5. பகுத்தறியும் சிந்தனை
5. பகுத்தறியும் சிந்தனை
(மாறா நியதியுள்ள விதிகளை உபயோகித்து சுயத்தை தொடர்ந்து சிறந்துச் செயல்பட செய்யும் திறன்)
மனிதர்கள் அனைவரும் உடலமைப்பை மாத்திரம் கொண்டிருக்கவில்லை, உணர்வுகள், அறிவுத்திறன், சமூக நோக்குகளும் கொண்டுள்ளனர். நம் அனைவருக்கும் சில நம்பிக்கைகள் உள்ளன, மற்றும் நாம் செய்யும் செயல்களுக்கான விளைவுகளும் உண்டு, இந்த சுழற்சி சிந்தனைகளால் தொடர்ந்து நகர்கிறது.
சிந்திக்கும் விதங்கள்
1. பகுத்தறிவு வாய்ந்த சிந்தனை
அனுபவத்துடன் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறது மற்றும் சோதித்து அறியக்கூடியது
பகுத்தறிவுள்ள காரியங்கள் பொதுவாக நிலையானதாக இருக்கும், ஏனெனில் அவை முறையாக சரியான திசை, போக்கு மற்றும் செயல் நோக்கம் உடையதாக இருக்கும். அவை சோதித்து நிச்சயிக்க கூடியதும், செயல் முறையில் சாத்தியமாதுமாக இருக்கும்.
தர்க்கரீதியானது
பகுத்தறியும் சிந்தனை சிந்திக்க வைப்பதாகவும், வெவ்வேறு காரியங்களின் அறிவையும் உணர்வுகளையும் கொண்டதாயும், ஒவ்வொரு நேரத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவாறு நடந்துக்கொள்ளுவது போன்றவற்றை கவனத்தில் கொண்டு, உண்மையைச் சார்ந்திருப்பதாகும்.
வளைந்துக்கொடுத்தல்
பகுத்தறியும் சிந்தனை வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதை உள்ளடக்கியிருக்கும், மற்றும் ஒரு நபர் எந்த ஒரு சூழலிலும் தடைப்படாமல் இருக்க வழிச்செய்யும். ஒரு நபர் எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்திக்கும் பொழுது திட்டங்களை மாற்றிக்கொண்டு வளைந்துக்கொடுக்கவும் அது உதவும்.
வற்புறுத்தாது விருப்பத்தை வெளிப்படுத்த முன்னுரிமை அளிக்கிறது
பகுத்தறிவோடு இருப்பது நிறைய வாய்ப்புகளைப் பெற்றிருக்கவும், காரியங்களை எதிர்க்கொள்ளவும், வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்றவாறு உணர்வுகளை வெளிப்படுத்தவும் ஒரு நபருக்கு உதவி புரியும். பகுத்தறியும் சிந்தனை ஒரு நபர் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை வழியுறுத்தும். விருப்பத்தை வெளிப்படுத்தவும், சாத்தியமற்ற காரியத்தைக் குறித்து விடாபிடியாக இல்லாமல் இருக்கவும் உதவும்.
2. பகுத்தறிவற்ற சிந்தனை
இது உண்மைக்கு முரண்பாடானது, செயல்முறையால் நிச்சயிக்க முடியாதது.
பகுத்தறிவற்ற சிந்தனை பின்னடையச் செய்யும், வழுவான சிந்தனைகளையும் புதிய சிந்தனைகளையும் பெற்றிருக்காது. சிந்தனைகள் ஒரு நோக்கத்திற்கான செயல்பாட்டைக் கொண்டிருக்காது, நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதாய் இருக்கும். பகுத்தறிவற்ற சிந்தனை முரண்பாடானது, செயல்முறைகளில் மதிப்பீடுகளைக் கொண்டிருக்காது, எனவே நிச்சயமற்றதாகவும் இருக்கும்.
தர்க்கமற்றது
சில காரியங்கள் உள்ளத்தில் மறைந்திருந்து குறுகிய நோக்கில் யோசிக்க செய்வதாக பகுத்தறிவற்ற சிந்தனை இருக்கும். சிக்கலான தொடர்பில்லாத காரியங்களைக் தொடர்புப்படுத்தி, நோக்கமற்றதும் திசையற்றதுமாய் இருக்கும். அறிவையும் உணர்வையும் நேரத்திற்கும் இடத்திற்கும் ஏற்றார்ப்போல பயன்படுத்த அது உதவாது.
பிடிவாதமானது வளைந்துக்கொடுக்காதது
பகுத்தறிவில்லாத சிந்தனை ஒரு நபர் தன் சிந்தனையில் சில காரியங்களைப் பிடித்து வைத்திருப்பதால், அவரின் யோசிக்கும் திறனை குறுகியதாக ஆக்குகிறது. அதனால் ஒரு நபர் சுய கருத்துக்களை முன்னுரிமைப்படுத்தி, பொதுவான உண்மைக் கருத்துக்களை ஏற்பதில்லை, அது ஒரு நபரைப் பிடிவாதமானவராகவும், வளைந்துக்கொடுக்க முடியாதவராகவும் ஆக்குகிறது.
விருப்பத்தை வெளிப்படுத்தச் செய்வதை விடுத்து வற்புறுத்துவதாக இருக்கும்
பகுதறிவில்லாதிருத்தல் ஒரு நபர் மற்றவர்களை விடுத்து தாம் யோசிப்பது மாத்திரம் சரி என்று நினைக்கச் செய்யும். பகுத்தறிவின்றி யோசிப்பவர்களால் வளைந்துக்கொடுக்க முடியாததாலும், அவர்கள் குறுகிய யோசனையுடையவர்களாய் இருப்பதாலும், அவர்கள் பெரும்பாலும் வற்புறுத்துகிறவர்களாய் இருப்பர், அவர்கள் விரும்பியதை அடைய ஆவல் கொள்வர், அதுவே வற்புறுத்தலுக்கு காரணமாகிறது.
பகுத்தறிவும் பகுத்தறிவு சிந்தனையும்
பகுத்தறிவு என்பது உண்மையையும் காரணத்தையும் கொண்டு நாம் காரணத்துவமிக்கவர்களாக இருக்க செய்யும் பண்பாகும். பகுத்தறிவு ஒருவரின் நம்பிக்கைகளையும் அதற்கான காரணங்களையும், செயல்களையும் அதற்கான காரணங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பகுத்தறிவோடு இருப்பதென்பது எதைப் பற்றியும் கவலை இல்லாமல் லாபத்தை கணக்கிடுவது அல்ல. செயல்களும், நம்பிக்கைகளும் அடிப்படையாக சில யோசனைகளைப் பெற்றிருக்கிறது, நாம் சிந்தனையில் பகுத்தறிவோடு இருக்கும் பொழுதுதான், நம்முடைய நம்பிக்கைகளிலும் செயல்களிலும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும். ஒரு நபரின் நீண்ட கால இலக்குகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் பகுத்தறியும் சிந்தனை ஆக்கபூர்வமானது, உதவிகரமானது, மற்றும் உபயோகமானது.
பகுத்தறியும் சிந்தனையின் அடிப்படைகள்
ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் சுயத்தை மேம்படுத்தும் உணர்வுகளையோ, சுயத்தை தோற்கடிக்கும் உணர்வுகளையோ உருவாக்க ஆற்றல் உள்ளது.
நாம் ஒவ்வொருவருக்கும் நாம் சந்திக்கவும் செயல்படவும் நமக்கே உரிதான சூழல்கள் உள்ளன. நாம் நம்முடைய சூழலையும் நிலையையும் பல நேரங்களில் மாற்றியமைக்க முடியாது ஆனால் அதற்கு எவ்வாறு பதிலளிக்கிறோம், அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதை நிச்சயம் மாற்றியமைக்க முடியும். எனவே, நம்முடைய வெவ்வேறு உணர்வுகளை வெவ்வேறு வழிகளில் வெளிபடுத்தும் திறன் நாம் அனைவருக்கும் உண்டு, அதற்கு நம்முடைய பகுத்தறியும் சிந்தனை அடிப்படையாக உள்ளது.
மகிழ்ச்சியாக இருப்பதே ஒவ்வொருவரின் குறிக்கோளாகும். ஒரு நபரின் நம்பிக்கைகள் அவரின் மகிழ்ச்சியையும், உண்மையில் அவர் இருக்கும் நிலையையும் பாதிக்கிறது.
இந்த உலகத்தில் யாரும் தங்கள் வாழ்வில் கஷ்டப்பட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள், எப்படியாகிலும் மகிழ்ச்சிக் கொள்ள வேண்டும் என்று நினைப்போம். நேர்மையற்ற முறையில், பகுத்தறிவில்லாது மகிழ்ச்சியடையும் போது, சில நேரங்களில் அது வருத்தமாக மாறிவிடும். ஒரு தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள் அவர்களின் செயல்களுக்கு முக்கிய காரணமாகிறது, எனவே அவர்கள் விரும்பிய நிலையை அடைய நினைக்கும் பொழுதும் அடையும் பொழுதும் அது மகிழ்ச்சியையும், ஆற்றலையும் பாதிக்கும்.
தங்கள் பகுத்தறிவில்லாத நம்பிக்கைகளால் கவனக்குறைவாகச் சில ஆளுமை மற்றும் உணர்வியல் தடுமாறறத்திற்கு மக்கள் ஆளாவர், அதுவே மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தும்.
நிறைய நேரங்களில் நாம் நம்முடைய தவறுகளைச் சரிசெய்யாமல் அதைக் குறித்து கவலைக்கொண்டிருப்போம். மற்றும் சில நேரங்களில் நாம் வேண்டாத, மாற்ற முடியாத சம்பவத்தைக் குறித்து கவலைக்கொண்டிருப்போம். நாம் நிறைய, பெரிய கனவுகளைக் கொண்டிருந்தாலும் அதை அடைய போதுமான முயற்சிகள் செய்யாமலிருப்போம். பகுத்தறிவில்லாத நம்பிக்கைகளால் நமக்குள்ளேயே சில ஆளுமைகளை நாம் வைத்துக்கொள்வது, தேவையில்லாத உணர்வியல் தடுமாற்றங்களை ஏற்படுத்தும், அதுவே மகிழ்ச்சியின்மைக்கு வழிவகுக்கும்.
பகுத்தறிவின்மையும் பகுத்தறிவில்லாத சிந்தனையும்
பகுத்தறிவின்மை என்பது அறிவு, சிந்தனை, பேச்சு, செயல் முதலிவற்றில் பகுத்தறிவு இல்லாமல் இருத்தல். காரணத்தைப் பொருட்படுத்தாமல், உணர்வியல் அழுத்தத்தாலும் அறிவு குறைப்பாட்டாலும் உண்டாகும் செயல்கள் மற்றும் யோசனைகள் பகுத்தறிவு இல்லாமல் இருக்கும். பகுத்தறிவின்மை பொறுமையோடிருக்கும் தன்மையைக் குறைக்கும், தேவையற்ற நிறைய காரியங்களை யோசிக்கச் செய்யும் அல்லது ஒன்றையும் யோசிக்காமல் இருக்கச் செய்யும். அது நிறைய காரியங்களைத் தனிப்பட்ட விதத்தில் எடுக்கச் செய்யும், மற்றும் குறைப்பாடுள்ள உணர்வியல் காரணங்களைக் கொண்டிருக்கச் செய்யும்.
பொதுவான பகுத்தறிவில்லாத நம்பிக்கைகள்
நான் புதிய/ விலை அதிகமான ஆடைகளை உடுத்தினால் மக்கள் மதிப்பர்
ஒரு நபர் நேர்த்தியான உடை உடுத்தும் பொழுது நிச்சயம் மக்கள் நன்றாக நடத்துவர், எனினும் அது முதன் முதலில் பார்க்கும் பொழுதுதான். ஒரு நபர் நேர்மறையாகவும், மரியாதையுடனும் இன்னொருவரை நடத்தி உறவுக்கொள்ளும் பொழுதுதான், மரியாதையை திரும்பப் பெறுவார்.
நான் கோவிலுக்கு/ ஆலயத்திற்கு சென்றால் தேர்ச்சியடைவேன்/ நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்.
முளுஆளுமைத்தன்மையையுடைய கடுவுளை நம்புவது நிச்சயம் நிறைய நேர்மறை மனப்பான்மையை கொடுக்கும். ஆனால் அதே நேரம் நமது பொறுப்பின்மையையோ சோம்பேறித்தனத்தையோ கடுவுள் ஊக்குவிப்பதில்லை என்பதை உணர வேண்டும். பெயருக்காகக் கோவிலுக்கோ ஆலயத்துக்கோ செல்வது ஒன்றிற்கும் உதவாத ஒரு செயலாக மாத்திரமே இருக்கும்.
நான் வகுப்பறையில் எப்பொழுதும் விளையாடிக்கொண்டே இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சியாய் இருப்பேன்.
வகுப்பு பாடத்தைக் கவனித்துக் கொண்டிருப்பது சில நேரங்களில் மிகச் சலிப்பாக இருக்கும், அதே நேரம் வகுப்பில் விளையாடிக்கொண்டிருப்பது ஒரு நபரைச் செயலில் ஈடுபட செய்வதால் ஆர்வத்தோடு இருக்க செய்யும். ஆனால் இரண்டையும் ஆராய்ந்தால், நாம் வகுப்பில் பாடம் நடத்தும் பொழுது விளையாடிக்கொண்டிருப்பதால் ஒன்றையும் ஈட்டிக்கொள்வதில்லை, அதேசமயம் வகுப்பு பாடத்தைக் கவனிப்பதால் ஒரு சில காரியங்களையாவது பெற்று, சிறந்த முறையில் புரிந்துக்கொள்ள முயல முடியும்.
நான் தேர்வு நடத்துபவரை ஏமாற்றி நல்ல மதிப்பெண் பெற்றால், நல்ல இடத்தை/ வேலையைப் பெறுவேன்.
தேர்வாளரை ஏமாற்றுவதன் மூலம் நிச்சயம் படிநிலை அதிகரிக்கும். ஆனால் மதிப்பெண்கள் என்பது அடுத்த நிலைக்கு நகர உதவும் தற்காலிக ஆய்வாகும். ஒரு நபர் ஒரு நல்ல இடத்திற்கு/ நல்ல வேலைக்குச் செல்ல மதிப்பெண்களைத் தவிர்த்து இன்னும் நிறைய காரியங்கள் அவசியமாகும். மதிப்பெண்களை விட ஒரு நபரின் திறன்களும், மனப்பான்மையும் அதிகம் கவனிக்கப்படுகிறது.
ஒரு நபருடன் நான் வாழ்வு முழுதும் நல்ல உறவை வைத்துக்கொள்வேன்.
மனிதர்களாக நம்முடைய ஆர்வங்களிலும் விருப்பங்களிலும் நாம் தனித்துவமுள்ளவர்களாய் இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வெளிப்பாடும், நமது பின்னணியும் வேறுப்பட்டுள்ளது. சிறிய காரியத்திலிருந்து பெரிய காரியம் வரை மனிதர்களுக்கு இடையே கருத்து வேறுப்பாடுகள் உள்ளன. எனவே, நாம் ஒருவரோடொருவர் நல்ல உறவு கொண்டிருப்பது அவசியம், ஆனால் அதே சமயம் நாம் ஒவ்வொருவரின் சூழலும் வெவ்வேறாக இருப்பதால் ஒரு நபர் இன்னொருவருடன் வாழ்க்கை முழுதும் சேர்ந்து இருப்பது சாத்தியமல்ல.
நான் பணக்காரனானால் மிகவும் மகிழ்ச்சியாவேன்.
மகிழ்ச்சி என்பதுச் சுற்றியுள்ள பணியாட்களும், பொருளும், நாம் வகிக்கும் பதவியும் மாத்திரம் அல்ல. அது உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த பண்புகளின் சமநிலையாகும், அதுவே பிரச்சனைகளுக்கு மத்தியிலும் சந்தோஷமும் திருப்தியும் அளிக்ககூடியதாகும். ஒரு நபர் எந்தப் பதவியிலும் நிலையிலும் இருந்தாலும், அவருக்கே உரிதான சூழ்நிலையை அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது.
தவிர்க்க வேண்டிய பகுத்தறிவில்லாத நம்பிக்கைகளை உடைத்தெறிதல்
நாம் எதிர்பார்க்கின்றபடி காரியங்கள் இருக்க வேண்டுமென வறுபுறுத்தும் பொழுது, நாம் ஏமாற்றமடைவோம். சரியான விருப்பத்தேர்வுகளுடன் பல காரியங்கள் நமது யோசனையில் இருக்கும் பொழுது, நாம் வற்புறுத்தும் தன்மையோடிருப்பதை தவிர்க்க முடியும்.
வாழ்வின் எதிர்மறையான காரியங்களால் நாம் பெரிதும் பூரித்திராத அனுபவங்கள் நிச்சயம் இருக்கும். அதைப் பொறுத்துக்கொண்டு தாண்டிச் செல்வது எளிதல்ல, அது மெதுவாக நம்முடைய ஆற்றலைச் சுரண்ட கூடும். சரியான மனப்பான்மையோடும் மதிப்பீடுகளோடும் எதிர்மறை காரியங்களுக்கு எதிராக நாம் போராடும் பொழுதுதான், அதை மேற்கொள்ள முடியும்.
சில காரியங்கள் அது இருக்க வேண்டிய முறைமையில் இல்லாத பொழுது, நாம் ஏமாறுகிறோம். நாம் கொண்டுள்ள முன்னறிவின் படி சில காரியங்களைப் பற்றி முன்யோசனை கொண்டுள்ளோம், அதுவே பொறுமையோடு இருக்கும் தன்மையைக் குறைக்கிறது. நம்முடைய முன்னறிவினை கேள்வி குறியிட்டு, அது சரியா தவறா என ஆலோசிப்பது, பொறுமையோடு இருப்பதை மேம்படுத்தும்.
நம்பிக்கைகளைப் பாதிக்கும் காரணிகள்
தனிப்பட்ட காரணிகள்
சில அனுபவங்களும், எதிர்பார்ப்புகளும் நம்முடைய நம்பிக்கைகளுக்குக் காரணமாயிருக்கிறது.
நம்பிக்கைகள் என்பது நமது தன்நம்பிக்கையினால் நாம் கொண்டுள்ள யோசனைகள், அவை சத்தியமும் உண்மையுமாய் இருக்க வேண்டுமென நினைப்போம். சில காரியங்களைக் குறித்த ஒரு நபரின் தனிப்பட்ட அனுபவங்கள், அவர்களின் நம்பிக்கைகளுக்குக் காரணமாகிறது, அது பகுத்தறிவை பாதிக்கக் கூடும்.
சமூக காரணிகள்
கலாச்சார பழக்கங்கள், குடும்ப சூழல், வேலை சூழல், சட்டங்கள் முதலியன நம்முடைய நம்பிக்கைகளைப் பாதிக்கும்.
நாம் ஒரு சமூகமாக ஒருவரோடொருவர் சேர்ந்திருப்பதை விரும்புகிறோம், மற்றும் மற்றவர்கள் நம்மைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றோம். எனவே நாம் நமது கலாச்சார மதிப்பீடுகள், குடும்பம், சூழ்நிலை, சட்டங்கள் முதலியவற்றோடு காரணங்களையோ பின்னணியையோ தெரிந்திராது இசைந்திருக்கின்றோம். நாம் கொண்டுள்ள பழக்கவழக்கங்கள் நம்முடைய நம்பிக்கைகளைப் பாதிக்கும். நாம் யோசிக்கும் விதமானது, நாம் சிந்தனையில் கொண்டுள்ள காரியங்களையும் நம்பிக்கைகளையும் பொருத்துள்ளது, அதுவே காரணங்களுக்கு அடிப்படையாகவும் உள்ளது.
பொருளியல் காரணிகள்
நிதி சார்ந்த சூழ்நிலைகள், ஆற்றல், வாழ்வுவளம் முதலியன நம்முடைய நம்பிக்கைகளைப் பாதிக்கும்
மக்கள் தாங்கள் பெற்றுள்ள நிதி, ஆற்றல், வளமை முதலியவற்றை கொண்டே பொதுவாக மதிப்பிடப்படுகிறார்கள். ஒரு நபர் மற்றவர்கள் வியக்கக்கூடிய வகையில் இருப்பது, நிச்சயம் அவர் சில காரியங்களை அடைய தன்னம்பிக்கையளிக்கும். ஆனால் அதே நேரம் நிறைய நேரங்களில் தங்கள் உயர் நிலையைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனச் சிலர் கவலைக்கொள்வர், அவை அவர்களின் நம்பிக்கைகளையும், யோசனையையும், செயல்களையும் பாதிக்கும்.
பகுத்தறிவோடு இருத்தல்
காரியங்களைக் குறித்து யோசிப்பதற்கும் செயல்படுவதற்குமான திறன் நமக்கு உண்டு, ஆனால் நாம் நம்மைச் சுற்றியுள்ள குறைப்பாடுகளை தெரிந்துக்கொள்வது அவசியமாகும்.
அனைத்து மனிதர்களுக்கும் புதுமையாக யோசிக்கும் திறன் உள்ளது அதன் விளைவாகத் தினந்தோறும் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆற்றலும், யோசிக்கும் திறனும் நம்மிடையே இருந்தாலும், அனைத்து காரியங்களையும் நுட்பமாகக் கணிக்க முடியாது. நாம் அனைவரும் குறுகிய சிந்தனையுடன் வரையறைகளைக் கொண்டுள்ளோம், பகுத்தறிவோடு இருப்பதற்கு நாம் அதைப் புரிந்துக்கொள்வது அவசியமாகும்.
அனைவருக்குள்ளும் உணர்வுகள், அறிவு, அனுபவம், வளங்கள் உள்ளன. அவை முழுவதுமாகப் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம், ஒரு காரியத்தை மாத்திரம் பற்றிக்கொள்வது பகுதறிவின்மைக்கு வழிவகுக்கும்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரியங்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்ற படியால், அவர்களே மிகவும் சிக்கலானவர்களாய் உள்ளனர். ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்த்து யோசிப்பது சில நேரங்களில் சரியானதாய் இருக்காது, காரியங்களை முழுமையாகப் பார்ப்பது அவசியமாகும். ஒரு பண்பினை/ காரியத்தை மாத்திரம் பற்றிக்கொண்டு அதனை மாத்திரம் பிடித்துக்கொள்வது பகுத்தறிவோடு இருக்க உதவாது.
எல்லாவற்றையும் கவனியுங்கள், நீங்கள் பார்ப்பதை தாண்டி யோசியுங்கள், வெவ்வேறு விருப்பத் தேர்வுகளைக் கொண்டு முடிவெடுங்கள்
ஒரு கோணத்தில் மாத்திரம் காரியங்களைப் பார்ப்பது நம்பிக்கையையோ யோசனையையோ மேம்படுத்த உதவாது, நாம் அனைத்து காரியங்களையும் கவனமாகக் கவனித்து, அந்தச் சூழலைச் தாண்டி ஆராய்ந்து யோசிப்பது அவசியமாகும், அப்படி செய்தால்தான் வெவ்வேறு விருப்பத் தேர்வுகளைக் கொண்டு நம்மால் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
உங்கள் மதிப்பீடுகளைத் தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் சுயத்திற்கும், மற்றவர்களுக்கும் நேர்மையாக இருங்கள்.
மதிப்பீடுகள் நம்முடைய நம்பிக்கைகளின் வெளிப்பாடு, அது நம்முடைய சிந்தனைகளைப் பாதிக்கும். நம்முடைய மதிப்பீடுகளைத் தெளிவாக விவரித்து, நமது குறைபாடுகளையோ பலத்தையோ மற்றவர்களின் குறைபாடுகளையோ பலத்தையோ ஏற்றுக்கொள்வதில் நேர்மையாக இருக்கும் பொழுது, பகுத்தறிவோடு இருக்க முடியும்.
உங்களுடைய குறைப்பாடுகளையும், மற்றவர்களின் குறைப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ள உங்களைச் சரிசெய்து கொள்ளுங்கள்.
நிறைய நேரங்களில் நம்முடைய குறைப்பாடுகளைக் குறித்து வருந்துகிறோம் ஆனால் அதைக் கண்டறிந்து சரி செய்வதில் தவறுகிறோம். நாம் நம்முடைய குறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது, நம்முடைய திறனுக்கு மேலாக எதையும் முயற்சிக்க மாட்டோம் அல்லது நம்மைச் சரிசெய்து நம்முடைய ஆளுமையை மேம்படுத்திக்கொள்வோம்.
புதிய காரியங்களைத் தினமும் கற்றுக்கொண்டு, உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ளுங்கள்
நிறைய காரியங்களைக் கற்பது வெவ்வேறு காரியங்களைக் குறித்து வெறும் அறிவை மாத்திரம் தருவதில்லை. அது பின்னிப்பினைந்த நிறைய காரியங்களைத் தொடர்புப்படுத்த உதவுகிறது. காரியங்களைக் குறித்த அறிவை பெறுவது, நமக்கிருக்கும் வெளிப்பாட்டை அதிகரிக்கவும், பகுத்தறிவுடன் இருக்கவும் உதவும்.
எதிர்மறை உணர்வுகளை கையாளுதல்
கடினமான சூழல்கள் எதிர்மறை உணர்வுகளுக்கு வழி வகுக்கும். சில எதிர்மறை உணர்வுகளும் கூடப் பகுத்தறிவு நிறைந்தவை.
சோகமும் சோர்வும்
பிடிக்காத அல்லது எதிர்பாராத காரியங்கள் சம்பவிக்கும் பொழுது, அனைத்து மனிதர்களுக்கும் வெறுப்பும் ஏமாற்றமும் இருக்கும், அதற்காக நாம் வருத்தப்படுவதால் சோகம் உண்டாகும். சோகத்திலிருந்து மீள முடியும், ஆனால் அது சோர்வாக மாறும் பொழுது, அதைக் கையாள்வது கடினம்.
உறுத்தல் மற்றும் குற்றஉணர்வு
நமக்கிடையே தவறுகள் நிச்சயம் ஏற்படும். ஆனால் செய்த தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்வது, நம்முடைய அறநெறிகளை அழிக்கும். அதே நேரம் சில குற்றங்கள் குற்றவுணர்வை ஒரு வடுவாக ஏற்படுத்தும், அதுவே சிலரை முடக்கிப்போடும். குற்ற உணர்வு மனம் திரும்புவதற்கு உதவும், குற்ற உணர்வில் தொடர்ந்து இருக்கும் பொழுது அது அத்தியாவசியமான காரியங்களிலிருந்து பிரிக்கக் கூடும். எனவே நாம் சில எதிர்மறை காரியங்களுக்கு வருந்த வேண்டும், ஆனால் அதற்கான சரியான தீர்வுகளை எடுத்த பிறகும் குற்ற உணர்வில் தொடர வேண்டிய அவசியமில்லை.
அக்கறையும் கவலையும்
நாம் சில காரியங்களையும் சில நபர்களையும் வாழ்வில் நேசிக்கிறோம், அதற்காக நேரம் செலவழிக்கவும் விரும்புகிறோம். நாம் விரும்பும் காரியங்களிலும், நம்மைப் பாதிக்கும் காரியங்களிலும் நாம் அக்கறை கொண்டிருப்பது தவறில்லை. ஆனால் காரணம் இல்லாமல் எல்லா நேரமும் சில காரியங்கள் நம்மோடு இருக்க விரும்பி அதைக் குறித்து கவலை கொள்வது, நடைமுறையில் உண்மைகளைச் சந்திக்கும் பொழுது ஆழ்ந்த வலியை ஏற்படுத்தும்.
பகுத்தறிவோடு இருப்பதன் முக்கியத்துவம்
பகுத்தறிவு என்பது நாம் இருக்கின்ற நிலையில் திருப்தியுடனும் சந்தோஷமுடனும் இருந்து சுய உண்மைநிலையை அடைய உதவுகிறது.
பகுத்தறிவோடு இருப்பது, நாம் யார், நமது தேவை என்ன, நம்முடைய வாழ்வின் வெவ்வேறு சூழல்களை எவ்வாறு கையாளலாம் என்பதை அறிய உதவுகிறது. எனவே, பகுத்தறிவோடு இருப்பது நமக்கு இருக்கும் காரியங்களைக் கொண்டு நாம் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருக்க உதவுகிறது, மற்றும் நாம் நம்மை மேம்படுத்திக் கொண்டு சுய உண்மைநிலையை அடைய வழிச்செய்கிறது.
பகுத்தறிவோடு இருப்பது நாம் திறந்த பார்வையுடையவர்களாய் இருக்க உதவுகிறது, மற்றும் நேர்மறை மனப்பான்மையோடு நிறைய தேர்வுகளிலிருந்து சிறந்த தீர்மானம் எடுக்க உதவுகிறது.
நாம் காரியங்களைத் திறந்த மனதோடும் மனப்பான்மையோடும் பகுத்தறியும் பொழுது, நிறைய யோசித்து சிறந்ததை, சாத்தியமானதை, ஏற்றதை கண்டறிவோம். எனவே, அது காரியங்களில் திறந்த பார்வையுடையவர்களாய், விருப்பத்தேர்வுகளில் சிறந்த தேர்வினை நேர்மறை மனப்பான்மையோடு தீர்மானிக்க உதவுகிறது.
பகுத்தறிவோடு இருப்பது காரணத்துவமுள்ள சிந்தனையோடு உண்மையைக் கண்டறியவும், மற்றவர்களின் சிந்தனைகளாலும் நம்முடைய கலாச்சார பழக்கங்களாலும் பாதிப்படையாமல் இருக்கவும் உதவுகிறது.
நாம் சில கட்டளைகளையும் காரியங்களையும் பின்பற்ற ஊந்தப்படுகிறோம், மற்றும் பெரிதும் யோசிக்காமலும், காரணமில்லாமலும் சில கலாச்சார பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறோம். பகுத்தறிவு சிந்தனை காரணங்களைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறியவும், தெளிவில்லாத யோசனைகளால் பாதிக்கப்படாமலும் இருக்க உதவுகிறது.
பகுத்தறிவோடு இருப்பது நமக்குள்ளேயும், வெளியேயும் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
நாம் காரியங்களை உட்கொள்ளும் விதம் வெவ்வேறாக இருப்பதால் பிரச்சனைகள் நமக்குள் எப்பொழுதும் இருக்கும், நம்முடைய சூழலும் வெளியிலிருந்து வரும் பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது. பகுத்தறிவு சிந்தனை ஒரு தனிப்பட்ட நபர் நிறைய விருப்பத் தேர்வுகளைக் கண்டறிந்து தனக்குள்ளேயும், வெளியேயும் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவோ தவிர்க்கவோ உதவுகிறது.
1. பகுத்தறியும் சிந்தனை

Comments
Post a Comment