2. ஆள்களுக்கிடையிலான திறன்கள்

2.      ஆள்களுக்கிடையிலான திறன்கள்

 (ஒருவரோடொருவர் சிறந்த முறையில் தொடர்புக் கொள்ள உதவும் திறன்)

இந்த உலகில் எவராலும் எல்லாவற்றையும், மற்ற மனிதர்களையும்  விடுத்து தனிமையாக இருக்க முடியாது. சிலர் தங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள மனிதர்களால் ஏற்பட்ட கசப்பினால் கஷ்டங்களினால் அவ்வாறு கூறினாலும், அவர்களால் அதைச்             செய்ய முடியாது. நாம் சக மனிதர்கள் இல்லாமல் காரியங்களை வெளிப்படுத்த இயலாத படி, சிறப்பம்சமும் தன்மையும் உடையவர்கள். நாம் ஒவ்வொருவரும் நிறைய மனிதர்களைத் தினந்தோற வாழ்வில் கடந்து வருகிறோம், எனினும் நாம் அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்துக் கொள்வதில்லை. நாம் தற்காலிக காரியத்திற்கும் செயலுக்கும் மிகவும் மேலோட்டமாக உறவுக் கொள்கிறோம், தொடர்ந்து பழகுபவர்களிடம் சாதாரண முறையில் நெருக்கமான உறவு கொள்கிறோம். நாம் வாழ்வு முழுவதும் தொடரக்கூடிய உறவுகளைக் குடும்பத்தினர், நண்பர்கள்கள், உறவினர்கள் மூலம் பெறுகிறோம். மற்றும் மேலோட்டமான உறவினை கல்வி கூடங்கள், வேலையிடம், சந்தை, போக்குவரத்து நிலையங்கள் போன்ற இடங்களில் பெறுகிறோம்.

தனித்துவமுள்ள குணநலன்கள்

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய விருப்பங்களில் தனித்துவமுள்ளவர்களாய் உள்ளோம்

இந்த உலகில் எப்படியாக நாம் ஒவ்வொருவரும் காரியங்களைப் பார்க்கிறோம் என்பது தனித்துவமானதாகும், அதைப் பொறுத்தே நமது ஆர்வங்களும் அமைந்திருக்கிறது. மற்றும் நம் ஒவ்வொருவருடைய விருப்பங்களும் கூடப் பரவலாக வேறு[ப்படுகிறது. இந்தத் தனித்துவங்களே உலகை முழுமையானதாகவோ, சிக்கலானதாகவோ உருமாற்றி நமக்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

நாம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அறிவும் அனுபவமும் உள்ளது

நம்மிடையே அறிவு, அனுபவம், கல்வி, திறன் முதலியவற்றின் அடிப்படையில் நிறைய வேற்றுமைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் மற்றவருக்கு ஏதாவது வகையில் உபயோகமாக இருக்க முடியும். சில விஷயம் ஒரு தனிப்பட்ட நபருக்கு மாத்திரமே தெரிந்திருக்கும். ஒருவரும் மற்றவருடைய சிந்தனையை, செயல்களை, நடக்கையை அப்படியே பின்தொடர முடியாது. ஒரு நபரின் தனிப்பட்ட அறிவையும் அனுபவத்தையும் உலகில் எந்த நபருடைய அறிவினோடும் ஒப்பிட முடியாது.

நாம் ஒவ்வொருவரும் நமக்கே உரிதான சூழ்நிலையைச் சந்திக்கின்றோம்

நாம் வாழ்வில் சந்தோசம், சமாதானம், வறுத்தம், வெறுப்பு முதலிய வெவ்வேறு உணர்வுகளைக் கொண்டுள்ள சந்தர்ப்பங்களைச் சந்திக்கிறோம், ஒவ்வொருவருடைய சூழ்நிலைகளும் தனித்துவமிக்கதாய் உள்ளது. நிறைய நேரங்களில் நம்மால் சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தவோ மாற்றி அமைக்கவோ முடிவதில்லை, ஆனால் நாம் எப்படி அதற்கு  மருவுத்தரவு தருகிறோம் என்பதை எப்பொழுதும் கட்டுப்படுத்த, மாற்றி அமைக்க முடியும்.

நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய கலாச்சாரம், கல்வி, குடும்பம், சமூகம் மற்றும் பிற பின்ணணிகளை கொண்டுள்ளோம்.

ஒரு மனிதரும் மற்றவருடைய மரபுவழி இடத்தை எந்தக் காலத்திலும், குடும்ப பின்னணியினாலும், சமூக பின்னணியினாலும் நிரப்ப முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் குழுவினரோடு பகிர்ந்துக்கொள்ளும் கலாச்சாரம், கல்வி மற்றும் மற்ற பின்னணிகள் தனித்துவமானவைகள்.

நாம் ஒவ்வொருவரும் மற்றவருக்கு ஏதாவது விதத்தில் பங்காளிகளாய் இருக்கின்றோம்

ஒன்று அல்லது மேற்பட்ட விதங்களில் நாம் மற்றவர்களோடு இணைந்திருக்கின்றோம். இந்த உலகில் எவராலும், ‘நான் தனிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறேன், எனக்கு யாரும் தேவை இல்லைஎன்று சொல்ல முடியாது. நம் வாழ்வில் நிறைய தேவைகளுக்கும், ஆசைகளுக்கும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கின்றோம். நாம் பேசுவதும் செயல்படுவதும் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறது, அது மற்றவர்களைக் கட்டக்கூடியதாகவோ அழிக்கக் கூடியதாகவோ இருக்கலாம்.

ஆள்களுக்கிடையிலான திறன்கள் என்றால் என்ன?

ஆள்களுக்கிடையிலான திறன்கள் என்பது நாம் ஒருவரோடொருவர் தனியாகவோ, குழுவாகவோ தொடர்புக்கொள்ள தினந்தோறும் பயன்படுத்தும் வாழ்வியல் திறன்கள்

மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் மற்றவரோடு இடைப்படுகிறோம். தனிப்பட்ட நபரோடோ, குழுவினரோடோ முறையான, வழுவான தொடர்பு இருக்க வேண்டுமானால் ஆள்களுக்கிடையிலான திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இந்தத் திறன்கள் நாம் எப்படி பேசுகிறோம், நடக்கிறோம், மறு மொழிகிறோம் என்பதை விவரிக்கும்.

ஆள்களுக்கிடையிலான திறன்கள் உள்ளவர்கள் தனிப்பட்ட வாழ்விலும், தொழில்முறை வாழ்விலும் வெற்றியுள்ளவர்களாய் இருப்பர்

ஆஸ்தியும், உடல் நலமும் மாத்திரம் ஒரு மனிதனை தன்னுடைய  தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் வெற்றியடைய செய்வதில்லை. நல்ல குணங்களான நம்பகத்தன்மை, நற்குணம், பொறுமை, பொறுப்பு முதலியன நம் வாழ்வில் நாம் வெற்றி பெற தேவையானதாகும். இவை அனைத்திற்கும் ஆள்களுக்கிடையிலான திறன்கள் மிகவும் அவசியமாகும்.

நாம் மற்றவர்களோடு எப்படி தொடர்புக்கொள்கிறோம் என்பதை குறித்து விழிப்புடன் இருக்கும் பொழுதும், பழக்கத்தினாலும் ஆள்களுக்கிடையிலான திறன்களை மேம்படுத்த முடியும்

ஆள்களுக்கிடையிலான திறன்கள் மரபு வழி திறன்கள் இல்லை, நாம் ஒருவரோடொருவர் இடையீடு செய்து அவர்கள் வாழ்வில் ஏற்ற  விதத்திலும், ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விதத்திலும் ஈடுபடும் பொழுது வளரக்கூடியவை. நாம் ஒருவரோடொருவர் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்றார் போல எப்படி தொர்டர்புக்கொள்ள வேண்டும், எப்பொழுது தொடர்புக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வது அவசியமாகும்.

நம்மைச் சுற்றியுள்ள உறவுகள்

நம்மைச் சுற்றி நிறைய அழகான உறவுகள் உள்ளன

இந்த உலகில் எவரும் வானிலிருந்து நேரடியாக இந்த உலகிற்கு வரவில்லை. எல்லோரும் மரபு வழியாக நிறைய உறவுகளைப் பெற்றிருக்கிறோம். ஒரு நபர் தவிர்க்க முடியாத காரணங்களால் மரபு வழி சார்ந்த உறவுகளை இழந்திருந்தாலும், மற்ற உறவுகளை ஆள்களுக்கிடையிலான திறன்கள் மூலம் பெற இயலும்.

உறவுகளில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் யோசனையும் இல்லாமல் பொருள் மற்றும் உணர்வு சார்ந்த காரியங்களைக் பகிர்ந்துக்கொள்கிறோம்

நாம் ஒருவரோடு கூட உறவில் இருக்கிறோம் என்பதை பொருள் சார்ந்த மற்றும் உணர்வுகள் சார்ந்த காரியங்களைப் பகிர்வதன் மூலம் தான் வெளிபடுத்த முடியும். உணர்வு சார்ந்த காரியங்களாவன அன்பு, அக்கறை, பாசம், ஊக்கம், மற்றும் சில நேரங்களில் கோபம், வெறுப்பு முதலியன. பொருள் சார்ந்த காரியங்களாவன வீடு, பணம் மற்றும் அனைத்து பொருள் சார்ந்த விஷயங்கள்.

எப்பொழுது நேர்த்தியான தொடர்பும், ஒருவரோடொருவர் ஒற்றுப்போகுதலும், ஒரு மனநிலைப்பாடும், இருக்குமோ அப்பொழுதுதான் உறவுகள் நிலைத்திருக்கும்

எல்லா உறவுகளும் உயிரோட்டத்துடன் நிலையாய் இருப்பதற்கு தகவல்களைக் கொடுப்பதும், பெற்றுக்கொள்வதும் அவசியமாகும். சந்திப்பதிலும் தொடர்புக்கொள்வதிலும் இடைவெளி இருக்கும் பொழுது, உறவுகளின் வீரியமும் குறைந்துப்போகும். மற்றும், ஒருவரோடொருவர் சில காரியங்களில் ஒற்றுக்கொள்ளாத பொழுதும், உறவுகள் நிலை நிற்பதில்லை. ஒரு மனப்பாண்மை பொதுவான நோக்கத்துடன்  உறவுகளில் நாம் முன்னேற உதவுகிறது.

ஆள்களுக்கிடையிலான திறன்களின் அவசியம்

ஆள்களுக்கிடையிலான திறன் நம்முடைய உணர்வுகளையும், சிந்தனைகளையும், பொருட்களையும் ஒருவரோடொருவர் பகிர்ந்து தன்னிலையை நிலைநிறுத்த மிகவும் அவசியமாகும்

எல்லா உணர்வுகளையும், சிந்தனைகளையும் மற்றொரு நபர் இல்லாமல் சிறந்த முறையில் வெளிப்படுத்த முடியாது. காரியங்களை வெளிப்படுத்த மற்ற மக்கள் மிகவும் அவசியம். ஆள்களுக்கிடையிலான திறன்கள் மற்றவர்கள் நேர்மறையாக நம்முடைய உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் செவிக்கொடுக்க அவசியமாகும். உலகில் உள்ள அனைத்து பொருள்களும் மக்களின் வாழ்வை சுலபமாக்கத்தான் உருவாக்கப்பட்டும், மாற்றம் செய்யப்பட்டும் உள்ளன.

நாம் மனிதர்களாக ஒரு சமூகமாக இருக்கிறோம். நாம் தனியாக இருக்க உட்பட்டால் அதில் அர்த்தம் ஒன்றும் இல்லை

தனியாக இருப்பதனால் எந்த மனிதரும் வாழ்விற்கு அர்த்தம் தர முடியாது. சில தோல்விகளையும் கஷ்டங்களையும் சந்தித்த பிறகு நிறைய பேர் தனிமையாக வாழ வேண்டும் என்று எண்ணுவர். அது மிக மிகக் கடுமையான காரியம். ஏனெனில் நாம் நம் வாழ்வில் ஒருவரை ஒருவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்திருக்கின்றோம்.

எல்லோரும் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் மக்களைக் கடந்து வருகிறோம்

எல்லா இடங்களிலும் மக்களே சிறந்த வளங்களாக உள்ளார்கள். மக்கள் உலகின் அனைத்து இடங்களிலும் எப்பொழுதும் இருக்கிறார்கள், நாம் மக்களை வீட்டிலிருந்து பொது இடம் வரை எல்லா இடங்களிலும் காண முடியும்.

வீடாயினும், கல்வி/ வேலையிடமாயினும், சந்தைகளாயினும், நம்மைசுற்றி மக்கள் இருக்கிறார்கள்

நாம் எல்லாவற்றையும் விடுத்த கடுமையான வாழ்வை தேர்ந்தெடுத்தாலும், நாம் எல்லா மக்களையும் விடுத்து தனிமையான இடத்தையே பற்றி இருக்க முடியாது. நாம் விலகிச் சென்றாலும் கூட, நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றபடியால் சில மக்கள் நம்மைப்  பின்தொடர்வார்கள்.

நம்முடைய உணவும், பொருட்களும், கல்வியும், மருத்துவமும் எளிதாகக் கிடைப்பதற்கு, நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றோம்

ஒரு மனிதன் முதிர்ச்சியை அடைந்த பிறகு தனிமையான ஒரு காட்டின் குகையில் வாழ வேண்டும் என்று விரும்பினால், அவர் அவருடைய அனைத்து தேவைகளையும் தாமாகவே சந்திக்க வேண்டியிருக்கும். அந்தக் கடுமையான காரியத்தை ஒருவர் ஏற்றாலும், அவர் தம் வாழ்வினை வெறுத்து முக்தியடைய விரும்புவார்.

ஆள்களுக்கிடையிலான திறன்களைப் பாதிக்கும் காரணிகள்

தனிப்பட்ட காரணிகள்

கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால சூழ்நிலைகள், வருங்கால எதிர்ப்பார்ப்புகள் போன்றவை ஆள்களுக்கிடையிலான திறன்களைப் பாதிக்கும்

நம்மைச் சுற்றி நடக்கும் எதுவும் ஒரு விபத்தல்ல, கடந்த காலத்தில் நடந்த ஒவ்வொரு காரியமும் நாம் நிறைய நேர்மறை மற்றும் எதிர்மறை காரியங்களை நம்மிடமிருந்து நாமே கற்க உதவுகிறது, ஆனால் நிறைய நேரங்களில் நாம் தவறான தீர்மானங்களை எடுத்துவிடுகிறோம். நாம் மற்றவர்களோடு எவ்வாறு தொடர்புக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம் என்பதை கடந்த கால அனுபவங்களும், நிகழ் கால உணர்வுகளும், வருங்கால எதிர்ப்பார்புகளும் பெரிய அளவில் பாதிக்கிறது.

சமூக காரணிகள்

கலாச்சார பழக்கங்கள், குடும்ப சூழ்நிலை, வேலை இடத்தின் சூழல் முதலியன ஆள்களுக்கிடையிலான திறன்களைப் பாதிக்கும்

நேராகவோ மறைமுகமாகவோ நம்முடைய குடும்பத்திலும், வேளையிலும் புகுத்தப்பட்ட கலாச்சாரம் சார்ந்த காரியங்கள், நாம் எப்படி பேசுகிறோம், செயல்படுகிறோம், எப்படி தோன்றுகிறோம் என்பதை பெரிதும் பாதிக்கிறது. நம்முடைய வீடு மற்றும் வேலையிடங்களில் உள்ள விதிகளும், நடைமுறைகளும் நம்முடைய வாழ்க்கை முறையையும் உறவுகளையும் பாதிக்கிறது.

பொருளியில் காரணிகள்

பொருளாதாரச் சூழ்நிலைகள், வகிக்கும் பதவி, மற்றும் செல்வம் போன்றவை ஆள்களுக்கிடையிலான திறன்களைப் பாதிக்கும்

பணம் தினந்தோற வாழ்விற்கு பெரிதும் அவசியமாகும். அது  நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் எதாவது காரியத்தைப் பெறுவதற்கு அவசியமாக இருக்கிறது. நாம் வகிக்கும் பதவிகளும், பொறுப்பும் கூட நமது இயல்பான நடக்கையை மறைத்து நம்மைச் செயல் புரிய செய்கிறது. எனவே ஒரு மனிதர் எப்பொழுது மனிதர்களை விடப் பொருட்களை மதிப்புமிக்கதாக எண்ணுகின்றாரோ, அப்பொழுது ஆள்களுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படும்.

முரண்பாடுகளைக் கையாளுதல்

ஒரு நபர் ஒற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். ஒற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில், வேறுப்பட்டிருக்கும் காரியங்களை எடுத்துரைத்து, விலகிக்கொள்ளலாம்

நாம் நிறைய நேரங்களில், நாம் மாத்திரம் சிறந்தவர்கள் என்றெண்ணி மற்றவர்களின் யோசனைகளைத் தவிர்க்கிறோம். மற்றவருடைய யோசனையை அறிவதற்கு பொறுமை மிகவும் அவசியம். நாம் எல்லா நேரங்களிலும் பொறுமையாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் ஒற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களிலாவது பொறுமையாக இருப்பது அவசியம். சில காரியங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருப்பதில்லை, அதனால் ஏன் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தை உரைத்து அதைத் தடைசெய்வது அவசியமாகும்.

ஒரு நபர் மற்றவருடைய சிந்தனைக்குச் செவிக்கொடுத்து அதற்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்

மற்றவர்களுடைய சிந்தனைக்குச் செவிகொடுப்பதற்கு பொறுமை மிகவும் அவசியம், அது கடினமும் கூட, எல்லா நேரங்களிலும் மற்றவர்களுடைய சிந்தனை நம்மோடு ஒற்றுப்போவதில்லை. அதனால் எப்பொழுதும் மற்றவர்களுடைய கருத்துக்கள் மதிப்பில்லாததாக இருக்கும் என்று அர்த்தமில்லை. எல்லோரும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான காரியங்கள் உள்ளன, மற்றவருக்குத் தெரியாத ஒரு சில காரியங்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே சில காரியங்களை யோசிப்பதற்கும், தெரிந்துக்கொள்ளுவதற்கும், ஒருவரை ஒருவர் சரிசெய்யவும், ஊக்கப்படுத்தவும், மற்றவர்களுடைய சிந்தனைக்கு யோசனைக்குச் செவிக்கொடுப்பது அவசியமாகும்.  

ஒரு நபருடைய தவறுகளைத் தனிப்பட்ட முறையில் சரி செய்ய முடியும். நிறைய நேரங்களில் நம் பார்வைக்கு மற்றவர்கள் உயர்வாகத் தெரியவில்லை என்றாலும் மற்றவர்களை மேன்மையாகக் கருதலாம்

உலகில் தவறுகள் இல்லாத மனிதரே இல்லை, எனவே ஒருவரை ஒருவர் எப்பொழுதும் சரி செய்வது அவசியம். ஒவ்வொரு மனிதரும் தவறு செய்திருந்தாலும் நான் என்ற முனைப்பு, அவர்கள் தங்களையே தற்பாதுக்காக்க செய்கிறது. தவறுகளை அனைவர் முன்னிலையிலும் சரிசெய்வதை விட,  தனிப்பட்ட முறையில் சரி செய்வது அதிக சிறந்ததாகும். நாம் ஒவ்வொருவரும் நிறைய பேரைவிடச் சிறந்தவர்களாக இருப்பினும், மற்றவர்களைச் சிறந்தவர்களாகக் கருதி, அவர்களுக்குச் செவிக்கொடுப்பது, நம்மை மேம்படுத்திக்கொள்ளவும் ஆள்களுக்கிடையேயான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.

மற்றவர்கள் புண்படக்கூடிய காரியங்களைச் செய்யாமலும், புறம் கூறாமலும் இருக்க வேண்டும்

நிறைய உறவுகளில் பிளவு ஏற்பட காரணம், மக்கள் தொடர்ந்து மற்றவர்களுடையச் செயல்களில் இடையிட்டு, அவர்களுக்குப் பிடிக்காத வகையில் அவர்களுடைய  தனிப்பட்ட காரியங்களைத் தடை செய்வதேயாகும். சில நேரங்களில் ஒரு நபர் தன்னுடைய பலவீனங்களையும், தடைகளையும் ஒருவருக்கொருவர் இடையே அது ரகசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையினால் பகிர்வதுண்டு, ஆனால் அந்த நம்பிக்கை உடையும் பொழுது, உறவுகள் உடையும், மற்றும் அதைச் சரி செய்வது கடினமாகும்.

எதிர்மறையான விதத்தில் தொடர்புகொள்வதை தவிர்க்க வேண்டும்

தொடர்புக்கொள்வது என்பதில் ஒருவரோடொருவர் யோசனைகளையும், சிந்தனைகளையும், பகிர்ந்து கொள்வது அடங்கும். தொடர்புக்கொள்வது சொல் சார்ந்ததாகவோ, சொல் சார்ந்திராததாகவோ இருக்கலாம். சொற்களோ செயல்களோ சில நேரங்களில் எதிர்மறையாக, இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கலாம். அந்த மாதிரியான சரியாக இல்லாத தொடர்புக்கொள்ளுதல், நிறைய மக்களைப் பாதிக்கும், சில நேரங்களில் துன்புறுத்தும். ஆட்களுக்கிடையேயான உறவுகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு தகுதியாயிராத வார்த்தைகளையும் செயல்களையும் தவிர்ப்பது அவசியமாகும்.

மற்றவர்களை அன்போடும் மரியாதையோடும் நடத்துங்கள்

மற்றவர்களைக் கவர, அவர்களுக்குப் பிரியமாய் நடக்க நிறைய வழிகள் உள்ளன, பொய் முகங்களையும் கூடக் காண்பிக்கலாம். ஆனால் அந்தப் பொய் முகங்கள் நிலைத்திருப்பதில்லை, எப்பொழுது வேண்டுமானாலும் களைந்து போகும், இல்லையெனில் அந்த உறவினை கட்ட முடியாமலும் போகலாம். எப்பொழுது ஒரு நபர் மற்றவரை நேசித்து, மரியாதை கொடுக்கின்றாரோ அப்பொழுதுதான் உண்மையான, நம்பகத்தன்மையுள்ள உறவுகள் இருக்கும்.

உங்களுடைய வார்த்தைகள், செயல்கள், நடக்கைகளில் கவனமாயிருங்கள்

வார்த்தைகளும், செயல்களும் நம்முடைய தொடர்புக்கொள்ளுதலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இரண்டும் நம்முடைய நடக்கையின் வெளிப்பாடு, நடக்கை நம்முடைய மனப்பா ன்மையை பொறுத்துள்ளது. நம்முடைய மனப்பான்மை நமக்குள் இருந்தாலும், நம்முடைய வார்த்தைகளும், செயல்களும், வெளியரங்கமாய் உள்ளன. நம்முடைய மனப்பான்மையை நாம் சரி செய்யும் பொழுது, நம்முடைய வார்த்தைகளும், செயல்களும், நடக்கையும் சரியாகும். பிரச்சனைகளைச் சமாளிக்க, ஆரோக்கியமான ஆட்களுக்கிடையேயான உறவுகள் இருக்க, ஒருவருக்கொருவர் இடையேயுள்ள நம்முடைய வார்த்தைகளையும், செயல்களையும், நடக்கையையும் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

 

ஆட்களுக்கிடையேயான திறன்களின் முக்கியத்துவம்

ஆட்களுக்கிடையேயான திறன்கள் ஆட்களுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்

ஒவ்வொருவரும் நமக்கே உரிதான பல யோசனைகளையும் முன்னுரிமைகளையும், நம்முடைய சூழ்நிலைக்கேற்றவாறு பெற்றுள்ளோம். அது சில நேரங்களில் உறவுகளுக்கு மத்தியில் பிளவு ஏற்படுத்தும். ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ளுதல் ஆட்களுக்கிடையேயான திறனாகும், அது தினந்தோறும் மனிதர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.

ஆட்களுக்கிடையேயான திறன் நம்முடைய குடும்பத்தில், படிப்பு/  வேலை இடத்தில், மற்றும் பொது இடங்களிலும் கூட ஆரோக்கியமான உறவை வைத்துக்கொள்ள உதவும்

நாம் மற்றவர்களோடு நல்ல முறையில் நடந்துக்கொள்ளும் பொழுதுதான் அவர்களும் நம்மிடத்தில் நல்ல முறையில் நடந்துக்கொள்வார்கள். எல்லோரும் தங்களை மற்றவர்கள் அன்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டும் என விரும்புவார்கள், ஆனால் நிறைய நேரங்களில் அவர்கள் மற்றவர்களை அப்படி நடத்துவதில்லை. ஆட்களுக்கிடையேயான திறன்கள் ஒரு நபர் மற்றவர்களைத் தங்களிலும் மேன்மையாகக் கருத உதவுகிறது, மற்றும் நாம் குடும்பத்தில், சமூகத்தில், பொது வாழ்வில் நல்லவர்களாக இருக்க உதுவுகிறது.

ஆட்களுக்கிடையேயான திறன்கள் நம்மை விஷேஷித்தவர்களாக்குகிறது, ஏனெனில் பதவிக்கு, அங்கீகாரத்திற்கு, பொருளை ஈட்டுவதற்கு, கடுமையாக உழைப்பது மக்களால் அங்கீகரிக்கப்படவே

உலகில் நிறைய மக்கள் பொருள் சார்ந்த அல்லது பொருள் சார்ந்திராத காரியங்களான பதவி, அங்கீகாரம், பொருள் போன்ற காரியங்களுக்காகப் பரிதவிப்பது அதினுடைய சாரத்தினால் அல்ல, அவை மக்களிடையே பெற்றுள்ள வரவேற்பினால். ஆட்களுக்கிடையேயான திறன்கள் ஆட்களுக்கிடையேயான உறவுகளால் பராமரிக்கப்படுகின்றன, அதுவே நாம் அங்கீகாரம், பதவி, பொருள் போன்றவற்றை பெற ஊக்குவிக்கின்றன.

ஆட்களுக்கிடையேயான உறவுகளைச் சிறந்த வகையில் வளர்த்துக்கொள்ள ஆட்களுக்கிடையேயான திறன்கள் உதவுகின்றன

உறவுகளில் ஒருவரோடொருவர் தொடர்ச்சியாகத் தொடர்புக்கொள்வது அவசியம். நம் தினந்தோற வாழ்வில் நிறைய மக்களோடு நாம் உறவில் நிலைத்திருப்பதில்லை, ஏனெனில் அவர்களோடு தொடர்ந்து நாம் தொடர்புகொள்வதில்லை. எல்லா உறவுகளும் கவனமான முறையில் கையாளப்படும் பொழுதுதான், அது ஆரோக்கியமான முறையில் இருக்கும். நாம் உறவுகளில் சிறந்து விளங்க ஆட்களுக்கிடையிலான திறன்கள் தேவை.

பயனுள்ள ஆட்களுக்கிடையேயான உறவுகளுக்கு வழிமுறைகள்

சிறந்த ஆட்களுக்கிடையேயான உறவுகளுக்குச் சிறந்த முறையில் தொடர்புக்கொள்ளுதல் (சொற்கள் சார்ந்தது, சொற்கள் சார்ந்திராதது) அவசியமாகும்

தொடர்புக்கொள்ளுதலில் வெறும் வார்த்தைகள் மாத்திரம் இருப்பதில்லை, செயல்களும் அடங்கும். சில நேரங்களில் நாம் வார்த்தைகளில் உண்மையுள்ளவர்களாய் இருந்தும், செயல்களில் தவறுகிறோம். நாம் சொல்லும் காரியங்களைச் செய்யாமல் இருப்பதால், மற்றவர்களின் பார்வையில் நம் மதிப்பை இழக்கிறோம். சரியான தொடர்புக்கொள்ளுதல் சொல் சார்ந்த, சொல் சார்ந்திராத காரியங்கள் ஒன்றுசேர்ந்ததாய் இருக்கிறது, அது ஆட்களுக்கிடையேயான உறவுகள் நல்ல முறையில் இருக்க ஆரோக்கியமான வழியில் உதவுகிறது.

மற்றவர்களின் நிலையிலிருந்து காரியங்களைப் புரிந்து, சாமர்த்தியமாகக் கையாள வேண்டும்

செயல்களாலும் வார்த்தைகளாலும் கூடிய எல்லா மறுமொழிகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதில்லை. மற்றும் நம்முடைய பார்வைக்கு விசித்திரமாக அல்லது வித்தியாசமாகத் தெரிகிற காரியங்களைச் சில மனிதர்கள் சொல்லும் சூழல்களும் செய்யும் சூழல்களும் நிச்சயம் இருக்கும். மற்றவர்களுடைய நிலையிலிருந்து யோசித்து அவர்கள் என்ன அர்த்தம் கொள்கிறார்கள் என்பதை புரிந்து, அதைத் தெளிவுப்படுத்திக் கொள்வது அவசியமாகும், அவர்கள் மாறுப்பட்டிருக்கும் சூழலைச் சாமர்த்தியமாகக் கையாளுவது அவசியமாகும்.

அறம் மற்றும் நெறிமுறைகளின் படி சரியான மதிப்பீடுகளுக்காக நின்று, மற்ற காரியங்களைப் பொறுத்துக்கொண்டு வழி விடலாம்

எல்லோரும் அறத்தின்படியும், நெறிமுறைகளின்படியும் சரியான மதிப்பீடுகளுக்காக நிற்பது நம்முடைய மனசாட்சிக்கு பிரியமாய் நாம் இருக்க, அனைவருக்கும் பொதுவான வரையளவு கொண்டிருக்க உதவும், இல்லையேல் ஒவ்வொருவரும் தமக்கு பிரியமான வகையில் நடந்துக்கொள்வர். ஒரு மனிதர் மதிப்பீடுகளிலிருந்து விலகும் பொழுது, அந்த நபர் இன்னும் அதிகம் விலகுவதை தவிர்க்க அவரைச் சரி செய்ய வேண்டும். சரிசெய்ய முடியாத நிலையில், நடந்தவற்றை புறக்கணித்துச் சமர்ந்தியமாகச் செயல்பட வேண்டும். பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, ஆட்களுக்கிடையிலான உறவுகள் நல்ல முறையில் இருக்க, பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல், மற்றவரை உங்களைப் போல் நேசியுங்கள். வேறுபாடுகளின் நிமித்தம் ஒருவரை ஒருவர் மதியுங்கள்

எல்லோரும் நாம் இருக்கும் நிலையில் தனித்துவம் உள்ளவர்களாய் இருக்கின்றோம். ஒருவருக்கொருவர் இடையே உள்ள வேறுபாடுகள் நாம் மற்றவரைக் கண்டு வியக்க, இயற்கையாக நாம் எப்படி ஒருவரை ஒருவர் சர்ந்திருக்கின்றோம் என்பதை புரிந்துக்கொள்ள உதவுகிறது. ஏற்றத்தாழ்வுகளால் ஒருவரை ஒதுக்குவதை விட, மற்றவரை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும், வேறுபாடுகளை மதிக்கும் எண்ணமும் நமக்கு இருக்கும் பொழுது, நிறைய நண்பர்களை நாம் பெற முடியும். நமக்குள்ளே உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துக்கொள்ளும் பொழுது, வேறுபாடுகளின் மத்தியிலும் நம்மால் மற்றவரை உயர்த்த, வியக்க முடியும், நம்மை நேசிப்பது போல அவர்களையும் நேசிக்க முடியும்.

உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதிருங்கள், பொறாமை கொள்ளாதேயுங்கள, மற்றவரின் சிறந்த காரியங்களை ஊக்குவியுங்கள்

ஏதாவது வகையில் நமக்கு நெருங்கியர்களுக்காவது நாம் சிறந்தவர்களாய் உள்ளோம். நம்மிலும் மேலானவர்களோடோ, கீழானவர்களோடோ நம்மை நாமே ஒப்பிட வேண்டியதில்லை. நம்மை நாம் உயர்வாக என்ன வேண்டும், ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க வேண்டும், ஒருவரிடத்திலிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் மற்றவரைக் கண்டு பொறாமை கொள்ள வேண்டியதில்லை, அதற்குப் பதிலாக, அவர்களின் சிறந்த காரியங்களை வியந்து, உயர்த்தலாம்.

ஆட்களுக்கிடையிலான திறன்களுக்கு வேண்டிய குணநலன்கள்

ஆட்களுக்கிடையிலான திறன்கள் நல்ல முறையில் இருக்க, ஒரு நபர் முதலில் தன்னையே தெரிந்திருக்க வேண்டும்

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர்களுடைய விருப்பங்களும் அமைந்திருக்கும். எல்லோரும் வாழ்வில் நிறைய காரியங்களைக் கடந்து வருகிறோம், நிறைய விதமான உணர்வுகளையும், சிந்தனைகளையும் அனுபவித்துள்ளோம். நம்முடைய வாழ்வை நாம் திரும்பிப்பார்த்து  அதிலிருந்து நிறைய காரியங்களைக் கற்ப்பது, முக்கியமானதுமாகும். எவ்வளவுவாக நம்மை நாமே ஆராய்ந்து, தெரிந்துக்கொள்கிறோமோ, அவ்வளவுவாக மற்றவர்களை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். முதலும் முற்றுமாய் நம்மை அறிந்துக்கொள்வது, நல்ல முறையில் ஆட்களுக்கிடையிலான உறவுகளை, ஆட்களுக்கிடையிலான திறன்களால் அதிகரிக்க முடியும்.

ஒரு நபர் மற்றவர்கள் எப்படியாகக் காரியங்களைப் பார்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்

அனைவருக்கும், நமக்கே உரிதான சிந்தனைகளும், யோசனைகளும் உள்ளன. அதை மற்றவரிடத்தில் வெளிப்படுத்தி அங்கிகாரம் பெற வேண்டும் என நினைக்கிறோம், அனைவரும் மற்றவரிடத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் உள்ளன. கவனிப்பது என்பது முக்கியமான திறன், அதற்கு அதிக பொறுமை தேவை. நாம் மற்றவர்களுக்குச் செவிக்கொடுத்து கவனிக்கும் பொழுது, அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். மற்றவரை ஏற்றுக்கொண்டால்தான், அவர்கள் பிழையில்லாமலும், சிறந்தவர்களாகவும் இருக்கும் பொழுது ஏற்க முடியும். மற்றவர்கள் தவறாகவும் மாறுபட்டும் இருந்தால் கூட, அவர்களை ஒப்புக்கொள்ளும் பொழுது அவர்களுக்கு அறிவுரை கூறி சரி செய்யவும் முடியும். மற்றவர்களுடைய பார்வையில் காரியங்களைப் பார்க்க முற்பட்டால் தான் ஆட்களுக்கிடையிலான உறவுகளைக் கட்டவும் வளர்க்கவும் முடியும்.

ஒரு நபர் காரியங்களைப் பகுத்தறிந்து சரியான உணர்வுகளைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும்

மனிதர்களாக நாம் ஒவ்வொருவருக்கும் அறிவுத்திறனிலிருந்து சிந்தனைகளும், உணர்வுகளிலிருந்து உணர்சிகளும் கிடைக்கப்படுகின்றன. நிறைய நேரங்களில் மக்கள் அறிவுத்திறன் உள்ள அறிவை சரியாகப் பயன்படுத்தாதவர்களாக, நிஜத்தை தாண்டி நிறைய யோசிக்கின்றனர், மற்றும் புரியாத விதமாகப் பகுத்தறிவில்லாத உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். எப்பொழுதும் நாம் பகுத்தறிவோடு உணர்வுகள் சார்ந்து இருப்பதில்லை, ஆனால் அனைவரும் நம்முடைய உணர்வுகளைச் சிறிய சிந்தனையோடு வெளிப்படுத்துவதை கற்பது அவசியம். நாம் மக்களோடு சிறந்த முறையில் தொடர்புக்கொள்ள, ஆட்களுக்கிடையிலான உறவுகளை வளர்த்துக்கொள்ள நம்முடைய உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் சமநிலையுடன் இருப்பது அவசியமாகும்.

மதிப்பீடுகளைச் சரியான விதத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும், மற்ற நபர் தவறு செய்யும் பொழுது அதை மெதுவாக அவர்களின் ஆளுமைக்கு ஏற்றவாறு சரி செய்ய வேண்டும்

நாம் ஒவ்வொருவரும் நிறைய பின்னணிகளை கொண்டுள்ளோம், மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளை வாழ்வில் கடந்துள்ளோம். நாம் விவரித்தபடி, நோக்குகின்றபடி நிறைய காரியங்களைப் பின்பற்றுகின்றோம். நான் சொல்வது மாத்திரம்தான் சரி என்று ஒவ்வொருவரும் கூற ஆரம்பித்து, ஒருவருக்கு மாத்திரம் பிரியமாக அவர்களைச் சுற்றி இருப்போர் இருந்தால், அது காலப்போக்கில் ஒருவரை ஒருவர் நிச்சயம் பாதிக்கும். சரியான மதிப்பீடுகளை அமைத்து அதின்படி நிலைநிற்பது அவசியமாகும். மற்றவரின் புரிந்துக்கொள்ளுதல் தவறாக இருக்கும் பொழுது அதை மெதுவாகச் சரி  செய்வது அவசியம். தவறான புரிந்துக்கொள்ளுதல் இருப்போரும், ஏற்றப்படி ஏற்றுக்கொள்ளும்படி நடப்போரும் உள்ளனர். சூழ்நிலைகள் விசித்திரமாக இருந்தாலும், மற்றும் ஒரு நபர் முதலாவதாகக் காரியங்களை ஏற்க மறுத்தாலும், தொலை தூரத்தில் அனுபவங்கள் மற்றும் உண்மைகளால், ஆட்களுக்கிடையிலான உறவுகள் வலுவடையும்.

ஒரு நபர் தன்னுறுதியுடன் செயல்படுபவராயும், தன்னை சுற்றியுள்ள காரியங்களைக் குறித்த விழிப்புணர்வு உடையவராயும் இருக்க வேண்டும்

தொடர்புக்கொள்வது என்பது ஆட்களுக்கிடையிலான உறவிற்கு ஒரு முக்கிய அம்சமாகும். தொடர்புக்கொள்ளுதலில் கவனித்தல், யோசித்தல், பதிலளித்தல் அடங்கும். நாம் கவனித்த காரியங்களை யோசித்து பதிலளிப்பதற்கு நாம் தன்னுறுதியுடன் என்ன வெளிப்படுத்துகிறோம் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றும் நம்மைச் சுற்றியுள்ள காரியங்கள், நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வும், ஆட்களுக்கிடையிலான திறனை வளர்க்க உதவும், அதன் மூலம் ஆட்களுக்கிடையிலான உறவுகளும் முன்னேறும்.

ஒரு நபருக்குப் பொறுப்புணர்வும், நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும்

எல்லா மனிதர்களும் தாங்கள் கண்டறிந்த காரியங்கள், மற்றவரின் அங்கீகாரத்திற்கு உகந்த காரிய்ங்கள் மற்றும் கவனத்திற்கு உகந்த காரியங்களை, மற்றவருக்கு வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பர். அதனால் நிறைய நேரங்களில் ஒரு நபர் தம்மை நம்பி இன்னொருவர் சில ரகசிய காரியங்களைச் சொன்னாலும், அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற முடியாமல் காரியங்களை வெளியிடுவர். நம்பிக்கை உடைக்கப்படும் பொழுது, பெரிய ஏமாற்றமும், ஆட்களுக்கிடையிலான உறவுகளில் பிளவும் ஏற்படும். எப்பொழுது பொறுப்புணர்வும், நம்பகத்தன்மையும் ஒரு நபருக்கு இருக்கிறதோ, அப்பொழுது ஒருவர் மற்றவருக்கு வெட்கத்தை தரக்கூடிய காரியங்களை ஒரு பொழுதும் மற்றவரிடம் பகிர மாட்டார்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் முன்னேற்ற உதவியாய் இருப்பார். பொறுப்புணர்வும், நம்பகத்தன்மையும் ஆட்களுக்கிடையேயான திறன்களையும் உறவுகளையும் மேம்படுத்துகிறது.

ஆட்களுக்கிடையிலான திறன்கள்- எல்லாவற்றிற்கும் மேல்

மக்களே உலகில் மிகப் பெரிய வளங்களாயும், பேரிடர்களாயும் உள்ளனர்

வழக்கமான இயற்கை நிகழ்வுகள் மற்றும் எதிர்ப்பாராத பேரிடர்களை தவிர்த்து, உலகில் உள்ள அனைத்து காரியங்களையும் மக்களே கட்டுப்படுத்துகின்றனர். மனிதன் வானில் பறக்கவும், தண்ணீரில் மிதக்கவும், நிலத்தில் ஊர்ந்து செல்லவும் இயந்திரங்களை உருவாக்கி உள்ளான்.  மனிதன் புதையல்களை பூமியிலிருந்து தோண்டி எடுத்துள்ளான், முத்துக்களை கடலின் ஆழத்தில் கண்டுப்பிடித்துள்ளான், கண்களால் பார்க்க முடியாத காற்றின் கதிர்களைக் கொண்டு பணம் சம்பாதித்துள்ளான். பூமியில் உண்டாக்கப்பட்ட அனைத்து காரியங்களும் வாழ்வை எளிதாக்குவதற்கும், நமக்கு ஏற்றார்போலக் காரியங்களை மாற்றியமைப்பதற்கும், சில மனிதர்களால் பலரின் நலனுக்காகக் கண்டறியப்பட்டவை. இதற்கிடையில் நாம் உலகில் உள்ள கண்டுப்பிடிப்புகள் சக மனிதர்களுக்காகவும், சுற்றுப்புற சூழலுக்காகவும் என்பதை மறந்துவிட்டோம். லாபம் ஈட்டும் நோக்கில் பல காரியங்கள் பேரிடர்களாக மாறுகின்றன. வாழ்விற்கு சுற்றுச்சூழல் மாத்திரம் காரணமல்ல, மனிதனே சுற்றுச்சூழலை மாற்றியமைக்க கூடியவன். எனவே மனிதர்களே உலகில் மிகப் பெரிய வளங்களாயும் உள்ளனர், அது ஆட்களுக்கிடையேயான திறன்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

மக்கள் இல்லையெனில் ஆக்கப்பூர்வ காரியங்களோ ஆக்கக் கேடான காரியங்களோ இல்லை

மக்கள் தான் மிகப் பிரம்மாண்டமான கட்டுமானங்களையும்; கற்களை, புதையல்களை தோண்டுகின்ற முயற்சியில் மிகப் பெரிய பள்ளங்களையும் உண்டுப்பன்னுகின்றனர். மக்கள் தாமே எளிதான தகவல் பரிமாற்றத்திற்கும், போக்குவரத்திற்கும் மாத்திரமல்லாமல் மாசடைவதற்கும், தூய்மை கேடு உண்டாவதற்கும் காரணமாகின்றனர். மக்களே  தங்கள் அறிவையும் உணர்வுகளையும் மக்களுக்காகவும், மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்துகின்றனர். மக்கள் இல்லாமல் ஆக்கப்பூர்வ காரியங்களும் இல்லை, ஆக்ககேடான காரியங்களும் இல்லை. ஒரு தனிப்பட்ட நபராக நாம் அனைத்திற்கும் பொறுப்பாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஆட்களுக்கிடையே உள்ள திறன்கள் மூலம் நமக்கு நெருங்கியவருக்கு ஒரு பங்காளியாக உள்ளோம்.

ஆட்களுக்கிடையிலான உறவுகள் நல்ல முறையில் இருக்கும் பொழுது, சுயநலத்தை துறந்து அனைத்து ஆக்ககேடான காரியங்களையும் ஆக்கபூர்வ காரியங்களாக மாற்றியமைக்க முடியும்

வளங்களைச் சரியான முறையில் ஒருங்கிணைத்து உபயோகிக்காத பொழுது, மனிதர்கள் தங்கள் சுயநலத்தினால் சுற்றி இருக்கும் வளங்களைச் சுரண்டுவர். சரியான முறையில் பகுத்து எடுத்துக்கொள்ளாத பொழுது, நிறைய விளைவுகள் ஏற்படும். நாம் மற்றவர்களுக்குப் பொறுப்பானவர்களாக உணரும் பொழுது, நாம் செய்கின்ற காரியங்களில் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளும் பொழுது, மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க முயல்வோம். ஆட்களுக்கிடையிலான திறன் நாம் ஆக்கக் கேடான காரியங்களில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து ஆக்கப் பூர்வமாக அதை மாற்றியமைக்க உதவும்.

சரியான மதிப்பீடுகளுளோடு கூடிய ஆட்களுக்கிடையிலான திறன்கள், இந்தப் பூமியை சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த இடமாக மாற்றும்

ஆட்களுக்கிடையிலான திறன்களை மக்கள் வளர்க்கும் பொழுது, சாதி, பதவி, இனம், மதம் முதலிய எந்த வேறுபாடும் இல்லாமல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள முடியும், ஒருவரை ஒருவர் அங்கீகரிக்க முடியும், ஏனெனில் ஒவ்வொருவரும் தம்முடைய நிலையை உணர்ந்து, மற்றவர்களை அவர்கள் இருக்கின்றவாறே ஏற்க முடியும். சரியான மதிப்பீடுகளுளோடு கூடிய ஆட்களுக்கிடையிலான திறன்கள் ஒருவரோடொருவர் வார்த்தையிலும், செயலிலும், நடக்கையிலும் உண்மையாய் இருக்க உதவும், அது இந்தப் பூமியை சந்தோசமும், சமாதானமும் நிறைந்த இடமாக்குகிறது.


Comments