8. சமுதாயத்திற்கான பொறுப்பு

 8. சமுதாயத்திற்கான பொறுப்பு

(நம்முடைய சுய மரியாதையை அதிகரித்து வருங்காலத்திற்கு பாதையை அமைத்துத் தரும் செயல்)

உரிமைகளும் பொறுப்பும்

எல்லோரும் வீட்டில், பள்ளியில் அல்லது வேலை செய்யும் இடத்தில் மற்றும் பொது இடங்களில் கூட உரிமைகளை அனுபவிக்கிறோம்.

நாம் எல்லோரும் நேரத்தைச் செலவழிக்க ஏதாவது இடத்தையோ காரியத்தையோ கொண்டுள்ளோம். நாம் ஈடுப்பட்டிருக்கும் இடம் பொதுவாக நாம் சுதந்திரமாகச் சில காரியங்களைச் செயல்படுத்த ஏதுவாயிருக்கிறது. எனவே நாம் அனைவரும் வீடு, படிக்குமிடம்/ வேலையிடம், சில பொது இடங்கள் ஆகியவற்றில் ஏற்றாற்போலவும் அந்த இடத்திற்கு தகுந்தார் போலவும் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம்.

உரிமைகளோடு கூடப் பொறுப்புகளும் சேர்ந்து இருக்கிறது, ஆனால் பொறுப்புகள் பெரும்பாலும் மறக்கப்படுகிறது.

சில காரியங்களில் நாம் சாதகமானவற்றை அனுபவிக்கும் பொழுது, அதற்காக ஏதாவது செய்வது தேவையாகிறது, எதிர்பார்க்கவும் படுகிறது. எனவே எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் நமது உரிமைகளை நாம் கோறுகிறோமோ, அதினோடு நமக்குப் பொறுப்புகளும் வருகிறது, ஆனால் நாம் பொறுப்புகளை நிறைய நேரங்களில் யோசித்து செயல்படுத்துவதில்லை.

பொறுப்பு என்பது சில காரியங்களைக் குறித்த கடமையை நிறைவேற்றுவதும், யாரையாவது கட்டுப்பாடுடன் வைத்திருக்கும் நிலையுமாகும்.

நிறைய நேரங்களில் பொறுப்பு என்பது நாம் ஏற்றிருக்கும் நிலையைக் கொண்டோ, நம் பங்களிப்பைக் கொண்டோ, நம் தலைமைத்துவத்தை கொண்டோ உணரப்படுகிறது. ஆனால் பொறுப்புணர்வு என்பது அது மாத்திரம் அல்ல. அது நாம் ஈடுப்பட்டுள்ள சில காரியங்களில் நமது கடமைகளை நிவிர்த்தி செய்யும் நிலை அல்லது உண்மை தன்மையாகும். மற்றும் பொறுப்புணர்வு என்பது நாம் பதிலளிக்க வேண்டியவரிடத்தும் நமக்குப் பதிலளிக்க வேண்டியவரிடத்தும் கொண்டுள்ள கட்டுப்பாடாகும்.

ஒரு காரியத்தின் பொறுப்பாளராக விமர்சித்தலும் பழியை எடுத்துக்கொள்ளுதலுமான நிலையும் உண்மை தன்மையுமாகும்.

சில நேரங்களில் சில காரியங்களை நாம் பிரித்துத் தொகுத்து பிறருக்கு வழங்குகிறோம், அது போதுமென்றிருக்கிறோம். ஆனால் பொறுப்புணர்வு என்பது தொகுத்து வழங்குவது மாத்திரம் அல்ல, எல்லா காரியங்களும் சரியான விதத்தில் உள்ளது என்பதை நிச்சயிப்பதும், பிரச்சனைகளைச் சந்திப்பதும், வேண்டிய காரியங்களை நிவிர்த்தி செய்வதும், மற்றும் நிர்ணயித்த இலக்கை அடைவதுமாகும். நமக்குக் கொடுக்கப்பட்ட காரியங்களிலும், நாம் எடுத்துக்கொண்ட காரியங்களிலும் குறைகளை ஆராய்ந்து, சில நேரம் குறைகளுக்குப் பழியை ஏற்று உண்மையாய் இருப்பதாகும்.

நம்மைச் சுற்றியுள்ள உலகம்

நம்மைச் சுற்றியுள்ள உலகில் உயிருள்ள காரியங்களும் உயிரற்ற காரியங்களும் உள்ளன. உயிருள்ளவை பிற உயிரினங்களையோ உயிரற்ற காரியங்களையோ சார்ந்திருக்கின்றன.

மனிதர்களாகிய நாமும் மற்ற உயிரினங்களும், உயிரற்ற காரியங்களும் கூடத் தொடர்ந்து நீடித்திருப்பதற்கு ஏதாவது வழியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்திருகின்றன. ஒரு உயிரற்ற காரியத்தை நாம் கவனமாக ஆராய்ந்தோம் என்றாலும் அது இருக்கின்ற நிலையில் இருக்க ஏதாவது அவசியமாகிறது. மற்றும் ஒவ்வொரு உயிரினமும், உயிரற்ற காரணிகளையோ மற்ற உயிரினத்தையோ சார்ந்திருக்கின்றது.

சிறந்த வழியில் தொடர்புக்கொள்ளவும், உறவுக்கொள்ளவும் மனிதர்களே உகந்தவர்கள், உலகில் எல்லாவற்றையும் நிர்வகிக்கவும் வல்லவர்கள்.

சிறப்புமிக்க இந்த அற்புதமான உலகில், மனிதர்கள் மாத்திரமே தங்களுக்கு தாங்களே கொண்டுள்ள நிறைய அமைப்புகளின் மூலம் சிறந்த முறையில் தொடர்புக்கொள்கின்றனர், உறவும் கொள்கின்றனர். உயிரினங்களிலேயே உலகில் உள்ள எல்லாவற்றையும் நிர்வகிக்க நிறைய அறிவுள்ளவர்களாய் மனிதர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இன்றைய உலகில் உள்ள மக்கள் சுயநலம் உள்ளவர்களாய், வளங்களைப் பொருத்தமற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர்.

மனிதர்கள் நிறைய அறிவு, மற்றும் நிறைய காரியங்களில் திறன் பெற்றிருந்தாலும், மதிப்பீடுகளும் சிந்தனைகளும் நபருக்கு நபர் வேறுபடுகிறது. இன்றைய உலகில் உள்ள மக்கள் சுயனலமுள்ளவர்களாய் நிறைய வித்தியாசமான ஆசைகளைக் கொண்டுள்ளனர், அதனால் வளங்களைப் பொருத்தமற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர், அது குழப்பங்களையும் மாறுபாட்டையும் ஏற்படுத்துகின்றது.

நிறைய மக்கள் பொருட்களைக் குவித்து சில புதிய காரியங்களைத் தேடுகின்றனர், அவர்கள் திருப்தியையும், கொடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தையும் கண்டறிவதில்லை.

மனிதர்களிடையே உள்ள சுயநலத்தினால், மக்கள் தங்களுக்காகக் பொருட்களைக் குவித்து, அவர்கள் செய்கின்ற காரியத்தில் தினந்தோறும் புதிய காரியங்களைத் தேடுகின்றனர். மக்கள் பொருட்களைக் குவிப்பதில் உண்மையான சந்தோசம் இல்லை என்பதை அவர்களின் வாழ்வின் முடிவு வரும் வரை உணர்வதில்லை. சுயநலம் உள்ள எந்த மனிதராலும் திருப்தியையும், மற்றவருக்குக் கொடுப்பதில் இருக்கும் சந்தோஷத்தையும் கண்டறிய முடியாது.

சமூக பொறுப்புணர்வு என்றால் என்ன?

சமூக பொறுப்புணர்வு என்பது ஒரு அமைப்பிற்கோ தனிப்பட்ட நபருக்கோ உள்ளார்ந்த ஒழுக்கவியல் பணிச்சட்டம் ஆகும். சமூகத்தின் நலனிற்கு நாம் பெருமளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய செயலாகும்.

நாம் அனைவருக்கும் குடும்பம், பள்ளி/வேலை, நட்பு முதலியவற்றில் பொறுப்புணர்வு உள்ளது. சமூக பொறுப்புணர்வு நிர்பந்தம் அல்ல அது தேவை, மற்றும் அது ஒழுங்கியல் பணிதிட்டமாய் ஒருவரின் உள்மனதை தூண்டி மற்றவருக்காக ஏதாவது செய்ய வைக்கிறது, அதனால் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உபயோகமடைகிறோம். அது சமூகத்தின் நலனிற்காக ஒரு அமைப்போ தனிப்பட்ட நபரோ தங்களுக்கு இருக்கின்ற கடமையைச் செய்ய அறிவுறுத்துகிறது.

சமூக பொறுப்புணர்வு என்பது ஒவ்வொரு நபரும் பொருளாதாரம் மற்றும் சூழலைச் சமநிலையோடு பராமரிக்க உதவும் கடமையாகும்.  

சமூக பொறுப்புணர்வு என்பது நிறைய நபர்களால் ஒரு விருப்ப தேர்வாக எண்ணப்படுகிறது ஆனால் அது அவசியமாகும். சமூக பொறுப்புணர்வு என்பது நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஆர்வங்களுக்கு ஏற்பச் சமூகத்தின் தேவைகேற்ப நிறைவேற்றவேண்டிய நமது கடமை என்பதை நாம் உணரும் பொழுதுதான், நாம் பொருளாதாரத்திற்கும் சூழலுக்கும் இடையில் சமநிலையோடு இருக்க முடியும். அப்படி இல்லாத போது சில நேரங்களில் பொருளாதாரம் அதிகம் மேம்படும் ஆனால் அதனால் சூழலில் ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்ய முடியாது.

அறநெறிகளை ஒன்று சேர்த்து கொண்டு, ஒவ்வொரு நபரும் சரியான விதத்தில் செயல்பட உதவுவதால், சுற்றி இருப்பவர்களுக்கு எதிரான விளைவுகளை அது குறைக்கிறது.

மனிதர்கள் ஒருவரோடொருவரும் சுற்றுபுறத்தோடும் ஒருங்கிணைந்து இருக்கிறார்கள். நம்முடைய படைப்பாற்றலை கொண்டும், புதுமைத்துவத்தை கொண்டும் செய்கின்ற அனைத்தும் நம்முடைய சுய மகிமைக்காக, அல்லது மற்றவரின் வியப்பிற்கும் உபயோகத்திற்குமே. ஒரு நபர் தம்மை மாத்திரம் திருப்திப்படுத்த எண்ணினால் அவர் குறைந்த உரிமைகள் உடையவரைத் தவறாக நடத்துவர். சமூக பொறுப்புணர்வு மாத்திரமே ஒரு நபர் அறநெறிகளை கொண்டு ஒருங்கிணையவும், சுற்றியிருக்கும் மற்றவருக்குக் கேடுகள் நிகழ்த்தாமல் இருக்கவும் செய்கிறது

சமூக பொறுப்புணர்வு சமூகத்தைக் குறித்து அனைவருக்கும் இருக்க வேண்டிய அற்ப்பணிப்பு. அது சமூகம், கலாச்சாரம், சுற்றுப்புற சூழல் முதலியவற்றிற்கு பங்களிப்பு அளிக்கிறது.

சமூக பொறுப்புணர்வு என்பது ஒரு நேர செயலோ குறுகிய கால செயலோ அல்ல. சமூகத்தில் நாம் ஒரு பங்காக அதில் சாதகமான காரியங்களை அனுபவிப்பதால், அது ஒவ்வொருவரின் மனப்பான்மையாக இருக்க வேண்டியது அவசியம். அது ஒவ்வொருவரும் சமூகத்தைக் குறித்து கொண்டிருக்க வேண்டிய அற்ப்பணிப்பும் ஆகும், அதன் மூலம் நேர்மறையான விதத்தில் சமூகத்திற்கு, கலாச்சாரத்திற்கு, சுற்றுப்புற பிரச்சனைக்கு நாம் பங்களிப்பு அளிக்க முடியும்.

ஏன் நமக்குச் சமூக பொறுப்புணர்வு அவசியம்?

வாழ்க்கை, உணர்வுகள் போன்ற பொருளல்லாத காரியங்களுக்குச் சமூக உயிரிகளாக மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றனர்.

இந்த உலகில் வாழ்வு முழுதும் தனியாகச் சுதந்திரமாக வாழப் போகிறேன் என்று யாராலும் கூற முடியாது. நாம் மனிதர்களாகச் சமூக உயிரினங்களாக நம்முடைய தேவைகளுக்காக ஒரு சில நேரங்களிலாவது மற்றவரைச் சார்ந்திருக்கின்றோம். விசேஷமாகப் பொருளல்லாத காரியங்களான உணர்வுகளை நம்முடைய காண்பிப்பதற்கு மற்றவர் அவசியம். எனவே ஆரோக்கியமான விதத்தில் நாம் உயிர்வாழ ஒருவருக்கு மற்றவர் அவசியமாகும், அதனால் சமூக பொறுப்பும் அவசியமாகும்.

மனிதர்கள் பொருள் சார்ந்த காரியங்களான உணவு, உடை, நிலம் முதலியவற்றை எளிதாகப் பெறுவதற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றனர்.

நாம் அனைவரும் நம்முடைய உணர்வுகளை மாத்திரம் பகிர்வதற்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கவில்லை, தெரிந்த தெரியாத விவசாயியின் மூலம் எளிதான முறையில் உணவைப் பெறுகிறோம், தெரிந்த தெரியாத நெசவாளர் மூலம் உடையைப் பெறுகிறோம், தெரிந்த தெரியாத கட்டுபவர் மூலம் வீட்டைப் பெறுகிறோம், எனவே நாம் ஒருவருக்கொருவர் சமூக பொறுப்போடு இருப்பதும் அவசியமாகும்

நாம் ஒருவரோடொருவர் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறோம், முழுமையான வாழ்விற்கு வெவ்வேறு தருணங்களில் நாம் பெற்றதை திரும்பவும் கொடுப்பது அவசியமாகும்.

நாம் ஏதாவது காரியத்தைச் செலவு செய்து பெற்றிருந்தாலும் இலவசமாய் பெற்றிருந்தாலும், தனிப்பட்ட விதத்திலோ தொழில் ரீதியாகவோ ஒருவரோடொருவர் இணைந்திருக்கின்றோம். எனவே முழுமையான திருப்தியான வாழ்விற்கு நாம் வெவ்வேறு சமயங்களில் நம் வாழ்வில் பெற்றுக்கொண்ட காரியங்களைத் திரும்பவும் அளிப்பதற்கு பொறுப்பாயிருக்கிறோம்.

யாருக்கு நாம் சமூக பொறுப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?

நமக்குச் சொந்தமான சூழலில் நாம் அனைவருக்கும் அனைத்திற்கும் சமூக பொறுப்பாளிகளாய் உள்ளோம்.

நாம் நமது சூழலில் நிறைய காரியங்களில் ஒருங்கிணைந்தவர்களாய் இருப்பதால், அதிலிருந்து பெறப்பட்ட நிறைய பொருட்களை அனுபவிக்கிறோம். அதனால் நாம் சமமாகவும் சமூகமாகவும் ஒருவருக்கொருவர் பொறுப்பாக இருக்கிறோம், ஏனெனில் மக்கள் தான் பொருட்களைத் தயாரிப்பவராகவோ அனுபவிப்பவராகவோ உள்ளனர். நாம் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நமக்கு உதவுவதால் நமது சூழலில் அனைத்திற்கும், மற்றவர்களின் நலனுக்கும் நாம் பொறுப்பாக இருக்கின்றோம்.

முதலில் நமது குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள், உடன் பயிலுபவர்கள்/ பணிபுரிபவர்கள் என நம்முடைய வாழ்வில் நேரடியாக ஈடுபடுபவர்கள்.

ஒரு நபர் தமக்கு நெருங்கியவரோடு தொடர்புக்கொண்டு அவர்களுக்குப் பொறுப்பாக இருக்க முடியாத பொழுது, அவர்களால் வெளியில் உள்ள மற்றவர்களுக்குப் பொறுப்பாக இருக்க முடியாது. அப்படியாக ஒரு நபர் மற்றவருக்குப் பொறுப்பாக இருக்க முயன்றாலும் தொடர்ந்து அவ்வாறிருக்க இயலாது. எனவே முதலாவது, ஒருங்கிணைந்தவர்களாய் நமது வாழ்வில் நேரடியாக முக்கிய பங்கு வகிக்கின்ற நமது குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, உடன் இருப்பவர்களுக்குப் பொறுப்பாக இருப்பது அவசியம்.

தொடர்ந்து நம்முடைய உணவைத் தயாரிக்கின்ற விவசாயிக்கு, நம்முடைய துணியை நெய்கிற நெசவாளருக்கு, நமக்குக் காற்று தருகின்ற மரத்திற்கு, நமக்கு நீர் தருகின்ற நீர்நிலைகளுக்கு மற்றும் மறைமுகமாக நம்மோடு ஈடுபடுகின்ற அனைத்து மூன்றாவது நபர்/ பொருள் அல்லது உலகில் உள்ள அனைத்திற்கும் பொறுப்பாக இருக்கலாம்.

நாம் அனைவரும் நல் வாழ்விற்கான சில மதிப்புமிக்க காரியங்களை இலவசமாக அனுபவிக்கிறோம். அது இலவசமாக இருப்பதால், அதினுடைய மதிப்பை நாம் எளிதில் மறந்து, அதைக் காப்பதில் மிகச் சிறிது கவனம் செலுத்துகிறோம், மற்றும் ஆபத்துகளைத் தடுப்பதும் இல்லை. நாம் உபயோகிக்கின்ற அனைத்திற்கும், நாம் கடந்துவருகின்ற ஈடுபடுகின்ற அனைத்திற்கும், நேராகவோ மறைமுகமாகவோ பொறுப்பாக இருக்கிறோம். யார் நம்முடைய உணவிற்கான காரியங்களைத் தயாரிக்கிறார்கள் என்பதை நாம் அறியவில்லை என்றாலும், உற்பத்தி செய்பவர் இல்லையெனில் உணவிற்கான, பொருட்கள் இருக்காது, அதனால் எந்த விலைக்கொடுத்தாலும் நம்மால் உணவைப் பெற முடியாது. நாம் நமது துணியை நெய்யும் நெசவாலரை பார்த்திராவிட்டாலும், நம்மை நாமே அழகாக உடுத்திக்கொள்வது அவர்களாலேதான். நாம் சுவாசிப்பதற்க்கான காற்றை அளிக்கும் மரம், நாம் அருந்துவதற்கான நீரை அளிக்கும் நீர்நிலை, மறைமுகமாக நமக்கு உதுவுகின்ற வகையில் இந்த உலகில் உள்ள அனைத்து மூன்றாவது நபர்களையும் காரியங்களையும் நாம் அற்ப்பணிப்புள்ள பொறுப்போடு கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.  

எங்கு நாம் சமூக பொறுப்புணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?

நாம் நமது குடும்பத்திலும் வீட்டிலும் பொறுப்புள்ளவர்கள்.

குடும்பத்தில் உள்ள நபர்களே ஒருவர் உருவாவதற்கும் திருத்தப்படுவதற்க்கும் முதல் குழுவாக உள்ளனர். வீடு தான் நமது வாழ்வில் முதல் இடமாயும் சிறந்த இடமாயும் உள்ளது, அதில் நாம் விரும்புகின்ற செயல்களைச் செய்வதற்கான சுதந்திரமும், அதனோடு வசதியாக இருப்பதான உணர்வும் உள்ளது. அதனால் நாம் நமது குடும்பத்திலும் வீட்டிலும் பொறுப்புள்ளவர்கள்.

நாம் நமது பள்ளியில்/ கல்லூரியில்/ வேலையிடத்தில் பொறுப்புள்ளவர்கள்.

நாம் வீட்டை அடுத்து  பள்ளி/ கல்லூரி/ வேலை இடம் போன்றவற்றில் நாம் ஈடுபட்டிருக்கும் காலவரையை பொருத்து அதில் அதிக நேரம் செலவழிக்கிறோம். எனவே நாம் அந்த இடங்களில் நேர்மறை விளைவுகளுக்காகவும் பயனுக்காகவும் மதிப்பீடுகளுடனும் நெறிகளுடனும், பொறுப்போடு இருப்பது அவசியமாகும்.

நாம் சமூகத்தில் பொறுப்புள்ளவர்கள்.

வீடு மற்றும் பள்ளி/கல்லூரி/வேலையிடம் மற்றும் வேறு நிறைய காரியங்கள் நம்முடைய சமூகத்திற்கு கீழ்தான் உள்ளன. நம்முடைய தேவைகளை அணுக, ஏற்ற விதத்தில் பெற அது நமக்கு உதவுகிறது. எனவே நாம் நம்முடைய சமூகத்தில் உள்ள அனைத்திற்கும் அனைவருக்கும் பொறுப்புள்ளவர்கள்.

நாம் நம்முடைய தெருவில்/ நகரில்/ மாநிலத்தில்/ நாட்டில் பொறுப்புள்ளவர்கள்.  

சமூகம் என்பதில் ஒரு மாவட்டம், மாநிலம், தேசம் அல்லது ஒரு பெரிய குழு மக்கள் இருக்கிறார்கள், அதை நாம் சுலபமாகத் தொடர்புக்கொள்ளும் நபர்களைக் கொண்டு வரையறுப்பது கூடாது. நாம் நம்முடைய தெருவிற்கு பொறுப்பாளிகளாக இருப்பது அவசியம் ஏனெலில் நம் வீடு அங்குள்ளது, நாம் நகருக்கோ மாநிலத்திற்கோ நாட்டிற்கோ பொறுப்பாளிகளாய் இருப்பது அவசியம் ஏனெனில் அதின் அரசியலமைப்பிற்கும் நிர்வாகத்திற்கும் உட்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கிறோம்.

நாம் சுற்றுபுறத்திலும் முழு உலகிலும் பொறுப்புள்ளவர்கள்

பெருமளவில் காரியங்களை நோக்கினால், நாம் அனைவரும் பூமியில் வாழ்கின்றோம், அதைச் சரியான விதத்தில், தொடர்ந்து நிலைத்திருக்க கூடிய விதத்தில் ஒவ்வொருவரின் நலனிற்காகப் பராமரிப்பதும் அவசியமாகும். பூமியை பாதிக்கும் ஒரு நபரின் தவறு, நிகழ் காலத்திலும் எதிர் காலத்திலும் அதில் வாழும் அனைவரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். நமது சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியிலிருந்து முழு உலகம் வரை பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்

நாம் எப்பொழுது சமூகத்திற்கு பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்?

நாம் நம்முடைய குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, பள்ளி/ கல்லூரி/ வேலையிடத்தில் உள்ளவர்களுக்கு, நெருங்கியவர்களுக்கு பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

எல்லோரும் வழக்கமாகப் பொருள் சார்ந்த பொருள் சாராத காரியங்களை நம்மைச் சுற்றி நெருங்கியவரோடு பகிர்கிறோம், பங்களிப்பு அளிக்கிறோம். எனவே நமது குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, பள்ளி/ கல்லூரி/ வேலையிடத்தில் உள்ளவர்களுக்கு நெருங்கியவர்களுக்கு பொறுப்புணர்வை காண்பிப்பதற்கு விசேஷித்த நேரம் அவசியமில்லை. நமக்கு நெருங்கியவர்களிடத்து எப்பொழுதும் பொறுப்போடு இருப்பது அவசியமாகும்.

நம்முடைய சமூகத்திற்கு/ தெருவிற்கு/ நாட்டிற்கு, சூழலுக்கு, மூன்றாம் நபர்களுக்கு எப்பொழுதும் பொறுப்புடன் இருக்க முடியாவிட்டாலும் ஏதவாவது தீவிர நெருக்கடி/ இயற்கை பேரழிவு  ஏற்படும் பொழுதாவது பொறுப்பாக இருக்கலாம்.

நமக்கு நெருங்கியவராயினும் இல்லையெனிலும் நாம் எப்பொழுதம் அனைத்துக் காரியங்களுக்கும் சுற்றியுள்ள அனைத்து நபர்களுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டும், அனைத்து மக்களும் இந்தப் பூமியில் நம்மோடு வாழ்கிறார்கள் என்ற ஒரு காரணமே அதற்குக் போதும். ஆனால் தனிப்பட்ட காரியங்களில் நாம் பிடிப்பட்டுள்ளதால் அது எப்பொழுதும் சாத்தியமாக இருக்காது, அதனால் நாம் ஏதவாவது தீவிர நெருக்கடி/ இயற்கை பேரழிவின் பொழுதாவது நம்முடைய சமூகத்திற்கு/ தெருவிற்கு/ நாட்டிற்கு, சூழலுக்கு, மூன்றாம் நபர்களுக்குப் பொறுப்பாக இருக்கலாம்.

நாம் எப்படி சமூகத்திற்கு பொறுப்புடன் இருக்கலாம்?

குடும்பம்/ நண்பர்கள்/ உறவினர்கள்:

Ø நம்முடைய பெற்றோருக்கும்/ உறவினருக்கும் வீட்டு வேலைகளில் நாம் உதவலாம், சகோதரருக்கு/ நண்பருக்குப் படிப்பு அல்லது வேலை முதலிய காரியங்களில் உதவலாம்.

நம்மால் இயலாத காரியங்களில் பெரும்பாலும் நமது பெற்றோர் அல்லது உறவினர்கள் நமக்கு உதவ வேண்டும் என விரும்புவோம், ஆனால் அவர்களுக்குத் தேவையான காரியங்களில், நமக்கு நல்ல சூழல் கொடுக்கப்படும் காரியங்களில் நாம் அவர்களுக்கு உதவுவதில்லை. நாம் அவற்றிலிருந்து சில உபயோகமான காரியங்களைப் பெறுகிறோம், எனவே வீட்டு வேலைகளில் அவர்களுக்கு உதவுவலாம். நாம் நம்முடைய நண்பர்களுக்கோ சகோதரருக்கோ அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள படிப்பிலோ மற்ற காரியங்களிலோ உதவலாம்.

நாம் அன்பு, அக்கறை, ஊக்கம், யோசனைகள் முதலியவற்றை வேண்டிய நேரத்தில் பகிர்ந்து உணர்வு ரீதியாக உதவலாம்.

நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் போன்ற நபர்களே நாம் வெவ்வேறு காரியங்களைப் பகிர்வதற்கு ஒருங்கிணைந்தவர்களாய் உள்ளனர். அவர்களால் நாம் அன்புக்கூறப்படுகிறோம் மற்றும் பராமரிக்கப்படுகிறோம், அவர்களுக்குத் தேவைப்படும் பொழுது அவற்றைத் திரும்பக் கொடுப்பதும் அவசியமாகும். நிறைய நேரங்களில் நிறைய நபர்கள் நம்மை வியந்து பின்பற்ற வேண்டுமென விரும்புவோம், நம்மோடு நீடித்து வரும் உறவுகளைப் புறக்கணிப்போம். சமூகரீதியாகவும் உணர்வுரீதியாகவும் நமக்கு நெருங்கியவர்களுக்கு தேவைப்படும் போது அன்பு, அக்கறை, ஊக்கம், மற்றும் சிறந்த தீர்வுகள் அளித்து, அவர்களுக்கு உதவுவது அவசியமாகும்.     

நமக்குப் பிரியமானவர்களுக்கு தேவைப்படும் பொழுது நம்முடைய உடைமைகளைப் பகிர்வது அவசியமாகும்.

எப்பொழுது உண்மையான அக்கறை உள்ளதோ, சுற்றியுள்ள மக்களோடு நல்ல உறவும் இருக்கும், மற்ற பொருள் சார்ந்த காரியங்களைப் பிடித்துக்கொள்வதில் கவலைக்கொள்ள மாட்டோம். நாம் பொறுப்புள்ளவர்களாய் இருக்கும் போது நம்முடைய உடைமைகளைத் தேவையில் உள்ள நமக்கு நெருங்கியவர்களோடு தானாகவே பகிர்வோம்.

Ø நம்முடைய பெற்றோர்/ நண்பர்கள்/ உறவினர்கள் சரியில்லாத, ஏற்க முடியாத காரியங்களைச் செய்யும் போது சரியான அறநெறிகளைக் கொண்டு சரி செய்ய வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ நாம் அனைவரும் நிறைய தவறுகள் புரிகிறோம். எனவே யாராக இருப்பினும் மற்றவர் சொல்வதற்கு இசைந்து அதை ஒத்து இருக்க வேண்டும் என அவசியமில்லை. நம்முடைய பெற்றோர் அல்லது நண்பர் அல்லது உறவினரின் மதிப்பீடுகள் அறநெறிகளைக் கொண்டு இல்லாத போது, அதைச் சரி செய்வது அவசியமாகும். அவர்கள் சரியானதும் ஏற்புடையதுமான செயல்களையும் சிந்தனையையும் கொண்டிருக்கச் செய்ய நாமே பொறுப்புள்ளவர்கள்.

பள்ளி/ கல்லூரி/ வேலையிடம், சமூகம், நாடு:

Ø நாம் நம்முடைய பள்ளி/ கல்லூரி/ வேலையிடத்திற்கு நேரத்திற்கு செல்ல வேண்டும், அங்கிருந்து நேரத்திற்கு புறப்பட வேண்டும். பொது இடங்களில் உள்ள சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டும், மற்றும் அங்குச் செல்வதற்கு முன்பே அதை ஒற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை மறவாமல் இருக்க வேண்டும்.

எல்லோரும் நாம்  இருக்கும் நிலைக்கு ஏற்றார் போலப் பள்ளி அல்லது கல்லூரி அல்லது வேலையிடத்தில் பங்குவகிக்கிறோம். நாம் அதிலிருந்து சிலவற்றை உபயோகிப்பதாலும், அதற்கு உபயோகமாகச் சில காரியங்களைச் செய்வதாலும், அதற்குப் பொறுப்பாளிகளாக இருக்கிறோம். நாம் சரியான நேரத்தில் வருவதும் போவதுமாகத் தவறாமையோடு இருந்து நேரத்தைச் சிறந்த வகையில் நிர்வகிப்பதும், ஒருவருக்கொருவர் பொறுப்பாக இருப்பதும் அவசியமாகும். ஒரு இடத்தில் சேரும் பொழுதே அதில் உள்ள சட்ட திட்டங்களைக் கைக்கொள்வதை நாம் ஏற்கனவே ஒற்றுக்கொண்டிருக்கிறோம், எனவே ஒரு நேர்த்தியான சூழல் இருப்பதற்கு அதைக் கடைப்பிடிப்பதும் அதற்குக் கீழ்படிவதும் அவசியமாகும்.

Ø நாம் அனைவரையும் ஏற்க வேண்டும், ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க வேண்டும், மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.

நாம் ஒரு நோக்கத்திற்காகப் பொதுவான இடத்தில் கூடும்போது நம் மத்தியில் எப்பொழுதும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை கவனித்து உணரலாம். ஒருவருக்கொருவர் பொறுப்பாக இருப்பதற்கு முன்னர் ஒருவரை முதலில் இன்னொருவர் ஏற்பது அவசியமாகும். சில நேரங்களில் நாம் ஒருவரை ஒருவர் தாங்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும். மற்றும் நாம் ஒருவரை ஒருவர் நோக்குவதும் மதிப்பதும் கூட அவசியமாகும், விசேஷமாக மூத்தவர்களையும் பெரியவர்களையும் மதிப்பது அவசியம்.

Ø அறநெறிகளை கொண்ட மதிப்பீடுகளை நாம் பின்பற்ற  வேண்டும்.

ஒரு நபர் அல்லது நிறுவனம் தமக்குள் இருக்கும் உள்ளுணர்வை மறுத்து அறநெறிகளை மீறினாலும், நாம் எது சரியோ அதற்காக நிற்பதும், பொறுப்பானவர்களாக மற்றவரைச் சரியான பாதையில் நடத்துவதும் அவசியமாகும்.

Ø தனிப்பட்ட பொருட்களை நாம் அக்கறையோடு கையாள்வது போலப் பொதுவான பொருட்களையும் நாம் கையாள வேண்டும்.  

எல்லோரும் நமக்குச் சொந்தமான காரியங்களை, அதிக நாட்கள் உபயோகிக்க கூடிய விதத்தில் அதிக கவனத்துடன் கையாளுவோம், ஆனால் பொதுவான பொருட்களை உபயோகிக்கும் பொழுது கொஞ்ச கவனம் மாத்திரம் செலுத்துவோம் அல்லது கவனமே இல்லாமல் இருப்போம். தனிப்பட்டதோ அல்லது பொதுவானதோ நாம் பொருட்களைச் சரியான விதத்தில் கையாளுவதில் பொறுப்போடு இருக்க வேண்டும்.

Ø நாம் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொண்டப் பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.

பொதுவாகச் சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது, நாம் அனைவரும் அதைக் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை, அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். தனிப்பட்ட விதத்திலோ அல்லது குழுவாகவோ அது எப்படி கொடுக்கப்பட்டிருந்தாலும், நாம் ஒரு காரியத்தை ஏற்றிருக்கும் பொழுது அதனை எந்த விலை கொடுத்தாவது நிறைவேற்றுவது அவசியமாகும்.  

Ø நாம் புதுமைத்துவம் உள்ளவர்களாய் நம்முடைய தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும்.

பொறுப்போடு இருப்பதென்பது நம் தலைமேல் இருக்கும் காரியங்களைத் திரும்பத் திரும்பச் செய்வது மாத்திரமல்ல. நாம் புதுமையான வெவ்வேறு காரியங்களை முயற்சித்து, முன்னேற்றத்திற்கு பங்களிக்க ஒருவர் மேல் ஒருவர் உண்மையான கரிசனையோடு, எதிர்பார்ப்பிற்கு மேல் சில மேம்பட்ட காரியங்களைச் செய்வதாகும்.

Ø தேவையில் உள்ள மக்கள் அவர்கள் தேவையைத் தாங்களே கண்டடையும் வகையில் உதவ வேண்டும். நாம் மற்றவருக்கு உதவவில்லை என்றாலும், இடையூறாக இருத்தலாகாது.

எப்பொழுதும் நம்மைச் சுற்றி வெவ்வேறு தனிப்பட்ட சமூக காரணங்களால் சரியான உரிமைகள் கிடைக்க பெறாத மக்கள் உள்ளனர். நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புள்ளவர்களாகத் தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து, அவர்களின் தேவைகளை அவர்களே சந்திக்க உதவலாம். நாம் தேவையில் உள்ளவர்களுக்கு உதவவில்லை என்றாலும், அவர்களுக்குத் தடையாக இருக்க கூடாது.

Ø நாம் நம்முடைய நேரத்தை வீணாக்கக் கூடாது மற்றும் நம்முடைய உடை அலங்காரத்தில், மனப்பான்மையில், நடத்தையில் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

எல்லோரும் நமக்கு நாமே பொறுப்பாளிகள். சூழ்நிலைகள் நம்மைப் பாதித்தாலும், நாம் செலவழிக்கும் நேரம் பற்றி நமக்குத் தெரியும், மற்றும்  நாமே அதை நிர்ணயிக்கிறோம். நாம் நம்முடைய நேரத்தை உபயோகிக்க நாமே பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். சிந்திக்கும் விதத்தில், உடை உடுத்துவதில், செயல்படுவதில், பொறுப்புகளைக் கொடுப்பதில், பொறுப்புகளை எடுத்துக்கொள்வதில் நாம் தாழ்மையானவர்களாயும் மதிக்கப்பட கூடியவர்களாக இருப்பதும் அவசியம்.

சுற்றுப்புற சூழல்/ சூழ்நிலை/ இயற்கை:

Ø நாம் மருத்துவ கழிவுகள், மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் போன்றவற்றிற்கு ஏற்றச் சரியான முறைமைகளைக் கொண்டு, கழிவுகளைப் பாதுகாப்பாக நிர்வகிக்க வேண்டும்.

நம்மில் நிறைய நபர்கள் தேவையில்லாத காரியங்களை அப்படியே தூக்கி எறிகிறோம், யாரும் அதைச் சரியான விதத்தில் அப்புறப்படுத்தும் பொறுப்பை ஏற்காவிடில் அது ஏற்ற இடமின்றி  அப்படியே இருக்கும் என்பதை பெரிதும் யோசிப்பதில்லை. நாம் நம்முடைய சுற்றுப்புறச் சூழலுக்குப் பொறுப்புள்ளவர்களாக, வெவ்வேறு கழிவுகளைச் சரியான வழியில் சரியான இடத்தில் அப்புறப்படுத்துவது அவசியமாகும்.

Ø நம்மைச் சுற்றியுள்ள நிலத்தினை சரியாக உபயோகித்து, இயற்கை இயற்றிகளை கொண்டு பாதுகாக்க வேண்டும்.

இன்று மக்கள் கனிமங்களைத் தோண்டி எடுக்கவும், கட்டிடங்களைக் கட்டவும், அழியாத தன்மையுடைய செயற்கை பொருட்களைப் பயன்படுத்தி, நிறைய இயற்கை வாழ்விடங்களை இடித்தும் அழித்தும் விட்டார்கள். நாம் கொண்டிருக்கும் நிலம் நம்மைப் பாதுகாக்கிறது, நாம் உண்ணும் உணவைத் தயாரிக்க உதவுகிறது, அதனால் இயற்கை இயற்றிகளை உபயோகித்து சரியான விதத்தில் பொறுப்போடு நிலத்தைப் பராமரிப்பது அவசியமகும்.

Ø காற்று மாசுப்படுவதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

மனிதர்கள் மிக எளிதில் ஒரு மரத்தை அழித்து, காகிதங்கள், மரசாமான்கள், உறைவிடங்கள் உண்டாக்குகின்றனர். நிறைய நேரங்களில் அதை அழிப்பதில் இருக்கும் விளைவையும், அது திரும்ப உற்பத்தியாக எடுக்கும் உழைப்பையும் நாம் உணருவதில்லை. நாம் மரங்களிலிருந்து காற்றை சுவாசிப்பதால் அதற்குப் பொறுப்பாகிறோம். மனிதர்களால் உண்டாக்கப்படுகின்ற மாசு சுற்றுப்புற சூழலில், காற்றில் கலக்காதவாறு பாதுகாப்பது அவசியமாகும்.

Ø நாம் புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலத்தைப் பெருமளவில்  குறைத்து, புதுபிக்க கூடிய ஆற்றல் மூலத்தை உபயோகிக்க வேண்டும்.

எல்லா பொருட்களும் தீடீரெனத் தானாகப் புதுபித்து தனக்கு தானே பதிலாகிக் கொள்ள பூமியில் இடம் இல்லை. எனவே ஒரு பொருள் உபயோகிக்கப்பட்டால், அது முடிந்தாயிற்று, மற்றும் அது திரும்பவும் பதிலாக்கப்பட நிறைய காலம் தேவைப்படும். எனவே நீடிய வாழ்வாதாரத்திற்கும், நம்முடைய பொறுப்புணர்வை காண்பிப்பதற்க்கும் புதுபிக்க இயலாத ஆற்றல் மூலக்கூறுகளை விட புதுபிக்க கூடிய ஆற்றல் மூலக்கூறுகளை உபயோகிப்பது நல்லதும் அவசியமுமாகும்.

Ø நாம் மரங்கள் வெட்டுவதை தவிர்த்து, நிறைய மரங்களை நட வேண்டும்.

சுற்றுப்புறச்சூழலில் பொறுப்புள்ளவர்களாகவும் பங்குள்ளவர்களாகவும் அதிலிருக்கும் அனைத்திற்கும் நாமே பொறுப்பாளிகள். நாம் மரங்களை வெட்டி உபயோகிப்பதற்கு பதில் வேற்று வழிகளைக் கண்டறியலாம், மற்றும் நாம் வெட்டும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாகப் பொறுப்புணர்வோடு நிறைய மரங்களை நடலாம்.

Ø நீர்நிலைகளைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் சுய நோக்கத்திற்காகத் தேவையில்லாத கட்டிடங்கள் கட்டுவதையும் நிலத்தை நிரப்புவதையும் தவிர்க்க வேண்டும்.

சுயநலத்தால் இயல்பற்ற மனித செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் நிறைய பாதிக்கப்படுகிறது, அது சுற்றுப்புறத்தில் நிறைய சமநிலையின்மையை உண்டாக்குகிறது. நாம் சுற்றுப்புறத்தில் நிறைய நன்மைகளை அனுபவிக்கிறோம், அதனால் நீர்நிலைகளைப் பராமரிப்பது, கட்டிடங்களைக் கட்ட தாழ்நிலங்களை நிரப்புவதை தவிர்ப்பது, உயிருள்ள மற்றும் உயிரற்ற காரியங்களுக்கு இடையூறு செய்வதை தவிர்ப்பது, போன்றவை அவசியம்.

Ø நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலுக்கு இடையூறு செய்யக் கூடாது, மற்றும் இயற்கை தன்னுடைய சமநிலையில் தொடர்ந்து இருக்க உதவ வேண்டும்.

நாம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து காரியங்களிலும் பொறுப்புள்ளவர்கள், நாம் புதுமையானக் காரியங்களைக் கண்டறியும் பொழுது சுற்றுப்புறத்தில் நிறைய காரியங்கள் மாற்றமடைகிறது, இயற்கையை சமநிலையோடு பராமரிக்க, அது நிலைப்பாட்டில் இருப்பதற்கு உதவ நாமே பொறுப்பாளிகள். சுற்றுச்சூழல் இடையூர் இல்லாமல் இருப்பதை நிச்சயிக்க நாமே பொறுப்புள்ளவர்களாயும், அதற்கு முதல் நபர்களாயும் உள்ளோம்.

சமூக பொறுப்புணர்வின் பயன்கள்:

மனிதர்களுக்கும் சுற்றியுள்ள உயிருள்ள/ உயிரற்ற காரியங்களுக்கும் இருக்கும் நமது பொறுப்பினை நாம் அனைவரும் உணரும் பொழுது முழு உலகமே இன்பமான இடமாகும்.

இந்த முழு உலகிலும் ஆக்கப்பூர்வமான மற்றும் அழிக்கக்கூடிய முக்கிய காரியங்களுக்கு மனிதர்களே பொறுப்பாளிகள். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சுயநலத்தைக் கொன்று, கரிசனையோடு மற்றவர்களுக்கும் நம் சுற்றுபுறத்திற்கும் பொறுப்புணர்வை காண்பிக்கும் பொழுது, நம்மிடைய சமூக பிரச்சனைகள் குறையும்.  

நம்முடைய பொறுப்பினை நாம் உணரும் போது, இயற்கை சமநிலையுடன் இருக்கும். அனைவரும் திறனை/ அறிவை/ அனுபவத்தைப் பொதுவான நன்மைக்குப் பயன்படுத்துவோம், சுயநலத்தினால் பெறுவதற்காக அல்ல.

நிறைய நேரங்களில் நாம் நம்மை மாத்திரமே கருத்தில் கொண்டு, மற்றவர்களை நம்முடைய லாபத்திற்கு உபயோகிப்போம். எப்பொழுது நாம் அனைவரும் மற்றவரிடத்தில் நமக்கிருக்கும் பொறுப்பினை உணர்கிறோமோ, அப்பொழுதுதான் அனைத்தையும் பொது நன்மைக்காக சரி சமமாக ஒருவரோடு ஒருவர் பகிர முடியும். சமநிலையுடன் அனைவருக்கும் அனைத்து வளங்களும் கிடைக்கப்படும் நிலையை அடையவும் முடியும்.

நம்முடைய பொறுப்பினை நாம் கண்டுணரும் பொழுது, விளைவாக நம்முடைய மனப்பான்மையும் நம்முடைய நடத்தையும் நேர்மறையாக மாறும், மற்றும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான நம்முடைய சுயநலத்தை நாம் அகற்ற முடியும்.

எல்லா பிரச்சனைகளுக்கும் மூலக் காரணம் பெருமையும் தன்னை அனைவருக்கும் மேல் பெரியவராகக் காண்பிக்க நினைப்பதுமாகும். காரியங்களின் அழியும் தன்மையைக் கண்டுணர்ந்து அறியும் பொழுதுதான், நம்மால் பெருமையிலிருந்து வெளிவர முடியும். நம்முடைய பொறுப்பினை நாம் கண்டுணரும் பொழுதும், ஒருவரை ஒருவர் அங்கீகரித்து நேர்மறையான விதத்தில் நம்முடைய மனப்பான்மையையும் நடத்தையையும் மாற்ற முடியும்.

நம்முடைய பொறுப்பினை நாம் கண்டுணரும் பொழுது, எல்லா வேறுபாடுகள் நிமித்தமும் அனைவரும் சமமான உரிமைகளை அனுபவிக்க முடியும்.

நம்மிடையே உள்ள வேறுபாட்டிற்கு காரணம் சுரண்டலும், சில மக்களை அவர்கள் தங்கள் உரிமைகளை அனுபவிக்க கூடாமல் தடுப்பதும் ஆகும். நாம் பொறுப்பாக இருக்கும் பொழுது, அறியாமையுள்ள மனிதர்கள் அவர்களின் உரிமைகளைத் தெரிந்துக்கொள்ளச் செய்வோம், மற்றும் அவர்களைச் சுரண்டாமல் நிலைநிறுத்த உதவுவோம்.

யுத்தங்கள் முடிவடையும், அன்பு மற்றும் மகிழ்ச்சியின் நறுமணம் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அனைவரிடத்தும் இருக்கும்.

ஒருவருக்கொருவர் பொறுப்பாக இருப்பதன் மூலம், நாம் வேறுப்பாடுகளையும் குறைப்பாடுகளையும் ஏற்று, மற்றவரின் பலங்களை நிறைய காரணிகளின் நிமித்தம் ஒப்புக்கொள்ள முடியும். ஒருவருக்கொருவர் ஒற்றுமையும் நல்லிணக்கமும் இருப்பதால், யுத்தங்களுக்கு அவசியம் இருக்காது, அன்போடும் மகிழிச்சியோடும், மக்கள் மற்றவரின் நலனை விரும்புவர்.


Comments