகரிக்கிறோம், அவை மிகவும் விலையேரப்பெற்றதாயும், கடினமானதாயும் இருக்கும். இவை இரண்டிலும் நேர்மறை காரியங்களும் எதிர்மறை காரியங்களும் சேர்ந்தே உள்ளன. மற்றும் ஒரு சில காரியங்கள் நம்முடைய வாழ்வை பாதிக்கக்கூடியதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் இருக்கும்.

வெற்றி என்பது ஒரு நபர் கொண்டுள்ள நோக்கங்களை அடைவதாகும். நோக்கங்களை அமைத்திராத பொழுது, அதை அடைவதும், வெற்றியை அளவிடுவதும் கடினமாகும்

நோக்கங்களை அமைப்பது தீர்மானம் எடுப்பதில் மிகவும் முக்கியமான காரியமாகும். நோக்கங்கள் இல்லையேல், ஒரு காரியத்தில் முன்னேறக் குறிப்பிட்ட திசையும், அர்த்தமும் இல்லாமல் இருக்கும். நோக்கங்களை அமைத்திராவிடில் சென்றடையக்கூடியதும் அளவிடக்கூடியதுமான வெற்றி இல்லாதிருக்கும்.

நாம் சிறந்த தீர்மானங்களை எடுக்க ஆரம்பிக்கும் பொழுது, ஒரு தடை ஏற்பட்டாலும் நாம் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. வேறு விருப்பத்தேர்வுகளைக் கொண்டு நம் வாழ்வில் முன்னேறுவோம்

ஒரு காரியத்தில் முன்னேற்றம் இருக்கும் பொழுது சில தடைகளும், நிலையில்லா தன்மையும் நிச்சயம் இருக்கும். கவனமாக நம்மைச் சுற்றியுள்ள வாய்ப்புகளை நாம் கவனித்தரியும் பொழுது சிறந்த தீர்மானங்கள் எடுக்க முடியும், ஒரு தடை ஏற்பட்டால் கூட வேறு விருப்ப தேர்வைகண்டறிந்து அதைத் தாண்டிச்செல்ல முடியும்.

சிறந்த தீர்மானங்கள் எடுப்பது ஒரு மனிதனை வெற்றியுள்ளவராக இருக்க உதவுகிறது

சிறந்த தீர்மானங்களை எளிதாக நடைமுறைப்படுத்த முடியும், மற்றும் தடைகள் இருப்பினும் விரும்பிய நோக்கங்களைச் சென்றடைய முடியும். எனவே அது ஒரு நபரை வெற்றியடைய செய்கிறது.


Comments