3. நேரம் மேலாண்மை
3.
நேரம் மேலாண்மை
(நமது நேரத்தைச் சிறந்த முறையில்
பயன்படுத்துவதற்கும், நமது அறிவையும் தாலந்துகளையும் மேம்படுத்துவதற்கும்
உதவும் திறன்)
முன்னுரை
அனைவருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரமே உள்ளது
நாம் இருக்கும் விதமாகவும், நமது விருப்பங்களின் அடிப்படையிலும் நம்மிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும். இந்த
உலகத்தில் சில விஷயங்கள் நம் அனைவருக்கும் பொதுவாயிருக்கிறது. பிரபுவானாலும்
பரதேசியானாலும், பணக்காரரானாலும் ஏழையானாலும், திறமையுள்ளவராயினும்
திறமையில்லாதவராயினும் நேரம் என்பது பொதுவாய் இருப்பவைகளில் ஒன்று. உலகில் உள்ள
அனைவருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரமே இருக்கிறது, அது தினந்தோறும் ஒரே இடைவெளியில்
சுழல்கிறது.
நாம் நேரத்தை உபயோகிக்கும் விதம் பெரிதும் மாறுபடுகிறது, அதுவே பெரிய வேறுபாட்டையும்
உண்டாக்குகிறது
நாம் வாழும் பொழுது நேரம் அனைவருக்கும் பொதுவாய் இருந்தாலும் அதை
உபயோகிக்கும் முறைமை பெரிதும் மாறுபடுகிறது. நாம் எதற்காக நேரத்தைச்
செலவழிக்கிறோம், முதலீடு செய்கிறோம் என்பதும் கூட
வேறுபடுகிறது. நாம் நேரத்தையும் ஆற்றலையும் எதற்காகச் செலவு செய்தாலும்,
நாம் அதை ஆளுகைக்கலாம் அல்லது அதனால்
ஆளுகைக்கப்படலாம். நாம் நேரத்தைப் பயன்படுத்தும் விதம் நம்முடைய வாழ்வில் பெரிய
மாற்றத்தை உண்டுப்பண்ணும்.
நாம் மிகவும் புகழ்ப்பெற்ற நபர்களோடோ அல்லது மிகச் சாதாரண நபர்களோடோ
ஒப்பிட்டுப் பார்க்காமல், நாம் செலவழிக்கும் நேரம் எப்படி
உள்ளது, எவ்வளவு சிறந்த முறையில்
பயன்படுத்துகிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்
ஒன்று அல்லது மேற்பட்ட காரியங்களில் சிறந்து விளங்குவதால் நம்மைச் சுற்றி நிறைய மக்கள்
பிரபலங்களாக உள்ளனர். தமது ஆர்வத்தை ஈர்க்கிற ஒரு விஷயத்தில்
சிறந்திருக்கும் ஒருவரை கண்டு நாம் வியந்தாலும், அந்த நபர் தன் வாழ்வில் நேரத்தைச்
சிறந்த முறையில் உபயோகித்துள்ளார் என்று கூற முடியாது. சில மனிதர்கள் பிரபலமாக
இல்லாதிருப்பினும், தாம் இருக்கும் விதமாகவும், தாங்கள் செய்யும் காரியங்களினாலும்
மகிழ்வாய் இருகின்றனர். எனவே நேரத்தைச் சிறந்த முறையில் மேலாண்மை செய்ய, நேரம் எவ்வாறு சிறந்த முறையில்
உபயோகிக்கப்படுகிறது என்பதை ஆராய்வதும், நாம் நம்மை மிகவும் புகழ்ப்பெற்ற அல்லது சாதாரண
நபர்களோடு ஒப்பிடாமல் இருப்பதும் அவசியமாகும்.
நேரம் மேலாண்மையின் நோக்கங்கள்
நம்முடைய வாழ்வினை நாம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, நேரத்தை
நாம் நிர்வகிப்பதும், நாம் அதனால் நிர்வகிக்கப்படாமல் இருப்பதும் அவசியம்
நாம் செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன, நாம் நிறைய வேலைகளைச் செய்கிறோம், ஆனால் அவை அனைத்துமே நமக்கு நன்மை தருவதில்லை. நாம் சில காரியங்களிலிருந்து எதையும்
கற்றுக்கொள்ளாவிடினும், அவை நமது குறிகிய அல்லது நீடிய
நோக்கத்திற்கு பயனளிக்காவிடினும், நாம் அவற்றைச் செய்ய ஆரம்பித்து, விடமுடியாமல் இருக்கிறோம். சில
காரியங்கள் நமக்குள் ஆழமான வடுவை ஏற்ப்படுத்தி விட்டுத் தொந்தரவு செய்கிறது.
மற்றும் நாம் நம்முடைய வாழ்வை கட்டுக்குள் வைத்திருப்பதும் எதுவும் நம்மைக்
கட்டுபடுத்தாமல் பார்த்துக்கொள்வதும் அவசியமாகும்.
ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு (குறைந்த அழுத்தம்)
மக்கள் துன்பப்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. திறனின்மை, முடியாமை, வலிமையின்மை முதலியவற்றிற்கு முக்கிய
காரணம் நேரத்தைச் சரியாக உபயோகிக்காதது தான். நிறைய நேரங்களில் நாம் நேரத்தை அழிவு
தரக்கூடிய காரியங்களில், அல்லது ஒன்றிலும் முன்னேறப் பயன்படாத
காரியங்களில் செலவு செய்கிறோம். நிறைய நேரங்களில் நாம் செலவிடும் நேரம் அறிவுப்பூர்வமாகவோ, உணர்வுரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பயனுள்ளதாக இருக்கிறதா
என்று நாம் எண்ணுவதில்லை. நாம் செலவிடும் நேரம் அறிவு, உணர்வு அல்லது உடல் ரீதியாகப் பயனுள்ளதாக இருப்பதை நிச்சயிக்கும்
பொழுது அழுத்தமின்றி ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.
நம்மைச் சுற்றியுள்ள வாய்ப்புகளில் நிறைய ஆர்வமுள்ள காரியங்களை
அனுபவிக்க
மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் நிறைய ஆர்வங்களோடும், தனிப்பட்ட சிந்தனைகளோடும்
இருக்கின்றோம். சில மனிதர்கள் தனிப்பட்ட சில
காரியங்களில் சிறந்தவர்களாக உலகிற்கு தங்களை காண்பித்தாலும், அவர்களும் மற்ற சில காரியங்களில் ஆர்வமுடைய
சாதாரண மனிதர்களாகவே உள்ளனர். ஒரு நபர் சரியான முறையில் நேரத்தைக் கையாளும் பொழுது, ஒரு குறிப்பிட்ட காரியத்தில் மாத்திரம்
24 மணி நேரத்தைச் செலவிடாமல், தனக்கு
ஆர்வமான அனைத்து காரியங்களிலும் நேரத்தைச் செலவிட்டு, தான் சிறந்து
விளங்கும் துறையில் அதிக கவனத்தை கொடுப்பார். அவர்கள்
தங்கள் வாழ்வினை திரும்பிப் பார்க்கும் பொழுது, தங்களுக்கு
இருந்த வாய்ப்புகளைக் கொண்டு, தங்களுடைய
ஆர்வங்களை அடைந்ததை குறித்து தங்களை குறித்து தாங்களே மகிழ்ச்சி அடைவர்.
திறன்களையும் தாலந்துகளையும் வளர்த்துக்கொள்ள
வாழ்வின் தொடக்க நாட்களில் திறன்களையும்
தாலந்துகளையும் பெற்றுக்கொள்ள, அதன் மூலம்
அதிக வேலை வாய்ப்புகளை நமக்காகவோ, பிறருக்காகவோ
தக்கவைக்க நாம் அனைவரும் கல்வியை கற்கிறோம். பட்டபடிப்பைப் படிப்பதுடன் நாம் திறன்களையும்
தாலந்துகளையும் கற்ப்பது முடிவதில்லை, அது நம்முடைய வாழ்வின் இறுதிவரை உள்ளது. திறன்களும்
தாலந்துகளும் நடைமுறையில் உபயோகிக்கக்கூடிய செயல்முறையிலான வெளிப்பாடாகும், அது கல்வி
அறிவை பெருகச் செய்கிறது. நாம் கற்றுக்கொண்டதை செயல் முறைப்படுத்த
நேரம் ஒதுக்கும் பொழுது திறன்களையும், தாலந்துகளையும் மேம்படுத்த முடியும்.
இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கு
நாம் அனைவருக்கும் கனவுகளும், இலக்குகளும்
உள்ளன. நமது கனவுகளை அடைவதற்கு இலக்குகளை
நிர்ணயிக்கின்றோம். இலக்குகள் யோசிப்பதற்கும் அமைப்பதற்கும்
மாத்திரம் அல்ல, அடைவதற்காகவும் அமைக்கப்படுபவை. இலக்குகளை
அடைவதற்கு, கனவுகளை நோக்கி நகர்வதற்கு, நேரத்தைச்
சிறந்த முறையில் நிர்வகிப்பது அவசியமாகும்.
நேரத்தை நாம் செலவிடும்
வழிகள்
அது ஆக்கபூர்வமாகவோ ஆக்கமின்மையாகவோ இருக்கலாம்
அனைவருக்கும் நேரம் ஒரே அளவு தான் உள்ளது, ஆனால் நாம்
ஒவ்வொருவரும் நம்முடைய ஆர்வத்திற்கும், தீர்மானத்திற்கும், தேவைக்கும், ஆசைக்கும் ஏற்றவாறு நேரத்தைச் செலவிடுகிறோம். நாம் செலவு செய்யும் அனைத்து நேரத்திற்கும் அதற்கான விளைவு
உள்ளது. சில நேரங்களில் நாம் செலவிடும் நேரம் நிறைய
உபயோகமான புதிய காரியங்களைக் கற்க
உதவுகிறது, சில
நேரங்களில் அழிவைத் தரக்கூடிய
வேண்டாத காரியங்களாக உள்ளது. மற்றும் ஆக்கப்பூர்வமானதா ஆக்கமில்லாததா எனச் சில நேரங்களில் தொடக்கத்தில் பகுத்தறிய
முடியாவிடினும், முடிவில்
ஏதாவது ஒன்றே சாத்தியமானதாக இருக்கும்.
ஆர்வமிக்க காரியமாகவோ ஆர்வமில்லா காரியமாகவோ இருக்கலாம்
வாழ்வில் சலிப்பான தருணங்களும், ஆர்வமிக்க
தருணங்களும் சேர்ந்தே இருக்கும். கட்டாயத்தினால்
நாம் நம்முடைய நேரத்தைச் செலவிட நேரிடும் பொழுது, அது வாழ்வின்
ஆர்வமில்லா தருணங்களாகவே இருக்கும். நமக்கு ஆர்வம்
தரக்கூடிய, நாம்
பங்கேற்ககூடிய, நாம் செய்ய
விரும்புகின்ற காரியங்களையே நாம் அதிகமாகச் சிந்தித்து ஞாபகத்தில்
வைத்திருப்போம்.
படைப்பாற்றல் உள்ளதாகவோ படைப்பாற்றல் இல்லாததாகவோ இருக்கலாம்
தானாகச் சிந்தித்து செயல்படுவது நிறைய
பேருக்குக் கடினமான
காரியமாக இருக்கும். ஏனெனில் நமக்குக் கொடுக்கப்பட்ட நிறைய போதனைகள், குறிப்பிட்ட ஒரு
சில நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் யாரையாவது அப்படியே பிரதிபலிப்பதையும் வலியுறுத்துவதாகும். அவை நமக்குத் தெரியாத சில காரியங்களைத் தெரிந்துக்கொள்ள உதவினாலும், அவை நம்மைப் படைப்பாற்றல் இல்லாதவர்களாகவே
ஆக்குகிறது. சில நேரங்களில் நம்முடைய ஆர்வத்திற்கு ஏற்பச் சில காரியங்களை நாம் முயற்சி செய்து
பார்ப்பதுண்டு. இப்படியாகச் சில நேரங்களில் நாம் புதிய வழிகளில் நம்முடைய
படைப்பாற்றலால் நேரத்தை உபயோகிக்கிறோம், சில நேரங்களில் அப்படியே பிறரை
பின்பற்றுகிறோம்.
உடலை அல்லது மனதை உபயோகிக்க கூடியதாக இருக்கலாம்
நிறைய நேரங்களில் ஒரு நபர் உடல்ரீதியாக ஒரு
காரியத்தைச் செய்யும்
பொழுதுதான் அவர் வேலை செய்கிறாரெனக் கருதுகிறோம். ஆனால் எப்பொழுதும்
அது அவ்வாறாக இருப்பதில்லை; ஒவ்வொரு உடல்
ரீதியான செயலும், யோசனைகளால்தான்
நிகழ்கிறது. ஒருவர் என்ன செய்கிறார் என்பதை பெரிதும்
ஆராயாமல், உடல் ரீதியான
செயலைச் செய்யாத பொழுது, அவர் ஒன்றும்
செய்யவில்லை என்றே பிறர் பெரிதும்
கருதுவர். நாம் செலவிடும் நேரம் உடல் ரீதியான செயலாக
இருக்க வேண்டும் என அவசியமில்லை, ஒரு காரியத்தைச்
செய்வதற்கு மனதையும் சிந்தனையையும் தயார் செய்வதற்கு கூட நேரத்தைச் செலவிடலாம்.
பொழுதுபோக்குவதாகவோ சோர்வை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கலாம்
நிறைய நேரங்களில் நேரத்தை நாம் நேரத்தைச்
செலவிடும் பொழுது அதில் மேம்பாட்டிற்கான எந்தவொரு காரியமும் இல்லையெனிலும், நேரம்
கடந்துப்போனால் போதுமென்றே நினைக்கிறோம், நம்முடைய படிப்பு அல்லது வேலை சார்ந்து
நேரம் செலவழிக்கப்படும் பொழுது அது சோர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பினும், அதற்கே
உரியதான நேர்மறையான பலன்கள் உள்ளது. சில
நேரங்களில் நாம் செலவிடும் நேரம் பொழுதைப் போக்கி சோர்வை ஏற்படுத்தினாலும்
நம்முடைய உறவுகளை மேம்படுத்தும், நம்மைச்
சிறந்தவர்களாகவும் ஆக்கும்.
பொருள் சார்ந்ததாகவோ பொருள் சாராததாகவோ இருக்கலாம்
ஒவ்வொரு நபருக்கும் தங்களை சுற்றி நிறைய வாய்ப்புகள்
உள்ளன. கட்ட, கண்டுபிடிக்க, ஒரு
விஷயத்திலிருந்து இன்னொன்றை உருவாக்க, சுற்றியுள்ள பொருட்களைக் கொண்டு மக்கள்
நிறைய ஆராய்ச்சி செய்கின்றனர். அப்படியாகச்
சில நேரம் வெற்றியடைகிறார்கள், சில
நேரங்களில் தோல்வியடைகின்றனர். மக்கள்
தாங்கள் உபயோகித்த, கண்டறிந்த
காரியங்கள் மிகவும் தற்காலிகமானது எனத் தெரிந்துக்கொள்ளும் பொழுது, தங்களை
சுற்றியுள்ள அன்பான மனிதர்களே உண்மையான வளங்கள் என உணரும் பொழுது, அவர்களோடு கூட
நேரம் செலவுச்செய்து தங்கள் உணர்வு ரீதியான தேவைகளைப் பூர்த்திசெய்கிறார்கள். உடல், அறிவு மற்றும்
உணர்வு ஆகியவற்றின் தேவைக்கு ஏற்ப, நாம்
செலவிடும் நேரம் பொருள் சார்ந்ததாகவோ, பொருள் சாராததாகவோ இருக்கலாம்.
உணர்வுள்ள நிலையாகவோ தன்னுணர்வற்ற நிலையாகவோ இருக்கலாம்
நாம் உணர்வுடன் இருக்கின்ற நேரங்களை
நிச்சயம் ஞாபகம் வைத்திருப்போம். நமது அடையாளத்தை
நாம் அறியாமல், நிலை தெளிவு
இல்லாமல் இருக்கின்ற சில நேரங்களும் உண்டு. மனிதர்களாக நம்மைச் சுற்றி நிறைய மறைப்பொருட்கள்
உள்ளன, களைத்த பின்
ஒய்வு தேவைப்படும் ஒரு இயந்திரம் போல் தான் நாம் உள்ளோம். நாம்
தூக்கத்தில் செலவிடும் நேரம் எப்பொழுதும் தன்னுணர்வற்ற நிலையாகவே உள்ளது, சிலருடைய
உணர்வுகள் சில கடின காலங்களில் சில
காரணிகளால் பாதிக்கப்படுகிறது. முழுவதுமாக, நாம் அனைவரும்
செலவிடும் நேரம் உணர்வுள்ள நிலையாகவோ தன்னுணர்வற்ற நிலையாகவோ
இருக்கலாம்.
விருப்பத்திற்கு ஏற்றதாகவோ விருப்பத்திற்கு மாறாகவோ இருக்கலாம்
நம்முடைய ஆர்வத்துடனும் ஆர்வமின்றியும்
செலவிடப்படும் நேரம், விருப்பதிற்கேற்றதாகவோ, மாறாகவோ, ஆக்ககூடியதாகவோ
அழிக்ககூடியதாகவோ, உபயோகமானதாகவோ
உபயோகமில்லாததாகவோ, உணர்வுள்ளதாகவோ
உணர்வில்லாததாகவோ, பொழுதுப்போக்க
கூடியதாகவோ சோர்வை ஏற்படுத்தக் கூடியதாகவோ, புதுமையானதாகவோ
புதுமையில்லாததாகவோ, உடல்
சார்ந்ததாகவோ மனம் சார்ந்ததாகவோ இருக்கலாம். நம் வாழ்வில்
நேர்மறை பலன்களைத் தரக்கூடிய சில காரியங்களை நாம் விருப்பம் இல்லாமல் செய்கிறோம், எதிர்மறை
விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல காரியங்களை விருப்பத்தோடு செய்கிறோம்.
நம்முடைய சூழ்நிலைகள் நம்மைக்
கட்டுப்படுத்தினாலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய நேரத்திற்கு நாமே முதலாளிகளாய் உள்ளோம்,
அது செலவிடப்படும் விதத்தைத் தீர்மானிக்கிறோம்.
நடைமுறையில் நேரம் செயல்படுத்தப்படும் விதம்
நாம் கீழே உள்ள ஏதாவது ஒரு சில காரியங்களில்
நேரத்தைச் செலவிடுகிறோம்.
படித்தல்/ ஆராய்தல்
பொதுவாக, 21 வயது வரை நாம் பயன்படுத்தும் நேரம் புதிய
காரியங்களைக் கற்கவும், கற்ற காரியங்களிலிருந்து திரும்பக் கற்கவும், படித்தல்
அல்லது ஆராய்தலுக்காகவே உள்ளது. அதே நேரம் படித்தல்/ ஆராய்தல் அந்த வயதிலேயே
நின்று விடுவதில்லை, வாழ்வு முழுதும் தொடர்கிறது.
வேலை
21 வயது முதல் 60 வயது வரை நாம் செலவிடும் நேரம் பொதுவாக வேலைக்காகவே. சில நபர்களின் வாழ்வில் வேலை என்பது குறைந்தபட்சமாவது
அவர்களின் ஆரம்ப நாட்களிலும், இறுதி
நாட்களிலும் இன்றியமையாததாக ஆகிவிடுகிறது.
உடற்பயிற்சி
சில நபர்கள் குறிப்பிட்ட நேரத்தை
உடற்பயிற்சிக்காகச் செலவிடுவர், இன்னும் சிலர்
அதைத் தொழிலாக எடுத்திருக்கும் பொழுது, அதிக நேரம்
செலவிடுவர். தளர்ந்துக்கொள்ளவோ, உடலை
மெருகேற்றவோ செய்யப்படும் எந்த ஒரு உடல் சார்ந்த செயலும், உடற்பயிற்சியாகும்.
பொழுதுபோக்கு
அறிவுப்பூர்வமாக அதிக பலன் இல்லை எனிலும், உணர்வியல்
ஈர்ப்பினால், நம்மில் பல்ர் பொழுதுபோக்கிற்காக அதிக நேரம் செலவழிக்கின்றோம். படங்கள், குறும்படங்கள், பாடல்கள், ஒலி சார்ந்தவை, விளையாட்டுகள், முதலியன
நம்முடைய வாழ்வில் பொழுதுபோக்கின் காரியங்களாக இருப்பினும், வாழ்வின் ஒரு பகுதியாகவே அவை உள்ளன. சில நபர்கள்
பொழுது போக்கிற்காகவே தங்கள் வாழ்வை வாழ்வர், அவர்கள் ஒரு
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தங்கள் வாழ்வை திரும்பிப் பார்க்கும் பொழுது கவலைக்
கொள்வர்.
தனிமை
தங்களுடைய
குணத்தின்படியும் சூழ்நிலையின்படியும், சுய
உணர்தலுக்காகத் தங்களை சுற்றியுள்ள மக்களைப் புறக்கணித்துச் சில நபர்கள்
தனிமையில் நேரத்தைச் செலவழிக்க விரும்புவர்.
ஆர்வங்கள்/ விருப்பங்கள்
நாம் செய்கின்ற செயல்கள், நம்முடைய
விருப்பங்கள், நமக்கு இருக்கின்ற வெளியறிவு, காரியங்களின்
மேலுள்ள ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில்
நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். தளர்வை
போக்கவும், பொழுதைப் போக்கவும் உதவும் காரியங்களைத்
தவிர்த்து, நம்முடைய ஆர்வங்களில் நாம் நேரத்தைசெலவிடுவோம். நம்முடைய
ஆர்வங்களுக்கு ஏற்ப உள்ள காரியங்களுக்குக் கண்டிப்பாகக் கடின
வேலைக்கு மத்தியிலும் சில சமயம் முயற்சித்து நேரம் ஒதுக்குவோம்.
புத்துணர்வு அளிக்கும் இடம்
மனிதர்களாக நாம் பொதுவாகவும் வழக்கமாகவும்
செய்யும் காரியங்களிலிருந்து விடுப்பட, சோர்ந்திராமலும்
இருக்க, புதிய காரியங்களை நாடியறிய நினைக்கிறோம். சில
பொழுதுகளில் நாம் நமக்குப் பிடித்த இடத்திற்கோ புதிய இடத்திற்கோ சென்று சில நாட்களையோ, வாரங்களையோ, மாதங்களையோசெலவிடுகிறோம்.
மனிதர்களோடு கூட
நாம் ஒற்றுக்கொண்டாலும் இல்லையெனிலும் மனிதர்களே
உலகில் மிக உயர்ந்த வளங்கள். மக்கள் தாமே
தங்களுக்காகவோ தங்கள் சுற்றுப்புறத்திற்காகவோ காரியங்களை உருவாக்குகின்றனர்
மற்றும் அழிக்கின்றனர். பொருள் சார்ந்த அல்லது பொருள் சாராத அனைத்து
காரியங்களின் மதிப்பீடுகள், சுற்றியுள்ள மக்களைச் சார்ந்தே உள்ளது. நாம்
பரிமாரிக்கொள்கின்ற அனைத்து உணர்வுகளும், அறிவும்
ஒருவரோடொருவர் நேரம் செலவிடுவதால்தான் நிகழ்கிறது.
மதம்/கடவுள்
மதத்தின் மீது அதிக பற்றுள்ளவர்கள்
தங்களுடைய அதிக நேரத்தைக் கூட்டங்கள், புனித
ஸ்தலங்களை பார்வையிடுதல் போன்ற செயல்களில் செலவிடுகின்றனர், சில
நேரங்களில் அவர்களின் அனுதின செயல்பாடுகளும் கூட மதத்தின் அடிப்படையிலேயே
இருக்கும். நேரம் செலவிட்டு, வேதங்களைப்
படித்து, கடுவுளை உண்மையாகத் தேடுவோரும் உண்டு. பகுத்தறிவோடோ
பகுத்தறிவில்லாமலோ கடுவுளை உண்மையாக நம்புவோருக்கு, கடவுள்
இன்றியமையாதவர்.
போக்குவரத்து
21வது
நூற்றாண்டில், போக்குவரத்து மிகவும் எளிதானதாகவும், வேகமானதாகவும்
மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் தினமும் 300 கிலோமீட்டர் வரை ரயிலிலும், சாலையிலும்
பயணம் செய்வோர் உள்ளனர். ஒரு சில நாட்களில் உலகம் முழுதும்
சுற்றிவரவும் முடிகிறது. போக்குவரத்திற்கான நேரம் குறைந்தாலும், நாம் அடிக்கடி
பயணம் செய்யவும், அதற்காக நேரம் செலவழிக்கவும் வேண்டியுள்ளது,
ஒய்வு மற்றும் புத்துணர்ச்சி
மனிதர்களாக நாம் ஒவ்வொருவருக்கும் சோர்வு
ஏற்படும், எனவே நாம் கொஞ்ச நேரம் ஒவ்வெடுப்பதும், புத்துணர்வு
அடைவதும் அவசியமாகும். ஒரு இயந்திரம் கூடச் சில மணித்துளி
அமர்த்திவைக்கப்பட்டு இருப்பது அது நீண்ட காலம் பழுது இல்லாமல் செயல்பட உதவுகிறது. அதே போல் தான்
மனிதர்களும் தூக்கத்திற்கு குறிப்பிட்ட நேரமும், உணவை உட்கொண்டு
ஆற்றல் பெற சிறிது நேரமும் செலவு செய்கின்றனர்.
அடிமைத்தனங்கள், முதலியன
சில பழக்கங்களை நாம் பெற்று, பகுத்தறிவு இல்லாமல்
அதனைச் சார்ந்து, சில நேரங்களில் அதைத் தொடர்ந்து
பின்பற்றுகிறோம். சில நபர்கள் சில பொருட்களால்
ஆட்டிபடைக்கபடுவதால், அந்தப் பொருட்களைக் கட்டாயத்தால்
உபயோகிக்கின்றனர். அவை அனைத்துமே அடிமைத்தனங்கள், அது ஒரு சிறிய
காரியத்திலிருந்து ஒரு மிகுதியான காரியமாக இருக்கலாம், சில நபர்கள்
அதிலேயே அதிக நேரத்தையும் செலவழிக்கின்றனர். உலகில்
அனைத்திற்குமே ஒரு நோக்கம் உண்டு, சில காரியங்களை
நாம் கட்டுபடுத்துவதற்கு மாறாக நோக்கங்கள் இல்லாமல் நம்மை அது கட்டுபடுத்தும்
பொழுது அடிமைத்தனம் உருவாகிறது.
தினசரி செயல்களின் அட்டவணை
நாம் எப்படி நேரத்தைச் செலவிடுகிறோம் என்பது, நேர
மேலாண்மைக்கு அவசியம். நாம் எப்படி நேரத்தை உபயோகிக்கிறோம் என்பதை
உணர்வதற்கும், திரும்பிப் பார்ப்பதற்கும், தெரிந்துக்கொள்வதர்க்கும், அட்டவணை
அவசியம். பெரும்பாலான செயல்கள் நாம் வழக்கமாகச்
செய்பவை ஆயினும், அவற்றின் ஆக்கப்பூர்வ நிலை பெரிதும்
வேறுபடும். கடந்த சில நாட்களின் அட்டவணை, எதிர்
நோக்கும் நாட்களை நாம் சரியாகத் திட்டமிடவும், நேரத்தைச்
சிறந்த முறையில் நிர்வகிக்கவும் உதவும்.
பெரிதும் பலன் தரக்கூடிய காரியங்களைச் சிலர்
வழக்கமாகச் செய்வர், சிலர் எப்பொழுதாகிலும் செய்வர். நாம் ஒரு
இடத்தில் சும்மா உட்கார்ந்திருந்தாலும், நிறைய
காரியங்களை ஓய்வின்றி செய்தாலும், அனைத்திலும்
நேரத்தைச் செலவிடுகிறோம். எனவே நாம் அனைவரும் நமக்கு நாமே
பின்பற்றுகின்ற அட்டவணை நிச்சயமாக உள்ளது. அது நிறைய
பேருக்கு ஒரே விதமாக இருப்பதில்லை, நிலையானதாகவும் இருப்பதில்லை, எனினும்
செய்கின்ற வேலை அல்லது கல்வி சார்ந்த காரியங்களின் தேவையினாலோ, கட்டாயத்தினாலோ
சில செயல்களுக்கு நிலையானதாக அமைந்துவிடுகிறது, பொதுவாகப் பிற
செயல்களுக்கு நிலையான அட்டவணை இருப்பதில்லை. நமக்கு ஒரு
சமயத்தில் தோன்றுவதை செய்கின்றோம் அல்லது தேவைக்கு
ஏற்றக் காரியங்களைப் பின்பற்றுகிறோம்.
நாம் திட்டமிட்டாலும் திட்டமிடவில்லை
என்றாலும், நாம் செய்கின்ற செயல்களுக்கு ஒரு அட்டவணை
உள்ளது. நாம் நேரத்தைச் சிறந்த முறையில் நிர்வகிக்கவும், நாம்
செய்கின்ற காரியங்களில் உள்ள சிறப்புகளையும் உபயோகத்தையும்
யோசித்து, சரியான தயாராகுதலினாலும், திட்டமிடுதலினாலும்
பகுத்தறிவது அவசியம்.
குறைந்த பட்சம் உங்களின் மூன்று நாட்களுக்கான அட்டவணையைப்
பகுத்தாராயுங்கள்
புதிய காரியங்களை நாம் முயற்சிக்கும்
முன்னர், எந்த நிலையில் நாம் இருந்தோம், தற்போது எந்த
நிலையில் உள்ளோம் என்பதை கண்டறிந்து ஆராய்வது அவசியமாகும். அது எதிர்கால
திட்டங்களைப் பெரிதும் பாதிக்காத விஷயமாக இருப்பினும், சாத்தியமான
விதத்தில் திட்டமிடவும், செயல்படவும் அது உதவும். எனவே குறைந்த
பட்சமாக உங்கள் மூன்று நாட்களின் அட்டவணையை யோசித்து பகுத்தாராய்வது, நேரத்தைச்
சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும்.
குறைந்த பட்சம் உங்களின் மூன்று நாட்களின் அட்டவணையை நீங்கள் யோசித்த
பிறகு, உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்விகள்
குறைந்த பட்சம் உங்களின் மூன்று நாட்களின்
அட்டவணையைக் கண்டறிந்து பகுத்தாராய்ந்த பிறகு, கீழே உள்ள
கேள்விகளைக் குறித்து யோசியுங்கள்
நீங்கள் செய்கின்ற எந்தச் செயல் உங்களுக்கு ஆர்வத்தை தரக்கூடிய
உங்களுக்கு விருப்பமான செயல்? ஏன்?
எது கற்றுக்கொள்வதற்கு உபயோகமானது? ஏன்?
எது செயல்படுவதற்கு சாத்தியமானது? ஏன்?
எந்தச் செயல் குழப்பத்தை உண்டாக்குகிறது, பிடிக்காததாய் உள்ளது? ஏன்?
எது அடிமைப்படுத்த கூடியதாய் உள்ளது அல்லது அதிக நேரம் எடுக்கிறது? ஏன்?
நேரத்தைச் சரியாக நிர்வகிப்பதற்கான யோசனைகள்
1. ஒருங்கமைப்பு உள்ளவர்களாயிருத்தல்
நேரத்தைச் சேமிக்க பயன்படும் கருவிகளை
உபயோகியுங்கள்: நியமன நாள்காட்டி, மின்னஞ்சல், பேசும்
இயந்திரம், கோப்புகள், உரைகள், முதலியன.
ஒருங்கமைப்பு உடைய வேலையிடத்தை
பெற்றிருங்கள் (தேவையான பொருட்களைத் தேடுவதில் அதிக நேரம்
செலவழிக்காதிருங்கள்)
படிப்பு குறித்த காரியங்களைப் பட்டியலிட, வேலை நேரத்தைத்
திட்டமிட எல்லாவற்றிற்கும் நியமன நாள்காட்டிகளை பயன்படுத்துங்கள்
நீடிய காலத்தில் வாரந்தோறும், தினந்தோறும்
செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டு அதைப் பயன்படுத்துங்கள்
2. முன்கூட்டியே திட்டமிடுங்கள் (அட்டவணையிடுங்கள், காரியங்கள் நடைபெறும்)
உங்கள் வேலை எவ்வளவு பெரியது என்பதை
கணக்கிடுங்கள் (ஒரு வேலையை ஒற்றுக்கொள்வதற்கு முன்னர் அதைக்
குறித்து யோசியுங்கள்)
சில காரியங்களைச் ஒன்றுச் சேர்த்து செய்ய
முடியுமா என்பதை பாருங்கள்
பெரிய வேலைகளை, சுலபமாக
முடிக்கக்கூடிய சிறிய வேலைகளாகப் பிரியுங்கள் (தேர்விற்கு
தயாராகுவது, அலுவலக வேலை, நூலகத்தைப்
பார்வையிடுவது, எழுதும் பணியை
முடிப்பது போன்றவை)
3. உங்கள் வேலைகளை முன்னுரிமை கொடுத்துப்
பிரியுங்கள்
அ, ஆ, இ, என நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைப்
பட்டியலிட்டு, அ என்று
குறிப்பிட்ட காரியத்திற்கு அதிக முன்னுரிமை கொடுங்கள். முக்கியத்துவத்தையும், அவசர
நிலையையும் கொண்டு ஒரு காரியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நீங்கள் குறிகிய காலத்திலோ, நீடிய
காலத்திலோ சென்றடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயிங்கள்.
நீங்கள் செய்து முடிக்க வேண்டிய பட்டியலைப்
பார்த்து, அவற்றை
முடிக்க எவ்வளவு காலம் தேவை, கூடுதலாக
ஏதேனும் காரியங்கள் தேவையா என்பதை கண்டறியுங்கள் (தேவையெனில்
கொஞ்சம் நேரம் காரியங்களைச் சேகரிக்க செலவிடுங்கள்). சிறிய வேலைகளைச்
செய்வதில் காலம் தாழ்த்தாதிருங்கள் (காரியங்களை முடிக்கின்ற
மனப்பான்மை நல்லது, ஏனெனில் ஒன்று சேர்ந்த
சிறிய வேலைகள் சில சமயம் மிகப் பெரிய வேலையாகிவிடலாம்).
4. அதிக சுமைகளைத் தவிருங்கள்
ஒவ்வெடுக்க, தளர்வுகளை
போக்க, உறங்க, சாப்பிட, சமூகமாக
இருக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
படிக்கும் போதும், வேலை செய்யும்
போதும் சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
காரியங்களைக் கடைசி நிமிடம் வரை
எடுத்துச்செல்லாதிருங்கள். (விசேஷமாகத்
தேர்விற்கு தயாராவது)
சில சமயங்களில் இல்லை அல்லது முடியாது என்று
சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். முடிக்க
முடியாத நேரங்களில் கலந்துந்துரையாடி முடிக்க வேண்டிய அளவுக்கு நேரத்தை
மாற்றிக்கொள்ளுங்கள்.
5. கல்வி/ வேளையில் சிறந்த நுட்பங்களைப்
பயன்படுத்துங்கள்
உங்களுக்கு ஏற்றக் கல்வி/ வேலைப்பார்க்கும்
சூழலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
பெரிய வேலைகளை, நிர்வகிக்கக்கூடிய
சிறிய வேலைகளாகப் பிரியுங்கள்.
முடிப்பதில் கவனம் செலுத்துவதை விட, சிறிய சிறிய
காரியங்களாக அறிந்து புரிந்துக்கொள்ளுங்கள்,
படிப்பிலோ/ வேலையிலோ
கடைசிவரை காத்திராமல் அந்தந்த நேரத்தில் கேள்விகளுக்கான விடைகளைத்
தெரிந்துக்கொள்ளுங்கள்.
கடினமான காரியங்களை முதலில் முடியுங்கள்.
கடைசி நேரம் முடித்துக்கொள்ளலாம் என்று
நினைக்காதிருங்கள்.
பாடத்திட்டம்/ கொள்கைகள்/ நடைமுறைகளைப்
படித்து அதை எப்படி கையாள்வது என்று உங்கள் நாள்காட்டியில் குறித்துக்கொள்ளுங்கள்.
முன் உதாரணமாக இருங்கள! (கவனத்துடன்
இருங்கள், கலந்துக்கொள்ளுங்கள், காலந்தவராதிருங்கள், புதிய
காரியங்களைத் தினமும் கற்றுக்கொள்ளுங்கள்).
6. வளைந்துக்கொடுக்கிறவர்களாக இருங்கள்
எதிர்பாராத காரியங்கள் சில நேரம் ஏற்படலாம் (உடல்நல குறைவு, விபத்துகள், போக்குவரத்து
பிரச்சனை முதலியன); நீங்கள் தேவைக்கேற்ப
உங்கள் அட்டவணையினுள் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் அட்டவணையைத் தேவைக்கு ஏற்றவாறு
மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தேவைப்படும் உதவியைப்
பெற்றுக்கொள்ளுங்கள்.
7. தொலை நோக்குடையவர்களாய் இருங்கள் (நீங்கள் செய்யும் காரியங்களில்
தெளிவோடிருங்கள்)
நீங்கள் கொண்டுள்ள நீடிய கால குறிக்கோள்களையும், உங்கள்
வாழ்வின் நோக்கத்தையும் மறவாதிருங்கள், நீங்கள் செய்யும் காரியங்கள் அதற்கு
ஏற்றதாய் இருக்கிறதா என்று ஆராய்ந்துப் பாருங்கள்.
பணித்திட்டம் (தனிப்பட்ட
வாழ்விலும், தொழிலிலும்) உடையவர்களாய்
இருங்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் உங்கள்
குறிக்கோள்களை நோக்கி இருக்கிறதா எனச் சோதித்து பாருங்கள்.
உங்களுக்கு எது முக்கியம் என்பதை
தெரிந்துக்கொள்ளுங்கள்
உங்கள் நேரத்தை உங்கள் குறிக்கோளிற்கு ஏற்றத்
திறன்களையும் தாலந்துகளையும் வளர்த்துக்கொள்வதில் செலவிடுங்கள்.
நேர்மறை மனப்பான்மையுடையவர்களாய் இருங்கள்.
முடிவுரை
“ வெற்றிகரமாக இருப்பது, நம்முடைய நேரத்தைச் சரியாக நிர்வகிக்க
உதவாது.
நேரத்தை நாம் சரியாக நிர்வகிப்பது நம்மை வெற்றிகரமாக மாற்றும்
”
Comments
Post a Comment