9. துவக்க முயற்சி எடுத்தல்
9. துவக்க முயற்சி எடுத்தல்
(நமக்கு
நிறைய அறிவும் யோசனைகளும் இருப்பினும், காரியங்களைத் துடங்க உதவும் திறன்)
மனித இயல்பு:
மனிதர்களே தங்களுடைய சிந்தனைகள் மற்றும் செயல்களினால்
புதுமைத்துவம் உள்ளவர்களாய் இருக்க முடியும்.
மனிதர்களாகிய நாம் உணர்வுகளையும் அறிவையும்
உடையவர்களாய் மிகவும் விசேஷமானவர்கள். உலகில் உள்ள மற்ற எந்த உயிரினமும் உலகின் வளங்களை முழுவதும் உபயோகிப்பதில்லை, அதற்குத் தேவையானதை மாத்திரம்
உபயோகிக்கிறது. மனிதர்கள் மிகவும் அறிவாய்ந்தவர்கள், அதுவே அவர்களைச் சிந்தனையிலும் செயலிலும் புதுமைத்துவம் உள்ளவர்களாக்குகிறது.
உலகை
ஆக்கப்பூர்வமாகவோ அழியக்கூடியதாகவோ ஆக்க மனிதர்களாலேயே முடியும்.
சிந்தனைகளைச் செயல்களாக்கும் பொழுது, நேர்மறை விளைவுகள் மாத்திரம் இருக்காது, ஆனால் சில கற்றுக்கொள்ளுதலும்
இருக்கும். மனிதர்களுடைய இயல்பு மிகவும் சிக்கலானது, மற்றும் மனிதர்கள் செய்யும் சில
செயல்கள் நெருக்கடியானதாகவும் இருக்கும். மனிதர்களுடைய செயல்பாடுகள் சில நேரம் ஆக்கப்பூர்வமாக இருக்கும், சில நேரம் அழிவுத்தரக் கூடியதாக
இருக்கும்.
உலகிலுள்ள
எல்லா உயிரினங்களும் ஒரு குறிப்பிட்ட முறைமையைப் பின்பற்றுகின்றன, அதன் மூலம் நிறைய காரியங்களைக் கற்க
முடியும். ஆனால் மனிதர்கள் தனிச்சிறப்புடையவர்கள்.
நாம் இயற்கையின் அழகையோ, உயிரிகள் முறைமையாகப் பின்பற்றக்கூடிய
காரியங்களையோ என்றும் ஒதுக்க முடியாது. சில உயிரிகளின் வழக்கமான செயல்களிலும், ஒன்றுமையிலும், ஆச்சரியமான
தன்மைகளிலும் இருந்து நாம் நிறைய காரியங்களைக் கற்கலாம். எல்லா உயிரினங்களிலும் மனிதர்கள்
மாத்திரமே பகுத்தறியும் தன்மையும் புரிந்துக்கொள்ளும் தன்மையும் உடையவர்கள், அது அவர்களை அசாதாரனமானவர்களாக்குகிறது.
மனிதர்களுக்கு
மிக அதிகமான படைப்பாற்றல் உள்ளது, கண்டுபிடிக்கப்பட்ட காரியங்கள் மூலம் நாம் வானில் பறவையைப் போலப்
பறக்கிறோம், நீரில் மீனைப் போல நீந்துகிறோம்.
மனிதர்களைத் தவிர்த்து எந்த உயிரினமும்
கட்டிடங்கள், பொருட்கள், அல்லது இயந்திரங்களைத் தனக்காக
ஸ்தாபித்ததில்லை. மனிதர்கள் தங்கள் படைபாற்றலால் பறவையைப் போலப் பறக்க விமானத்தையும், வானூர்தியையும் உண்டாக்கினர், நீரில் நீந்தவும் மிதக்கவும் கப்பல்களையும்
நீர் மூழ்கிக் கப்பல்களையும் உண்டாக்கினர். அவர்கள் தொடர்ந்து காரியங்களைப் படைக்கவும் கண்டறியவும் தங்கள்
படைப்பாற்றலை உபயோகிக்கின்றனர்.
மற்றவர்களுக்கு
இல்லாத திறனும் அறிவும் எல்லோருக்கும் இருப்பினும், துவக்க முயற்சி எடுக்காததால் அதை
வெளிப்படுத்தத் தவறுவர்.
அனைவரும் நம்முடைய திறனிலும் அறிவிலும்
தனித்துவம் உள்ளவர்கள், நிச்சயமாக மற்றவர்களுக்கு ஏதாவது வகையில் பங்களிக்க கூடியவர்கள். ஆனால் நிறைய நேரங்களில் ஒரு சிலரே முன்
வந்து தங்களை வெளிப்படுத்துகின்றனர், தங்கள் திறனையும் அறிவையும் உறுதிப்படுத்துகின்றனர். நிறைய நபர்கள் துவக்க முயற்சி
இல்லாமையால் தங்களை தாங்களே ஒடுக்குகின்றனர்.
துவக்க முயற்சி என்பதென்ன?
துவக்க
முயற்சி என்பது காரியங்களை மதிப்பிட்டு, மற்றவரை ச்சார்ந்திராது தொடங்கக்கூடிய திறனாகும்.
நம்மைச் சுற்றியுள்ள நிறைய காரியங்களை நாம் உள்வாங்குவதால், ஆராய்வதால் நமக்கு நிறைய யோசனைகளும்
சிந்தனைகளும் உள்ளன. ஆனால் எப்படி, எங்குத் தொடங்க வேண்டும் என்று தெரியாத காரணத்தால், அவை அனைத்தும் செயல்களாக, கண்டுப்பிடிப்புகளாகச் செயலாக்கம்
அடையப்படுவதில்லை. துவக்க முயற்சி என்பது புதியதாக, ஆராய்ந்த பிறகு காரியங்களைச் சுதந்திரமாகத் தொடங்க எடுக்கப்படும்
முதல் படியாகும்.
துவக்க
முயற்சி என்பது மற்றவர்கள் பொறுப்பேற்கும் முன் செயல்படும் ஆற்றல் அல்லது வாய்ப்பாகும்.
உலகில் உள்ள நிறைய மக்கள் ஒரு பொதுவான
இலக்கை அடைய நிறைய வழிகளில் முயற்சிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் துவக்க முயற்சி
அவசியம், மற்றும் வாய்ப்பைக் கண்டறிவதும்
பொறுப்புடன் செயல்படுவதும் கூட அவசியம். நல்ல நேரத்திற்காக, வளங்கள் முழுவதும் கிடைக்கும் வரை காத்திருப்பது எப்பொழுதும் உதவாது. செயல்படுபவர்களாக நாம் இருக்கின்ற
வளங்களைக் கொண்டு காரியங்களைச் சரியான நேரத்தில் செய்வது அவசியமாகும். சில ஆர்வமிக்க புதுமையான காரியங்களைச்
செய்ய நிச்சயம் முதல் படி எப்பொழுதும் உள்ளது. துவக்க முயற்சி என்பது சில காரியங்களைச்
சாதிக்க தொடங்கப்படும் முதல் முயற்சியாகும்.
எல்லோருக்கும்
சாதிக்க வேண்டும், உதவ வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை உண்டு, ஆனால் துடங்காத வரை நாம் குறித்த
இலக்கை நம்மால் அடைய முடியாது.
மனிதர்களாக நாம் சில புதமையான
காரியங்களைச் சாதிக்க, தேவையில் உள்ள மற்றவர்களுக்கு உதவ, மேம்பட்ட புதிய காரியங்களை உருவாக்க
அற்பபுதமான சிந்தனைகளைக் கொண்டுள்ளோம். ஆனால் சிந்தனைகளைச் செயல்ப்படுத்தாத
வரை, விரும்பிய நிலைக்கு யாராலும் முன்னேறி, அதை அடைய முடியாது.
ஏன் நாம் துவக்க முயற்சியுடைவர்களாக
இருக்க வேண்டும்?
சில
புதிய காரியங்களைச் சாதிக்க நாம் துவக்க முயற்சி உடையவர்களாக இருக்க வேண்டும்.
மற்றவரின் கவனத்தை ஈர்க்க நாம்
அனைவரும் ஏதாவது புதியதாகச் செய்ய விரும்புகிறோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள உலகம்
புதுமைகளை உடனடியாக ஏற்பதில்லை, அதனால் நமக்குள்ளே நிறைய
தடைகள் உள்ளது. எனவே முதல் அடி எடுத்து வைத்தல் முக்கியம், மற்றும் துவக்க முயற்சி உடையவராக இருப்பது முதல் அடியைத் தன்னம்பிக்கையோடு
எடுக்க உதவுகிறது.
தேவையில்
உள்ளவர்களுக்கு உதவ, நாம் துவக்க முயற்சி உடையவர்களாக இருக்க வேண்டும்.
நிறைய நேரங்களில் மற்றவர்களுக்கு உதவ
வேண்டும் என்ற எண்ணம் துவக்க முயற்சி இல்லாமையால் தடைப்படுகிறது. துவக்க முயற்சி இல்லாமையால் தேவையுள்ள
ஒருவருக்கு உதவ கூடிய காரியத்தில் கூடச் சாத்தியமில்லாமலும் ஆகிறது. பிறருக்கு உதவ துவக்க முயற்சி அவசியம்.
நம்முடைய மனப்பான்மைகளையும் யோசனைகளையும்
வெளிப்படுத்த, மற்றவரை ஈர்க்க துவக்க முயற்சியுடையவராக இருப்பது அவசியம்.
நாம் காரியங்களைக் குறித்து நிறைய
யோசிக்கிறவர்களாக இருக்கிறோம், ஆனால் நம்முடைய சிந்தனைகளையும் யோசனைகளையும் எளிதில் மற்றவர்களோடு
பகிராமல் ஊமையாக இருக்கிறோம். நாம் உண்மையுள்ளவர்களாயும் தெளிவுள்ளவர்களாயும் இருக்க, வெளிப்படுத்துவது அவசியம், அப்படியிருந்தால் தான் நாம் கலந்து
பேசி முன்னேற்றத்திற்கான காரியங்களைச் செய்ய முடியும். நாம் நம்மை வெளிப்படுத்தவும் மற்றவரை
ஈர்க்கவும், துவக்க
முயற்சி எடுப்பது அவசியம்.
ஒரு
பிரச்சனையைத் தீர்க்க, தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த, துவக்க முயற்சியுடையவராக இருப்பது
அவசியம்.
நாம் பொறுப்புகளை மிக எளிதாக
ஏற்பதில்லை, அதனால் தான் நிறைய மக்கள் பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள், ஒரு சிலரே தலைவர்களாக இருக்கிறார்கள். துவக்க முயற்சி எடுப்பதென்பது ஒரு
முக்கிய தலைமைத்துவ திறனாகும், அது மற்றவர்களுக்குப் பொறுப்பாக இருக்க உதவுகிறது, பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.
யார், யாருக்காகத் துவக்க முயற்சி எடுக்க வேண்டும்.
எல்லோரும்
தங்களால் முடிந்த காரியங்களில், தேவைப்படும் நேரங்களில் துவக்க முயற்சி
எடுக்க வேண்டும்
நாம் எப்பொழுதும் சில காரியங்களில்
ஆர்வமுடையவராகவும் திறன் உடையவர்களாகவும் இருக்கிறோம், நம்மால் இயன்ற காரியங்களில் நாம் துவக்க முயற்சி உடையவர்களாக இருக்க
வேண்டும். நாம் எங்கு நம்முடைய உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கின்றோமோ, எங்குத் தேவை இருக்கிறதோ அங்கு நாம் துவக்க முயற்சி உடையவர்களாக
இருக்க வேண்டும்.
நாம்
முதலில் குடும்பம், பள்ளி/ கல்லூரி/ வேலை இடத்தில் நமக்கு நெருங்கியவரிடத்து துவக்க முயற்சி எடுக்க
வேண்டும்
நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம்
ஈடுப்பட்டிருக்கும் காரியங்களில் நாம் பொறுப்புள்ளவர்கள்,
குடும்பம் அல்லது பள்ளி அல்லது கல்லூரி
அல்லது வேலையிடம் ஆகியவற்றில் நமக்கு நெருங்கியவரிடத்து முதலில் நாம் துவக்க
முயற்சி உடையவர்களாக இருக்க வேண்டும், ஏனெனில் அதில் நாம் ஒரு அங்கமாக இருக்கிறோம்.
பிறகு, நாம் சமூகத்தில், சுற்றுப்புறத்தில் துவக்க முயற்சி
எடுக்க வேண்டும்.
நமக்கு நெருங்கியவரிடத்து நாம் துவக்க
முயற்சி எடுப்பதுடன், நாம் பேரளவில் ஈடுப்பட்டுள்ள சமூகம் மற்றும் சுற்றுப்புறத்தில்
ஏதாவது பிளவு அல்லது பிரச்சனை ஏற்படும் பொழுதாவது துவக்க முயற்சி எடுக்கலாம்.
எங்கு நாம் துவக்க முயற்சி எடுக்க வேண்டும்?
நம்முடைய
வீட்டில் நாம் துவக்க முயற்சி எடுக்கலாம்.
வீடு தான் நமக்கு உரிமையான, நமக்குச் சொந்தமான முதல் இடம். எனவே நாம் துவக்க முயற்சி உடையவர்களாக வீட்டில் பொறுப்புணர்வோடு
இருப்பது அவசியம்.
நம்முடைய பள்ளி/ கல்லூரி/ வேலையிடம் முதலியவற்றில் நாம் துவக்க
முயற்சி எடுக்கலாம்.
பள்ளி அல்லது கல்லூரி அல்லது வேலையிடம், வீட்டிற்கு அடுத்தப்படியாக நமக்கு
முக்கியமானது. நாம் அந்த இடத்தில் ஒரு நோக்கத்திற்காக உள்ளோம், அதில் நம்முடைய முன்னேற்றத்திற்காகத் துவக்க
முயற்சி உடையவர்களாக இருப்பது அவசியம்.
நம்முடைய
சுற்றுப்புறத்தில் நாம் துவக்க முயற்சி எடுக்கலாம்.
நாம் ஒரு பங்காக இருந்து, நிறைய உரிமைகளை அனுபவிக்கும் இடம்
நம்முடைய சமூகம்/ சுற்றுப்புறசூழல். நாம் சுவாசிக்கும் காற்றை, அருந்தும் தண்ணீரை, உண்ணும் உணவைச் சுற்றுப்புறத்திலிருந்து பெறுகிறோம். எனவே நாம் ஒருவருக்கொருவரும், சுற்றுப்புறத்திற்கும்
பொறுப்புள்ளவர்களாக, துவக்க முயற்சியுடன் இருப்பது அவசியம்.
எங்கு நாம் துவக்க முயற்சி எடுக்கலாம்?
குடும்பத்தில்
நபர்கள் முக்கிய முடிவுகள் எடுத்துச் செயல்பட எண்ணும் பொழுது, நாம் வீட்டில் உதவுவதற்கு துவக்க
முயற்சி எடுக்கலாம்.
நமக்கு நெருங்கிய தொடர்புடைய சூழலை
நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம், ஆனால் அதில் அதிக கட்டாயம் இல்லாததால் அதைக் குறித்து அதிகம் அக்கறை
கொள்வதில்லை. எப்படியிருந்தாலும் ஏதாக இருந்தாலும், வீடு தான் சிறந்த இடம், மற்றும் குடும்ப நபர்கள் முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் பொழுது
அவர்களுக்கு உதவி, அதைச் செயல்படுத்த துணையாக இருக்கலாம்.
ஏதாவது
காரியத்தை உருவாக்க, பொறுப்புகளை எடுக்க, ஏதாவது காரியத்தைப் பிறருக்கும் வழங்க, பள்ளி/ கல்லூரி/ வேலையிடத்தில் நாம் துவக்க முயற்சி எடுக்கலாம்.
வீட்டிற்கு அடுத்தபடியாக, நாம் அதிக நேரத்தை நம்முடைய பள்ளி, கல்லூரி அல்லது வேலையிடத்தில்
செலவழிக்கிறோம், மற்றும்
நாம் சில பொறுப்புகளை அங்கு எடுத்துள்ளோம், அல்லது சில பொறுப்புகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய வேலைகளைக் கொடுக்கப்பட்ட அறிவுரைகளின்
படி பின்பற்றி முடிக்கிறோம், ஆனால் சில காரியங்கள் பாடத்திட்டம் அல்லது குறிப்பிட்ட வேலையைத்
தாண்டித் தேவைப்படும் பொழுது நாம் அதைப் புறக்கணிக்கிறோம். நாம் சில புதிய காரியங்களைக் கற்க, பள்ளி/கல்லூரி/ வேலையிடத்தில் புதிய காரியங்களை
உருவாக்கத் துவக்க முயற்சி உடையவர்களாக இருப்பது அவசியம்.
ஒரு
பிரச்சனை/ கடின சூழ்நிலையைத் தீர்க்க, சரியான தலைமைத்துவம் இல்லாத பொழுது, நாம் சமூகத்தில் துவக்க முயற்சியை
எடுக்கலாம்.
நாம் வாழ்கின்ற வீடு என்பதொரு தெரு, மாவட்டம், மாநிலம், நாடு மற்றும் உலகில் உள்ளது. எனவே இறுதியாக நாம் நம்முடைய சமூகத்திற்கு பொறுப்பாளிகள், மற்றும் நாம் அனுபவிக்கும் உரிமைகளின்
நிமித்தம் நாம் மேற்பார்வையாளர்களாக இருப்பது அவசியம். நாம் காரியங்களை எப்போதும் நம்முடைய
தலையின் மேல் எடுக்க முடியாது, எடுப்பது அவசியமுமில்லை, ஆனால் நம்முடைய சமூகத்தில் ஏதாவது பெரிய பிரச்சனை/ கஷ்டம், உடனடியாகத் தீர்க்கப்படுவது அவசியமாகும் பொழுது நாம் துவக்க முயற்சி
எடுக்கலாம். மற்றும் மக்களை வழிநடத்த சரியான தலைமைத்துவம் இல்லாத பொழுது, நாம் துவக்க முயற்சி எடுக்கலாம்.
எப்படி நாம் துவக்க முயற்சி எடுக்கலாம்?
நாம் துவக்க முயற்சி எடுக்கும் பொழுது
தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
நாம் நம்மை நம்பாதவரை மற்றவரை நம்பவைப்பதும், பொறுப்புடன் துவக்க முயற்சி எடுப்பதும்
கூடாமல் இருக்கும். நமக்குத் தெரிந்த காரியங்களில், நாம் திறன் பெற்றவற்றில், கற்க கூடிய காரியங்களில் நாம் தன்னம்பிக்கையோடு இருந்து துவக்க
முயற்சி எடுக்க வேண்டும்,
நாம்
பகுத்தறிவு உள்ளவர்களாக நன்மை தீமைகளைக் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க
வேண்டும்.
விளைவுகள், நேர்மறை காரியங்கள், மற்றும் எதிர்மறை காரியங்களைக் குறித்து திரும்பத் திரும்ப யோசிப்பது, மிகவும் உதவிகரமாக இருக்கும். நாம் சில பிரச்சனைகள் அல்லது கடின
சூழல்களின் பொழுது துவக்க முயற்சி எடுக்கையில், கட்டுப்பாடு இழந்தவர்களாக மிகவும் உணர்வுபூர்வமாக இருப்போம். பகுத்தறிவு உள்ளவர்களாய் காரியங்களை நாம்
கணிப்பது நமக்கு உதவும்.
நமக்கிருக்கும்
விழிப்புணர்வை/ வெளிப்பாட்டை அதிகரிக்க நாம் புதிய காரியங்களைக் கற்கவும், நேரத்தைச் சரியாக நிர்வகிக்கவும்
வேண்டும்.
அறிவு இல்லாமல் நிறைய காரியங்களை நம்மால் தொடர்புப்படுத்த முடியாது, பொறுப்புகளை எடுத்துக்கொண்டு அதைச்
செயல்படுத்தவும் முடியாது. நேரத்தைச் சிறந்த முறையில் நிர்வகித்து, நிறைய புதிய காரியங்களைக் கற்பது, மற்றும் நிறைய காரியங்களைக் குறித்த விழிப்புணர்வையும் வெளிப்பாட்டையும் அதிகரிப்பது, நாம் துவக்க முயற்சி உடையவர்களாக
இருக்க தூண்டும்.
நம்மிடத்தில்
சகிப்புத்தன்மையை மேம்படுத்த வேண்டும், மற்றும் மற்றவர்களுடைய குரல் எப்பொழுதும்
குற்றம் கண்டறிவதாக/ எதிர்மறையாக இருக்கும் பொழுது அதை நம்ப வேண்டிய அவசியமில்லை.
மக்கள் எப்பொழுதும் நம்மிடத்தில்
நேர்மறையாகச் செயல்பட மாட்டார்கள். நிராகரிப்புகள், நப்பிக்கையின்மை, அலட்சியப்படுத்தப்படுதல் நிச்சயம் இருக்கும்,
ஏனெனில் மக்கள் தனித்துவமானவர்கள், மற்றும் அவர்களுக்கு வெவ்வேறு
எதிர்ப்பார்ப்புகளும் திறன்களும் உள்ளன. நாம் நம்முடைய சகிக்கும் திறனை மேம்ப்படுத்த வேண்டும். மற்றவர்கள் எப்பொழுதும் குறைகளைக்
கண்டறிந்து, எதிர்மறையாக
இருக்கும் பொழுது அவர்களை நம்ப வேண்டிய அவசியமில்லை.
நல்ல
மனிதர்களோடு நாம் உறவினை மேம்படுத்திக்கொண்டு, அவர்களின் அறிவை/ அனுபவத்தை அணுகலாம்.
நம்மைச் சுற்றியுள்ள மக்களே நமக்கு
மிகவும் மதிப்புமிக்க வளங்கள். நம்மைச் சுற்றியுள்ள நல்ல
மனிதர்களோடு நாம் உறவை வைத்துக்கொள்வது அவசியம். அவர்களுக்கிருக்கும் அறிவு, நிபுணத்துவம்,
மற்றும் அனுபவம் எப்பொழுதும் நமக்கு
உபயோகமாக இருக்கும். நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள் நமக்கு உதவியாக இருக்கும் பொழுது, நாம் பலத்துடன் உணர முடியும். மற்றும் நாம் துவக்க முயற்சியுடன் சில
காரியங்களைச் சாதிக்க அது நம்மை ஊந்தி தள்ளும்.
தோல்விகளைக்
கண்டு நாம் பயப்படக் கூடாது, மற்றும் வெற்றியினால் மேற்கொள்ளப்பட்டுவிட கூடாது.
இந்த உலகில் தாங்கள் விரும்பாத
காரியத்தைத் தான் சந்தித்ததில்லை என்று யாராலும் கூற முடியாது. எப்பொழுதும் சில விரும்பத் தகாத
காரியங்கள் நம்மைச் சுற்றி நடக்கும், அதை நிறைய நேரங்களில் தவிர்க்க முடியாது. நாம் மறைந்திருக்கும் தோல்விகளைக் கண்டு
பயப்படக் கூடாது, ஆனால் நம் அனுபவம் எல்லாவற்றிலும் உள்ள சில நல்ல காரியங்களைப் பார்க்க
வேண்டும். துவக்க முயற்சியுடன் இருக்க, வெற்றி நம்மை மேற்கொள்ளாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய மனப்பான்மையை சரியான மதிப்பீடுகள்
கொண்டு சரிசெய்ய வேண்டும், நாம் பொறுப்பாளிகளாக இருக்கும் இடத்தில், நம்மால் இயன்றவற்றை நாம் பங்களிக்க
வேண்டும்.
நாம் சிறந்த மதிப்பீடுகளுடனும்
நல்லொழுக்கத்துடனும், சரியான மனப்பான்மையுடனும் இருக்கும் பொழுது, நாம் மதிப்புள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, உபயோகமுள்ளவர்களாக, சுயநலமற்றவர்களாக இருக்க சிறந்த
முயற்சி செய்வோம். நம்முடைய பொறுப்புகளை நிவிர்த்தி செய்யச் சிறந்த பங்களிப்பைக்
கொடுப்போம், மற்றும் துவக்க முயற்சியுடன் மற்றவரின் நலனுக்குச் சிறந்த
பங்களிப்பும் அளிப்போம்.
துவக்க முயற்சியுடன் இருப்பதன் பயன்கள்:
நாம்
துவக்க முயற்சி எடுக்க ஆரம்பிக்கும் பொழுது, நம்முடைய தலைமைத்துவ திறன்கள்
மேம்படும்.
துவக்க முயற்சி எடுப்பது நிறைய
நேரங்களில் நடப்பதில்லை. தன்னார்வமாகச் சில காரியங்களைச் செய்ய அழைக்கப்படும் பொழுது, நிறைய நேரங்களில் நிறைய நபர்கள் தங்களை
தாங்களே சிறப்பற்றவர்களாகத் திறனற்றவர்களாகக் குறைந்தவர்களாக உணர்ந்து முன்வருவதில்லை. ஆனால் துவக்க முயற்சி எடுப்பது ஒரு
நபர் தன் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த உதவுகிறது.
துவக்க
முயற்சி நாம் மற்றவர்களைப் பார்த்துச் செயல்படாமல் சுதந்திரமாக இருக்க செய்யும்.
நிறைய நேரங்களில் நாம் சில நபர்களையும்
அவர்கள் செய்யும் சில காரியங்களை அதிகம் தெரிந்துக்கொள்ளாமலும் பின்னணியை ஆராயாமலும் சிந்தனையைப் பயன்படுத்தாமலும்
பின்பற்றுகிறோம். துவக்க முயற்சி எடுப்பது மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் சுதந்தரமாக
இருக்க உதவுகிறது. அப்படியாக நாம் சரியான மதிப்பீடுகளுடன் சரியான வழியில் நடக்க நம்முடைய சுய சட்ட திட்டங்களை அமைத்துக்கொள்ளலாம்.
நாம்
துவக்க முயற்சி எடுக்கும் பொழுது, பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும், புதிய காரியங்களைக் கற்கவும் முடியும்.
நாம் சில காரியங்களைத் தொடங்கும் முன், அனைத்தையும் தெரிந்திருக்க வேண்டும்
என்ற அவசியமில்லை. ஆனால் சரியான மனப்பான்மை இல்லாமல் நாம் காரியங்களை எடுக்கும் பொழுது, ஒரு சில காரியங்கள் தெரியாததால் அதைக்
கைவிட நேரிடும். துவக்க முயற்சி எடுப்பது பிரச்சனைகளுக்கான சரியான தீர்வுகளைக்
கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறியும் செயலில் புதிய காரியங்களைக் கற்று, நம்முடைய இலக்குகளை அடைய உதுவுகிறது.
நாம்
எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் துவக்க முயற்சியுடன் இருப்பது நம்முடைய
பொறுப்புகளை நிறைவேற்ற உதவும்.
நாம் நம்மைச் சுற்றியுள்ள நிறைய
இடங்களில் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம். சில நேரங்களில் நாம் செயலாற்றவும், செயல்படுத்தப்படவும் நம்மைத் தூண்ட நிறைய மக்கள் இருக்க மாட்டார்கள். துவக்க முயற்சி எடுப்பது, நாம் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இடத்திலும், நாம் நம்மையே அர்ப்பணித்த
காரியங்களிலும், நமக்குக் கொடுக்கப்பட்ட நாம் எடுத்துக்கொண்ட நம்முடைய பொறுப்புகளையும் நாம் நிறைவேற்ற உதவுகிறது.
துவக்க
முயற்சி எடுப்பது நாம் சில நேரங்களில் வெற்றியடைய, மகிழ்ச்சியை பெற, திருப்தியடைய உதவுகிறது.
நாம் எடுத்துவைக்கும் முதல் படி ஒரு மிகப் பெரிய படி, அதுவே நம்முடைய வெற்றிக்கு அடித்தளமாகும். அதில் நிறைய உணர்வுகளும், பகுத்தறிவு ஆய்தலும் ஈடுப்பட்டிருக்கிறது. துவக்க முயற்சி எடுப்பது நாம் முதல் படியை எடுத்துவைக்க உதவுகிறது, மற்றும் நாம் காரியங்களை மாற்றியமைத்து, கடின சூழல்கள் அல்லது எதிர்பாராத காரியங்கள் இருந்தாலும் அதிலிருந்து கற்கவும் உதவுகிறது. நாம் துவக்க முயற்சியுடன் இருப்பது காரியங்களை எப்பொழுதும் தடை இல்லாமல் முயற்சிக்க செய்கிறது, அதனால் மகிழ்ச்சியும் திருப்தியும் எப்பொழுதும் இருக்கும்.
Comments
Post a Comment