6. மனஅழுத்த மேலாண்மை

6. மனஅழுத்த மேலாண்மை

 (கடுமையான சூழல்களைச் சமாளிப்பதற்கு தேவையான முக்கியமான திறன்)

முன்னுரை

சிரமமானதும் கோரிக்கைகள் நிறைந்ததுமான சூழல்கள் இருக்கும் பொழுது உள்ள உணர்வுகளின் சிரமம் அல்லது பதற்றம் மன அழுத்தம் ஆகும்.

ஒரேநேரத்தில் பல காரியங்கள் சூழ்ந்துக்கொள்ளும்பொழுதும், சில ஏமாற்றங்கள் உண்டாகும் பொழுதும், சில நேரங்களில் நாம் அனைவரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். மன அழுத்தம் உணர்வுகளின் சிரமத்தாலும், பதற்றத்தாலும் உண்டாகும் மன சோர்வாகும். எதிர்மறையான சூழ்நிலைகளிலும், நமது நிலைக்கு மிஞ்சின எதிர்பார்புடைய சூழ்நிலைகளிலும் மன அழுத்தம் உண்டாகலாம்.

மனஅழுத்தம் என்பது உடல் மனம் சார்ந்த சமநிலையில் குறுக்கிடுகின்ற எதிர்வினையாகும். அது வாழ்வில் எப்பொழுதும் இருக்க கூடியதுமாகும்.

ஒரு நபர் ஆரோக்கியமாகச் செல்வ சிறப்புடன் இருப்பதால் மாத்திரம்  நல்ல விதத்தில் உணர்வதில்லை, அவர்களின் சமூக மற்றும் உணர்வியல் தேவைகள் சந்திக்க படுவதாலும் தான் திருப்தியாய் உணர்கிறார்கள். மனம் சர்ந்த காரியங்களும் உடல் சர்ந்த காரியங்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. அதன் சம நிலையில் ஏதாவதொரு இடையூறு ஏற்படும் பொழுது, அதன் எதிர்வினையே மன அழுத்தமாக இருந்து வாழ்வு முழுவதும் தொந்தரவாகிவிடுகிறது. மன அழுத்தம் வாழ்வு முழுவதும் இருப்பதாகும்.

மன அழுத்தமுள்ள ஒரு காரியம் மனிதனின் உடலில் எதிர்வினையாக அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஆகிய ஹார்மோன்களைச் சுரக்க செய்து, உடலில் சீறி பாயச் செய்கிறது.

உணர்ச்சிவசப்படச் செய்யும் சூழலிலும் சிரமமானசூழலிலும்நம்முடைய ஆற்றலைச் சந்தேகிக்கும் பொழுது, நமது இதயம் மன அழுத்தம் காரணமாக வேகமாகத் துடிப்பதை உணரலாம். எதிர்வினையாக உணர்வுகளின் விளைவினால் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் ஆகிய ஹார்மோன்கள் சுரந்து, உடலில் பாய்கிறது. 

மன அழுத்தத்தின் அறிகுறிகள்:

உடல் சார்ந்த அறிகுறிகள்

மனஅழுத்தத்தினால் உண்டாகும் ஹார்மோன்களின் எதிர்வினைகளால் ஒரு நபர் நிறைய உடல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

·         வலி மற்றும் நோவு

       வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்

       குமட்டல் மற்றும் மயக்க உணர்வு

       நெஞ்சு வலி மற்றும் வேகமான இதய துடிப்பு

       பாலுணர்வுச் செயல்பாடுகளை இழத்தல்

       அடிக்கடி உண்டாகும் சளி

உணர்வு சார்ந்த அறிகுறிகள்:

மன அழுத்தம் என்பதே உணர்வியல் பாதிப்பாக இருக்கிறது அது இன்னும் சில உணர்வுச் சார்ந்தப் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. பின்வருவன மன அழுத்தத்திற்குரிய உணர்வுகள் சார்ந்த அறிகுறிகளாகும்.

·         துயர்நிலை

       எரிச்சல் அல்லது முன்கோபம்

       கிளர்ச்சி, ஓய்வெடுக்க முடியாமை

       அதிகமான உணர்வுகள்

       தனிமை மற்றும் தனிமையான உணர்வு

       மனச்சோர்வு அல்லது மகிழ்ச்சியின்மை

அறிவாற்றல் சார்ந்த அறிகுறிகள்

மன அழுத்தம் நம்முடைய சிந்திக்கும் ஆற்றலைப் பாதிக்கிறது, அதுவே உடல் மற்றும் உணர்வு சார்ந்த பிரச்சனைகளை உண்டுப்பண்ணி அறிவாற்றலையும் பாதிக்கிறது.   பின்வருவன மன அழுத்தத்திற்குரிய அறிவாற்றல் சார்ந்த அறிகுறிகளாகும்.

       ஞாபக பிரச்சனை

       கவனம் செலுத்துவதில் இயலாமை

       மோசமான கனிப்பு திறன்

       எதிர்மறை காரியங்களை மட்டும் பார்த்தல்

       ஏக்கம் அல்லது மாறும் சிந்தனைகள்

       தொடர்ந்து வருத்தப்படுதல்

நடத்தை சார்ந்த அறிகுறிகள்

மன அழுத்தம் காரணமாக உடல், மனம், மற்றும் அறிவாற்றல் பாதிக்கப்படுவதால், நமது நடக்கையும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. ஏனெனில் நமது செயல்கள் சிந்தனைகளின் காரணமாகவே இருக்கின்றன. பின்வருவன மன அழுத்தத்திற்குரிய நடத்தை சார்ந்த அறிகுறிகளாகும்.

       நிறைய அல்லது குறைவாகச் சாப்பிடுவது

       நிறைய அல்லது குறைவாகத் தூங்குவது

       பொறுப்புகளைத் தள்ளிபோடுவது அல்லது புறக்கணிப்பது

       மது, சிகரெட், போதை பொருட்களைத் தளர்வடைய பயன்படுத்துவது

       பதட்டமான பழக்கங்கள் (-டு. நகம் கடிப்பது, மிக நிதானமாக அல்லது வேகமாகச் செயல்படுவது)

       மற்றவரிடமிருந்து தனிமைப்படுத்துவது


மன அழுத்திகளும் அதின் வகைகளும்

உணர்வியல் மன அழுத்திகள்- நம்பிக்கைகள், மதிப்பீடுகள், நெருக்கடிகள், வாழ்க்கை சம்பவங்கள், முதலியன.

நாம் அனைவருக்கும் உணர்வுகள் இருக்கிறது, அதுவே மற்றவர்களோடு சேரவும் மற்றவர்களின் தேவைகளைப் புரிந்துக்கொள்ளவும் உதவுகிறது. ஒரு சில உணர்வுகள் மன அழுத்தத்தை உண்டுபண்ணும். நம்முடைய நம்பிக்கைகள் ஏமாற்றமளிக்கும் பொழுதும், பகுத்தறிவில்லாதிருக்கும் பொழுதும் அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும். மனப்பான்மை தவறானதாக இருக்கும் பொழுதும் அதை மற்றவர் விமர்சிக்கும் பொழுதும் கூட மன அழுத்தம் உண்டாகும். மற்றும் நம்முடைய மதிப்பீடுகள் தவறானதாக இருக்கும் பொழுது எல்லாம் வெறுமையாகும் சூழல் உண்டாகும், அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும். சில சாதாரண சிக்கல்கள், எதிர்பார்க்காத நிகழ்வுகள் கூட உணர்வியல் மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.

சூழல் சார்ந்த மன அழுத்திகள்- வெப்பம், சத்தம், கூட்ட மக்கள், முதலியன.

எல்லா மக்களும் தங்களுடைய சூழ்நிலையைக் கொண்டுள்ளனர். சில மக்கள் நகர்களில், சாலை ஓரங்களில், உயர் கட்டிடங்களில், கட்டமைப்புகள் நிறைந்திருக்கின்ற இடங்களில் வாழ்கின்றனர், சிலரோ பசுமையான கிராமப்புறங்களில், சாதாரண வாழ்க்கையாக இயற்கையோடு  வாழ்கின்றனர். நமக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும் காரியங்களோ விருப்பத்திற்குரிய எதிர்பார்ப்புகளோ ஒரு சூழலில் இல்லாத பொழுது அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும். இருக்கின்ற இடத்தில் உள்ள அதிக வெப்பம் கூடச் சில நேரங்களில் மன அழுத்தத்தை உண்டுபண்ணும். தொழிற்சாலைகளிலும், வாகனங்களிலும் உண்டாகும் மாசு, மற்ற காரணிகளால் உண்டாகும் மாசு மற்றும் சத்தங்கள் மன அழுத்தத்தை உண்டுபண்ணும். சில நபர்களுக்கு மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது கூட மன அழுத்தம் ஏற்படும்.

உடல் சார்ந்த மன அழுத்திகள்- போதை பொருட்கள், காப்பி, தேயிலை நச்சு, புகையிலை, முதலியன

பெரும்பாலானோர் சாதாரண தேநீரில் இருந்து ஒரு போதை பொருள் வரை ஏதாவது ஒரு ஊக்கியையோ அழுத்தியையோ உபயோகிக்கிறோம். அனைவருக்கும் கடுமையான சூழல்கள் நிச்சயம் நேரிடும், இல்லையேல் சக நண்பர்களின் வற்புறுத்துதல் நிறைய நபர்களைப் போதை பொருட்கள், காப்பி, தேயிலை நச்சு, புகையிலை, போன்ற காரியங்களைப் பயன்படுத்தச் செய்கிறது. ஆனால் சில காலங்கள் செல்லச் செல்ல, அது உடலோடு சேர்ந்து, அதைச் சார்ந்திருக்கச் செய்கிறது, மற்றும் உடல் சார்ந்த மன அழுத்தத்தையும் உண்டுபண்ணுகிறது.

மற்ற மன அழுத்திகள்- பொறுப்பின்மை, வற்புறுத்தல், முதலியன

நம்மில் அநேகர் நமக்கிருக்கும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை, வெளியிலிருந்து ஒரு ஊக்கமும், தூண்டுதலும், சில நேரங்களில் வர்புறுத்துதலும் அவசியமாகிறது. நாம் பொறுப்பில்லாதிருந்தால் நம்முடைய கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற இயலாது, அல்லது அரைகுறையாகவே முடிக்க இயலும், அது நம்மை உணர்வு மற்றும் அறிவு ரீதியாகத் திறன் இல்லாதவர்களாக்கி மன அழுத்தத்தை உண்டுபண்ணும். நம்முடைய தகுதியைத் தாண்டிச் சில காரியங்களைச் செய்ய நாம் வற்புறுத்தப்படும் பொழுது அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள்:

உள்ளார்ந்த காரணிகள்:

சாத்தியமல்லாத எதிர்பார்ப்புகள்

ஒவ்வொரு மனிதரும் தங்கள் சுய விருப்பங்களையும், ஆர்வங்களையும் கொண்டுள்ளனர், அதனால் எதிர்பார்ப்புகளும் தோன்றுகின்றன. நம்முடைய எதிர்பார்ப்புகள் வெவ்வேறு காரணிகளைப் பொறுத்திருக்கிறது, சில எதிர்பார்ப்புகள் நடைமுறையில் சாத்தியமாய் இராதபடி மிக உயரமாயிருக்கிறது, அதனால் அவை நிறைவேறாத பொழுது அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும். 

வாழ்வில்  நடக்கும் ஏதாவது திடீர் மாற்றம்

நாம் தினந்தோறும் முறையாக விசேஷித்து செய்யும் அனைத்து காரியங்களை முன்பே ஓரளவிற்கு திட்டமிடுகிறோம். நாம் செய்யும் காரியங்களில் பிடிக்காத ஒரு மாற்றம் திடீரென நிகழும் பொழுது, நிறைய காரியங்கள் முட்டி மோதிக் கொள்வதாக உணர்கிறோம், அது கையாளுவதற்கு சிறிது கடினமாயும், அழுத்தத்தை உண்டுபண்ணுவதாகவும் இருக்கும்.

ஏற்றவாரில்லாத மனப்பான்மையும், நோக்கும் விதங்களும்

நாம் எதிர்மறையான மனப்பான்மையை கொண்டிருக்கும் பொழுதும், காரியங்களைப் பார்க்கும் விதம் உண்மைக்கும், பகுத்தறிவிற்கும் ஏற்றவாறு இல்லாத பொழுதும், மற்றவர்கள் நம்மை ஏற்காமல் இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. மற்றும் நாம் செய்யும் காரியங்களில் சிறந்தவர்களாய் இருக்கவும் இயலாது, அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.

பயமும் நிச்சயமில்லாமையும்

நமக்குப் பயம் உண்டாகும் சில சூழ்நிலைகளை எல்லோரும் நம் வாழ்வில் சந்திக்கின்றோம். மற்ற மனிதர்களை இழக்கின்றதான பயம் அல்லது அங்கீகாரத்தை இழப்பதற்கான பயம் போன்ற சில பயங்கள் நேர்மறையானவை, ஆக்கப்பூர்வமானவை. இருட்டு அல்லது ஏதாவது பொருளை இழப்பதற்கான பயம் போன்ற சில பயங்கள் பகுதறிவில்லாததாய் நம்மை அழிக்கக்கூடியவை. பயம் பெரும்பாலும் மன அழுத்தத்தோடு சேர்ந்திருக்கும். நிச்சமில்லாத காரியங்கள் என்பது அனைவரின் வாழ்விலும் இன்றியமையாதது, அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் எப்பொழுதும் எதிர்பாராத காரியம் நிகழும் எனப் பயப்படுவது நாம் முன்னோக்கி நகர்வதை தடுக்கும், அதுவே மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.

குறைந்த சுய மதிப்பீடு

அனைவரும் தங்கள் சுயத்தை நேசிக்க, இந்த உலகில் தங்கள் தனித்துவ பங்களிப்பை உணர்ந்துக்கொள்ள, தங்கள் சுயத்தின் மேல் தன்னம்பிக்கை உள்ளவர்களாய் இருப்பது அவசியமாகும். ஒரு மனிதனின் சுய மதிப்பீடு குறைந்திருக்கும் பொழுது அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.

சுய மரியாதை இல்லாதிருத்தல்

அனைவருக்கும் நமக்கே உரிதான தனித்துவமும், தனிப்பட்ட அறிவும் நமக்குள் உள்ளது. நாம் சுய மரியாதையோடு இருப்பதற்கு நம்முடைய பலங்களை அறிவது அவசியம், அது நமக்கு நாமே மரியாதை கொடுக்க உதவுகிறது. நமக்குச் சுய மரியாதை இல்லாதிருக்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை உண்டாகி, அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.

உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்சனைகள்

எல்லா மனிதரிடமும் உடல் ரீதியாகவோ மனம் ரீதியாகவோ ஏதாவது குறைகள் பெரும்பாலும் இருக்கும். உடல் ரீதியான பிரச்சனைகள்  வெளிப்படையானது, அத்தகைய பிரச்சனைகளுள்ள மக்கள் மற்றவரின் விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாவர். மனம் ரீதியாக உள்ள பிரச்சனைகள் வெளிப்படையானதல்ல, எனினும் மக்கள் தங்கள் சுய உணர்வுகளின் பாதிப்பால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

சுய அடையாளம் இல்லாதிருத்தல்

அடையாளம் என்பது மற்றவர்கள் ஒருவரை அங்கீகரிக்க உதவும் ஒருங்கிணைந்த காரியமாகும். அடையாளம் என்பது நம்முடைய செயல்களால், நடக்கையால் நம்மை நாமே விவரிப்பதாக இருக்கலாம், நாம் சமூகமாக இருப்பதால் அது எளிதாக மற்றவர்களுக்குத் தெரியவருகிறது. சுய அடையாளம் இல்லாத பொழுது அல்லது எதிர்மறையான அடையாளம் இருக்கும் பொழுது, அது வெறுப்பையும் பிரிவையும் ஏற்படுத்தும், அதுவே மன அழுத்தத்தையும் விளைவிக்கும்.

வெளிப்புறமான காரணிகள்:

நேசிக்கும் நபரிடமிருந்து பிரிந்திருத்தல்

வாழ்வில் நாம் நிறைய உறவுகளைக் கடந்து வருகிறோம். அனைத்து உறவுகளுக்கும் அதின் முக்கியத்துவம் உண்டு. நாம் நேசிக்கும் நபருடனான தீர்க்க முடியாத பிரிவு வருத்தத்தை உண்டாக்கும். மற்றும் உண்மையை ஏற்றுக்கொள்ளாது பிரிவினைகளைக் குறித்து சிந்தித்து கொண்டிருப்பது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.

பள்ளி/ கல்லூரி/ வேலையிடத்தில் உள்ள பளுவினால் உண்டாகும் அழுத்தம்.

எல்லா இடங்களிலும் எப்பொழுதும் சரியான சூழல் அமைவதில்லை. மென்மையான நேரங்களும் கடுமையான நேரங்களும் சேர்ந்தே இருக்கும். ஒரு தேவையோ நெருக்கடியோ இருக்கும் பொழுது நாம் நம்முடைய பள்ளியில்/ கல்லூரியில்/ வேலையிடத்தில் கூடுதலான பொறுப்புகளைக் கையாள வேண்டியிருக்கிறது, சில நேரங்களில் அதுவே பளுவாகவும் இருக்கிறது. அவை நம் திறனிற்கு மேலும், நாம் செய்து முடிக்கக்கூடிய கால அளவினைவிட குறுகியதாக இருக்கும் பொழுது, அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.

எடுத்துக்கொண்ட பொறுப்புகள் சமநிலையில் இல்லாதிருத்தல்

நம் அனைவருக்கும் நமக்கே உரித்தான துறை சார்ந்த சிறப்புத்தன்மை இருக்கும், சிலர் பல துறை சிறப்புத்தன்மை பெற்றவர்களாக இருப்பர். பல துறையில் சிறப்புத்தன்மை பெற்றிருந்தால் கூடுதலாகப் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் நம்முடைய குறைப்பாடுகளை நாம் புரிந்துக்கொண்டு, எடுத்துக்கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றுவது அவசியம். நிறைய காரியங்கள் ஒன்று சேரும்பொழுது எல்லாவற்றையும் ஈடுகொடுத்து செய்வது கடினம், சில நேரங்களில் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமலும் போய்விடும், அது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.

பாதுகாப்பற்ற சூழல்

நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகள் எங்குக் கிடைக்குமோ அங்குதான் வாழ்வதை தேர்ந்தெடுக்கின்றோம். குழப்பங்கள், நீதியின்மை, அல்லது பொறுக்க முடியாத சம்பவங்கள் நம்முடைய சூழலில் இருக்கும் பொழுதும், நிலையற்ற சூழலைக் கையாள்வது கடினமாக இருக்கும் பொழுதும் மன அழுத்தம் உண்டாகும்.

ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தல்

நிறைய சீர்திருத்தவாதிகளும் தலைவர்களும் சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை தகர்க்க முயன்றிருந்தாலும், எல்லோரும் சேர்ந்திருக்கின்ற, பிரிவினையில்லாத ஒரு சமூக நிலையையும், பொருளாதார நிலையையும் பெறாதவரை அது கடினமாகும். நாம் அனைவரும் ஏதாவது வகையில் வேறுபடுத்துகிறோம் அல்லது வேறுபடுத்தப்படுகிறோம். வேறுபடுத்தப்படும் பொழுது மன அழுத்தம் உண்டாகலாம்.

மோசமான நிர்வாகத் திறன்

ஆட்களுக்கிடையிலான திறன் அல்லது நேர மேலாண்மை திறன் நமக்கு இல்லாதிருக்கும் பொழுது, நம்முடைய பொறுப்புகளைச் சமநிலைப்படுத்தி நிறைவேற்றாதிருப்போம், அது நமக்குக் கீழ் பணிபுரிபவர் அல்லது உடனாளிகள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். அது மேலும் ஒருங்கினைப்பில்லாமையை உண்டாக்குவதால், விரும்பிய இலக்குகளை அடைய இயலாது, அதுவே மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.

போதை  பொருட்கள்

ஒரு நபர் போதை பொருளைச் சார்ந்திருக்கும் பொழுது, அந்தப் பொருள் இல்லாமல் அந்த நபரால் சுதந்திரமாக இருக்க முடியாது. அதனால் மனம் மற்றும் உடல் சார்ந்த வற்புறுத்துதலுக்கு ஆளாவர், சார்ந்திருக்கும் போதை பொருள் இல்லாத பொழுது அது மன அழுத்தத்தை உண்டுபண்ணும்.

அச்சுறுத்தும் ஒலி-ஒளி காட்சிகள்

சில மக்கள் மிக எளிதாகப் பயத்திற்கு உள்ளாவர், வித்தியாசமான சில ஒலி-ஒளி காட்சிகளைக் கடந்து வரும் பொழுது கூடப் பயப்படுவர். அச்சுறுத்தும் ஒலி-ஒளி காட்சிகள் என்பது சாதாரணமானவையாக இருந்தாலும், சில தனிப்பட்ட நபர்களிடத்து அது மன அழுத்தத்தை உண்டுபண்ண கூடும்.

மன அழுத்தம் உண்டுபண்ணும் நிகழ்வுகளின் தன்மைகள்

சில நேரங்களில் எதிர்மறையானது- கோபம், கவலை, சோர்வு, வெறுப்பு, முதலியன.

மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகள் சில நேரங்களில் வேதனை அளித்து எதிர்மறையாக இருக்கின்றன. சில காரியங்கள் தவறாக நேரிடும் பொழுதும், நமக்குப் பிடிக்காத விதத்தில் சிலர் நடக்கும் பொழுதும் அது கோபத்தை உண்டுபண்ணும், குழப்பமான நேரங்களில் அது கவலையை உண்டுபண்ணும், நாம் திருப்தியுள்ளவர்களாக இல்லாத பொழுது அது சோர்வை உண்டுபண்ணும், மற்றும் எதிர்பார்ப்புகள் உயிரோட்டமும் சாத்தியமும் இல்லாததாய் நிறைவேறாத பொழுது அது வெறுப்பை உண்டுபண்ணும்.

சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாது- நிச்சயமில்லாமை, கவனம் சிதறுதல், குறைந்த சுய மதிப்பீடு, குறைந்த சுய மரியாதை, தன்னம்பிக்கை இல்லாமை, முதலியன.

வேதனை தரும் காரியங்கள் சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாதவை, காரியங்கள் நம் திறனிற்கு மேல் இருக்கும் பொழுது நம்பிக்கையில்லாமையை ஏற்படுத்தும்.  மன அழுத்தம் தரும் சூழ்நிலைகள் சில நேரங்களில் நிறைய காரியங்களை யோசிக்க செய்வதால் கவன சிதரலை உண்டுபண்ணும், நாம் சிறந்தவர்களாய் இல்லாத பொழுது அது சுய மதிப்பீட்டையும் சுய மரியாதையையும் குறைக்கும், நம் மதிப்பையும் நம்பிக்கையையும் இழக்கும் பொழுது தன்னம்பிக்கை இல்லாதிருப்போம்.

சில நேரங்களில் தெளிவற்றிருக்கும்- இரட்டை மனப்பான்மை, குழப்பம், அடையாளம் இல்லாமை, முதலியன.

மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் சில நேரங்களில் குழப்பம் உள்ளதாய் இருக்கும். அது இரட்டை மனப்பான்மையை உடையதால், நிச்சயமான தீர்மானம் எடுப்பது கடினமாகும். அறிவு மற்றும் உணர்வுகளைச் சமநிலையில் கொள்ளாததால் குழப்பத்தை அதிகரிக்கும், பொறுப்புகளையும் நிச்சயித்தவைகளையும் சரியான முறையில் நிறைவேற்றச் செய்யாததால் சரியான அடையாளம் இல்லாமல் இருக்க வழி வகுக்கும்.

மன அழுத்தத்தைச் சரியாகக் கையாளாதிருத்தல்

நாம் வழக்கமாக மன அழுத்தம் தரும் பிரச்சனைகளைத் தவிர்ப்போம், ஆனால் தவிர்ப்பது பிறகு இன்னும் அதிக மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.

நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரியங்கள் இருக்கும் பொழுது, சில நேரங்களில் அதை நாம் தவிர்த்து வேறு காரியங்களைத் தொடர்வோம். மன அழுத்தத்தைத் தரக்கூடிய காரியங்களைத் தவிர்ப்பது தற்காலிகமாக விடுவிக்கும், ஆனால் அதைச் சரியாகக் கையாளாத பொழுது அது பிறகு மிகுந்த மன அழுத்தத்தை உண்டுப்பண்ணும்.  

சில மக்கள் போதைப்பொருள் மற்றும் பொழுது போக்குக் காரணிகளை உபயோகித்து தங்களையே மறக்க நினைப்பர். ஆனால் அது தற்காலிகமானது, அவர்கள் திரும்பச் சுய நினைவிற்கு வரும் பொழுது மன அழுத்தத்தை இரு மடங்காகும்.   

சில மக்கள் மன அழுத்தத்தைக் கையாள ஊக்கியையோ அழுத்தியையோ பயன்படுத்துவர். ஒருவர் தம் சுயத்தை மறக்கப் போதைப்பொருளோ பொழுதுப் போக்கு காரியங்களோ சிறிது காலம் தற்காலிகமாக உதவும். ஆனால் போதை பொருட்களை உபயோகிப்பவர்கள் பிறகு தங்கள் சுய நினைவைத் திரும்ப அடைவர், அப்பொழுது மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கும். 

சில மக்கள் மன அழுத்தம் தரும் காரியத்திலிருந்து வெளியேற ஒரு செயலும் புரியாமல் இருப்பர், அது மன அழுத்தத்தின் தீவிரத்தை மெம்மேலும் அதிகரிக்கும்.

மிகவும் அதிக மன அழுத்தம் உண்டாகும் பொழுது நாம் சில நேரம் விலகி இருந்து அந்தச் சூழலை மாற்றிக்கொள்வது அதை ஞானத்தோடு கையாள உதவும். ஆனால் சில மக்கள் மன அழுத்தத்திலிருந்து வெளிவர எதுவும் செய்யாமல் இருப்பதால், அது மன அழுத்தத்தின் தீவிரத்தை மெம்மேலும் அதிகரிக்கும்.

சில மக்கள் மன அழுத்தம் தரும் காரியங்களைக் குறித்து வருந்திக் கொண்டே தங்கள் கண்களைக் கண்ணீரினால் நிரப்பித் தங்களுக்கு இருக்கும் அடுத்த வாய்ப்புகளைக் காண தவறுகின்றனர்.  

வாழ்வில் சூழ்நிலைகள் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஏற்றங்களும் இறக்கங்களும் சேர்ந்தே இருக்கும். மன எழுச்சி தரும் காரியங்களைச் சுலபமாகக் கையாண்டு அதிலிருந்து விரைவாக வெளியே வருகிறோம் ஆனால் வாழ்வின் கடுமையான சூழ்நிலைகளைச் சந்திப்பது அல்லது வெளியே வருவது சிறிது கடினமாகிறது. கண்களைக் கண்ணீரினால் நிரப்புவது, முன்பிருக்கும் அடுத்த வாய்ப்புகளை மறைக்கிறது.

மன அழுத்தத்தைச் சரியான முறையில் கையாளுதல்  

சரியான பாதையில் சரியான மதிப்பீடுகளோடு இருக்கின்றீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயித்துக்கொள்ளுங்கள்

மனித வாழ்வில் மதிப்பீடுகள் மிகவும் அவசியமான பங்கு வகிக்கின்றன. நம்முடைய மதிப்பீடுகளை நாம் அறிவு மற்றும் உணர்வுகளைச் சார்ந்து சம நிலைப்படுத்தாத பொழுது, நமக்குள்ளேயேயும் வெளியேயும் நிறைய குழப்பங்களைச் சந்திப்போம். நம்முடைய மத்திப்பீடுகள் சரியானதாகவும் மதிப்புள்ளதாகவும் இருக்கும் பொழுது, அது சரியான பாதையை காண்பிப்பதால் மக்கள் நம்மை ஏற்றுகொள்வர், நாமும் மன அழுத்தமின்றி இருக்கலாம்.

மன அழுத்தம் நிறைந்த சூழலிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்ள, அதிலிருந்து விலகிச் சென்று, சிறந்த வழியில் கையாளலாம்.

மன அழுத்தத்தை முழுவதுமாக தவிர்ப்பதோ ஒன்றும் செய்யாமல் இருப்பதோ, மன அழுத்தம் தரும் நிகழ்விலிருந்து தீர்வு அளிக்காது. அதே நேரம் மன அழுத்தம் நிறைந்த சூழலிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்ள நாம் விலகி இருக்கலாம். பிறகு அதைச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சிறந்த முறையில் கையாளலாம்.

நல்ல மனிதர்களோடும் உங்களுக்கு விருப்பமான மனிதர்களோடும் நேரத்தைச் செலவிடுங்கள்.

மனிதர்களே நம்முடைய நீண்ட கால மகிழ்ச்சிக்கு மூலக்காரணமாய் உள்ளனர். நமக்கு விருப்பமான நபர்களோடும் நல்ல மனிதர்களோடும் நேரத்தைச் செலவழிப்பது நாம் ஆறுதல் அடைய உதவும், மற்றும் மன அழுத்தத்தை நேர்த்தியான சிறந்த முறையிலும் கையாள உதவுகிறது. சக மனிதர்களின் அனுபவங்கள்  மன அழுத்தத்தைக் கையாள உபயோகமானதாயும் நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் இருக்கும்.

உங்கள் நேரத்தையும் வளங்களையும் நல்ல முறையில் உபயோகித்து, மிகுந்த பளுவை தவிர்க்கச் சில நேரங்களில் முடியாது என்று சொல்லப் பழகுங்கள்.

நிறைய காரியங்கள் ஒன்று சேர்ந்து முட்டி மோதிக்கொள்ளும் பொழுது, மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும். அது உண்டாகக் காரணம் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்புகளை நாம் எடுத்துக்கொள்கிறோம், இல்லையேல் நம்முடைய பொறுப்புகளைச் சரியான முறையில் பகுத்துப் பிரித்து வழங்கத் தவறுகிறோம். நாம் நம்முடைய நேரம் மற்றும் வளங்களைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதும், பளுவை தவிர்க்க முடியாதுஎன்று சில நேரங்களில் சொல்வதும் அழுத்தத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தைத் தவிர்க்க உதவும்.

உண்மையை ஏற்று, உங்களை நீங்களே அறிந்து, மன அழுத்தம் தரும் சூழல்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

உணர்வுகளைச் சார்ந்த காரியங்களைக் கையாளும் பொழுது, நடைமுறையைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். நாம் உண்மை நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளைக் கையாள நமது பலன்களையும், குறைகளையும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் தரும் சூழ்நிலையை நேர்மறையான மனப்பான்மையோடு மாற்றியமைப்பது அதைச் சிறந்த வழியில் கையாள உதவும். 

ஆரோக்கியமான வாழ்க்கை வழியைக் கொண்டிருங்கள்

மனிதர்களுடைய  உடல் சார்ந்த காரியங்கள் மற்ற காரியங்களோடு ஒருங்கிணைந்ததாய் உள்ளது. சரியில்லாததாயும் ஆரோக்கியமில்லாததாயும் இருக்கின்ற வாழ்க்கை வழி இருக்கும் பொழுது, அது மன அழுத்தத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை வழி, உடல் சார்ந்த பலவீங்களிலிருந்து விளக்கி வைக்கும், மற்றும் மன அழுத்தமின்றி இருக்கவும் உதவும்.

புதிய காரியங்களைக் கற்று உங்கள் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளுங்கள்

கற்றுக்கொள்வதற்கு எந்தத் தடைகளும் இல்லை. புதிய காரியங்களைக் கற்பது, அறிவு மற்றும் திறன்களைப் பெருக்கிக்கொண்டு அதைக் குறித்து நமக்கு இருக்கும் வெளிப்பாட்டை அதிகரிக்க உதவும். அது வெவ்வேறு காரியங்களை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்தவும் உதவுகிறது. மற்றும் நம் சிந்தனையில் நிறைய விருப்பத்தேர்வுகளை கொண்டிருக்கவும் செய்கிறது, அது மன அழுத்தத்தைக் கையாள அதிகம் உதவுகிறது.

உங்களை ஒப்பிடாதிருங்கள், தன்னம்பிக்கையோடிருங்கள், நல்ல சுய மதிப்பீட்டைக் கொண்டிருங்கள், சுய மரியாதையோடிருங்கள்.

ஒரே காரியமாயினும் அனைத்து மக்களும் அதை வெவ்வேறு விதமாய் பார்கின்றனர், தங்கள் சிந்தனைகளிலும், செயலிலும் தனித்துவமானவர்களாய் உள்ளனர். தேவை இல்லாமல் மற்றவரோடு ஒப்பிடுவது நம்முடைய சுய அடையாளத்தின் வெளிப்பாட்டைத் தடை செய்யும். நல்ல சுய மதிப்பீடுடனும், சுய மரியாதையுடனும் தன்னம்பிக்கையோடும் இருப்பது கடுமையானதும் மன அழுத்தம் நிறைந்ததுமான சூழல்களைக் கையாள உதவும்.

நேர்மறை மன அழுத்தம்

நேர்மறை மன அழுத்தம் என்பது உபயோகமான மன அழுத்தம்- மன ரீதியானதாகவோ (தூண்டுதல்), உடல் சார்ந்ததாகவோ (உடற்பயிற்சி) அல்லது உடல் வேதியியல்/ கதிரியக்கம் சார்ந்ததாகவோ (ஊக்கிகள் சுரத்தல்) இருக்கலாம். அழுத்தம் சில நேரங்களில் நம்மைத் தூண்டி, விழிப்புடன் சில நேர்மறையான விளைவுகளுள்ள காரியங்களைச் செய்ய உதவுகிறது.

தேர்வுகள்/ சோதனைகளுள்ள சமயங்களில் நேர்மறை மன அழுத்தம் நாம் கவனத்துடன் இருக்க, அதற்குத் தயாராக ஊந்துகிறது.

நேர்மறை மன அழுத்தம் சில கடுமையான சூழல்கள் அல்லது சமயங்கள் மத்தியிலும் காரியங்களைச் சாதிக்க உதவுகிறது.


Comments