1. தன்மானம்
1. தன்மானம்
(நம்மை நாமேயும், நம்மதிப்பினையும் தெரிந்துக்கொள்வது)
முன்னுரை
அனைவரும் தங்களுடைய ஆர்வங்களிலும் பிடித்த காரியங்களிலும்
தனித்துவமாய் விளங்குகிறார்கள், ஆனால் நிறைய பேரிடம் உள்ள பிரச்சனை
என்னவெனில் தங்களை திருப்தி படுத்தக்கூடிய வகையில் உள்ளதான மதிப்பீடுகளையும்
வரையறைகளையும் கொண்டு அவர்களின் மதிப்பை உணர்ந்து நிச்சயப்படுத்தி கொள்ளாததுதான்.
இவையே நம்முடைய சமூகத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஒரு நபர் தனக்குத்தானே கீழே உள்ள வார்த்தைகளைச் சொல்லிக்கொள்வாரெனில்,
அந்த நபரே அன்பு,
சந்தோசம்,
சமாதானம் கொண்ட சிறந்த நபர் ஆவார்.
“ நான் பெலவானாய் இருக்கிறேன்
ஏனெனில் என் பெலவீனங்களை தெரிந்திருக்கின்றேன்
நான் அழகாய் இருக்கிறேன்
ஏனெலில் என் குறைகளை அறிந்துள்ளேன்
நான் பயபடாமல் இருக்கிறேன்
ஏனெனில் உண்மை மற்றும் நிழலை அடையாளம் கண்டுக்கொள்ள கற்றுள்ளேன்
நான் ஞானமாய் இருக்கிறேன்
ஏனெனில் என் தவறுகளிலிருந்து கற்கிறேன்
நான் நேசிக்கிறவனாய் இருக்கிறேன்
ஏனெனில் நான் வெறுப்பை உணர்ந்துள்ளேன்
மற்றும்...
நான் சிரிக்ககூடியவனாய் இருக்கிறேன்
ஏனெனில் துக்கங்களை தெரிந்துக் கொண்டு இருக்கிறேன்“
தன்மானம் என்பது ஒரு நபர் தன்னைத்தானே ஏற்பதற்கு உதவுகிறது. மற்றும் நாம்
நம்மைநாமே விரும்பவில்லையெனில் யாரும் நம்மை விரும்பமாட்டார்கள் என்பதையும் உணர
உதவுகிறது. இன்னும் நம்மை நாமே அறிவதற்கும்,
நமது மதிப்பினையும்,
நாம் எவ்வளவு மதிப்பாய் நடந்துக் கொள்ள
வேண்டும் என்பதையும் அறிய தன்மானம் நமக்கு உதவுகிறது.
உங்களின் மதிப்பென்ன?
சில மக்கள் அதிக பணம்,
அதிகாரம் அல்லது புகழ் சம்பாதிக்க
தங்கள் இருதயங்களை உட்படுத்துகிறார்கள், ஆனால் ஒரு மனிதனுக்கு தன்மானம்
இல்லையெனில் அவை அனைத்துமே வீணாகும் அனைத்து மனிதர்களுமே கோடி இந்திய ருபாய்
அல்லது நூறு கோடி அமெரிக்க பணம் அல்லது நூறுகோடி கிராம் தங்கம் மற்றும்
பெருமதிப்புள்ள வைரத்திற்கும் மேல், அதிகம் மதிப்புள்ளவர்கள்.
எல்லா மனிதர்களும் எந்தப் பொருளைப்
பார்க்கிலும் தனித்துவமும், விசேஷமும்,
மதிப்பும் உள்ளவர்கள். எனினும் நிறைய
பேர் தங்கள் குறுகிய லாபத்திற்காகத் தங்களை தாங்களே இலக்கிறார்கள். தன்மானம் ஒரு
மனிதன் உலகில் உள்ள எந்தப் பொருளையும் தன் சுயத்தால் பெற முடியும் என்பதையும்,
ஆனால் சுயத்தை எந்தப் பொருளாலும் பெற
முடியாது என்பதையும் உணர உதவுகிறது.
தன்மானம்
தன்மானம் என்பது மனிதர்கள் தங்கள்
சுயமரியாதையை காக்க ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே வைத்திருப்பதாகும். ஒருவர்
சுயலாபத்திற்காகப் புகழும் போது மனிதர்கள் பெற்றிருப்பது அல்ல. தன்மானம் என்பது
நம்மைநாமே ஆராய்ந்து, அறிந்து நம்மையே வியக்கும் தனிப்பட்ட
உள்ளார்ந்த ஒரு விஷயமாகும்.
ஒருவர் தன்மேலேயே வைத்திருக்கும் அன்பு,
அக்கறை,
மரியாதையே தன்மானமாகும். தன்மானம்
என்பது சுயநலம் அல்ல, ஆனால் சுயத்தை தீமையிலிருந்து
பராமரிப்பதும், சரியான சுய விருப்பங்களை நிவிர்த்தி
செய்து திருப்தி அடைவதும், சரியான மனப்பான்மையினாலும்,
செயல்கள் செய்வதாலும் கிடைக்கும் சுய
மரியாதையாகும்,
தன்மானம் உள்ளவர் மற்றவர்
மதிக்கக்கூடிய வகையில் நடந்து மரியாதையை எதிர்பார்ப்பர். தன்மானம் என்பது
சுயமரியாதையை கொண்டிருப்பது மாத்திரம் அல்ல,
ஆனால் சுய மரியாதை உடையவர்
மற்றவரிடமிருந்து மரியாதையை கோர தொடங்குவர். மற்றும் மற்றவர் ஏற்றுக்கொள்ள கூடிய
வகையில் நடந்து மரியாதையை பெறுவார்.
தன்மானத்துடன் செயல்படுவது ஒருவர்
பொறுமையை இழக்காமல் ஒரு வேண்டாத சூழலிலிருந்து நழுவுவதுமாகும். தன்மானம்
கொண்டிருப்பது நம்மை ஒரு சிலைபோல அமரச் செய்வதில்லை,
எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு
சரளமாகச் செயல்படவும், நம்பிக்கையுடன் நம்மை மாற்றிக்கொண்டு
காரியங்களை நமக்கே உரித்தாக வெளிப்படுத்தவும்,
உதவுகிறது.
ஒருவர் தன்மானத்தை தற்காலிகமாக இழக்க
நேரிட்டாலும், திரும்பவும் பெற்றுக்கொள்ள முடியும்.
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர்வுபூர்வமாக அறிவுபூர்வமாக நிறைய சவாலான
சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். பதற்றமான சூழ்நிலைகளை உணர முடியும். நம்மேல்
உள்ள நம்பிக்கையையும் இழக்க நேரிடும். எனினும் எப்பொழுது நம்மை நாமே
உணர்ந்துக்கொள்கின்றோமோ, நம்மையே சரி செய்கின்றோமோ,
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கின்றோமோ
அப்பொழுது நமது தன்மானத்தை திரும்பப் பெற முடியும்.
தன்மானத்தை அதிகரித்தல்
பகுத்தறியுங்கள்
நாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கு
பின்பு காரணமும் நோக்கமும் இருக்க வேண்டும். அவை நாம் என்ன செய்கிறோம் எதற்குச்
செய்கிறோம் என்பதை அறிய உதவும். நாம் யோசிக்கும் பொழுதும் ஒரு செயலைச் செய்யும்
பொழுதும், புதியதாக நிறைய காரியங்கள கற்று தன்மானத்தை
வளர்க்க முடியும்.
தன்னம்பிக்கையோடிருங்கள்
நாம் நமக்குத் தெரிந்த காரியங்களிலும்,
அனுபவப்பட்ட காரியங்களிலும் நம்பிக்கை
கொள்ள வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிடாமல்,
காரியங்களில் தன்னம்பிக்கையோடு நமது
சிறந்த முயற்சியைத் தருவது தன்மானத்தை வளர்க்கும்.
பொறுப்போடிருங்கள்
நமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளையும்,
நாம் எடுத்துக்கொண்ட வேலைகளையும்,
நாம் வாக்குறுதி அளித்த கடைமைகளையும்
எந்தச் சூழ்நிலையிலும் செய்து முடிக்க வேண்டும். நாம் தன்னம்பிக்கையோடு இருக்கும்
பொழுதோ மற்றவர் நம் மேல் நம்பிக்கை கொள்ளும் பொழுதோ நாம் நமது பொறுப்பை உணர
வேண்டும். நாம் நமது வெற்றியிலும் பொறுப்பேற்க வேண்டும் அதே சமயம் நமது
தோல்வியிலும் பொறுப்பேற்க வேண்டும், ஏனெனில் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ
அதில் ஈடுபட்டுள்ளோம். நாம் செய்த காரியங்களிலும்,
நாம் செய்யத் தவறின காரியங்களிலும்
பொறுப்பேர்பதன் மூலம் தன்மானத்தை வளர்த்துக் கொள்ள முடியும்.
முன் வந்து முயற்சி செய்யுங்கள்
எந்த வாய்ப்பும் நமக்காகக்
காத்திருந்து நாம் அதை எடுத்துக் கொள்ளும் வரை நம்மை வழியுறுத்தாது. நாம்
சிந்தனையிலும் செயலிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டுமானால் முன் வந்து முயல
வேண்டும். நமக்கு முன்பாக இருக்கும், நமக்கு ஏற்ற அனைத்து வாய்ப்புகளையும்
உபயோகிப்பதன்மூலம் வாழ்வில் வெற்றி பெற முடியும். நாம் முன் வந்து காரியங்களைச்
செய்வதினால் தன்மானத்தை வளர்க்கின்றோம்.
கவனத்துடன் இருங்கள்
நாம் மற்றவர்கள் நம்மைத் தவறான வழியில்
ஆளுகைக்காத படி எப்பொழுதும் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். நாம்
பொறுப்புள்ளவர்களாக இருப்பதற்கும், சூழ்நிலைகளைச் சரியான விதத்தில்
சமாளிப்பதற்கும் கவனமுடன் இருப்பது அவசியம்,
அது தன்மானத்தை அதிகரிக்கும்.
தவறுகளை ஒப்புக்கொண்டு
திருத்திக்கொள்ளுங்கள்
பூமியில் உள்ள மனிதர் யாரும் நேர்த்தியானவர்
இல்லை. தெரிந்தோ தெரியாமலோ தவறுகளை யாரும் தவிர்க்க முடியாது. எனினும் பெரிதான
மக்கள் தங்களை நேர்த்தியாய் காண்பிக்க செய்த தவறை மறைக்கவும் நியாயப்படுத்தவுமே
முயல்வர். அது மதிப்பை அழிப்பதாய் மாத்திரம் இல்லாமல்,
தவறை திருத்திக் கொள்ளவும் வழி செய்வதில்லை,
ஏனெலில் தவறுகளைத் தவறுகளாக
ஏற்றுக்கொள்ளாததினால். தவறுகளை ஏற்றுக்கொண்டு சரி செய்ய முயல்வது தன்மானத்தை
வளர்க்கும்.
சுய மதிப்பீடுகளை அமைத்துக்கொள்ளுங்கள்
தனிப்பட்ட மதிப்பீடுகள் ஒரு மனிதனின்
தனிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து நிறுவப்படுகின்றன,
அது சுற்றியுள்ள நிறைய காரணிகளால்
பாதிக்கப்படுகிறது. எல்லோரும் தங்களால் மதிக்கப்படுகின்ற,
தாங்கள் பின்பற்றுவதற்கு உயரிய
மதிப்பீடுகளை விவரிப்பது அவசியம். தனிப்பட்ட மதிப்பீடுகள் தவறாக இருக்கும்பொழுது,
ஓரு நபர் குறிக்கோளற்றவராய் இருப்பர்,
அதனால் தன்மானத்தை மெதுவாக இழக்க நேரிடலாம்.
தன்மானத்தை வளர்க்க சுய மதிப்பீடுகள் அவசியம்.
சரியானதிற்காக நிமிர்ந்து நில்லுங்கள்
நம் வாழ்வில் எந்தக் கடினமான சூழல்
ஏற்பட்டாலும் எது சரியோ அதற்காக நிமிர்ந்து நிற்க வேண்டும். நமது மதிப்பீடுகளை
நாம் விட்டுக்கொடுக்கும்பொழுது, நமது உண்மையான மதிப்பை உணர முடியாது,
வாழ்வின் சூழ்நிலைகளால் இழுக்கப்பட்டு
விடுவோம், அதனால் நமது தன்மானத்தையும்
தன்னம்பிக்கையையும் இழக்க நேரிடும். நாம் எப்படி இருக்க வேண்டுமென்று நிர்ணயித்து
இருந்தோமோ அதை மறந்து, வெறுமையாக வாழத் தொடங்கி விடுவோம்.
சரியானதிற்காக நிமிர்ந்து நிற்பது தன்மானத்தை வளர்க்க உதவும்.
நேரத்தை நிர்வகியுங்கள்
நேரம் என்பது நம் அனைவருக்கும்
முக்கியமானதும் இன்றியமையாததுமாகும். நேரத்தைச் சரியாக உபயோகிப்பது நாம் வாழ்வில்
சிறந்தவர்களாக இருக்க உதவும். நாம் நேரத்தைச் சரியான முறையில்
நிர்வகிக்கவில்லையெனில், நமது பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது
அதனால் தன்மானத்தை இழக்க நேரிடும். நேரத்தைச் சரியாக நிர்வகிப்பது எல்லா
பொறுப்புகளையும் நிறைவேற்ற, நிறைய காரியங்களைக் கற்றுக்கொள்ள,
தன்மானத்தை வளர்க்க உதவும்.
திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்
வரலாற்றில் மனிதனுடைய வளர்ச்சி
என்பதும், திறன் வளர்ச்சி என்பதும் ஒன்றோடு ஒன்று
பின்னிப்பிணைந்திருக்கிறது. திறன் வளர்ச்சி இல்லாமல் மனிதனுடைய வளர்ச்சியின்
பரிமாணம் தடைப்பட்டிருக்கும். முன்னேற்றங்களிலும் தொழில்நுட்பத்திலும் கூட இருந்து
வாழ்வை நிர்வகிக்கவும், நம் தன்மானத்தை நிறைய
போட்டிகளுக்கிடையே வளர்க்கவும், திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.
ஆக்கபூர்வமான மனப்பான்மையோடிருங்கள்
நம்முடைய மனப்பான்மையே நம்முடைய
தன்மானத்தை வடிவமைப்பதாகும். நம்மைச் சுற்றியுள்ள காரியங்கள் நல்லதாக இருந்தாலும்,
இல்லாவிட்டாலும் நாம் எவ்வாறு அதை
எடுத்துக் கொள்கிறோம், அதற்குப்
பிரதியுத்திரம் தருகிறோம் என்பது
முக்கியம். நம்மைச் சுற்றி நம்மைப் பாதிக்ககூடிய காரியங்கள் நடந்துக் கொண்டுதான்
இருக்கும், அதிலிருந்து வெளியே வந்து அதற்குச்
சரியான விதத்தில் பதில் தருவது அவசியம். நமது வாழ்வில் ஆக்கபூர்வமான மனநிலை
கொண்டிருப்பது நாம் தன்மானத்தில் நிலை நிற்க உதவும்.
இலக்குகளில் கவனம் செலுத்துங்கள்
நிறைய நேரங்களில்,
பெரும்பாலானோர் குறிக்கோளற்றவர்களாய்,
ஒரு குறிப்பிட்ட சமயம் என்ன வேண்டுமோ
அதை மாத்திரம் செய்கிறோம். நமது ஆர்வங்களுக்கு,
மதிப்பீடுகளுக்கு ஏற்றவாறு நமக்குக்
குறுகிய மற்றும் நீடிய இலக்குகள் இருப்பது அவசியம். நமது இலக்குகள் நாம் கவனமாக
இருப்பதற்கும், சரியான முறையில் செயலாற்றுவதற்கும்
உதவி நமது தன்மானத்தை வளர்க்கும்.
தன்மானத்தை இழப்பதை தவிர்த்தல்:
தன்னம்பிக்கை இல்லையெனில் உங்களுக்குத் தெரியாத விஷயங்களைக்
கையாளாதிருங்கள் (தன்னம்பிக்கை இருந்தால் தெரியாத விஷயத்தையும் முயற்சி செய்யலாம்)
நம் அனைவருக்கும் நமது வாழ்வில்
நமக்குத் தெரிந்த, நமது திறனுக்குள் அடங்கிய காரியங்களில்
அதைக் கையாளுவதற்கான தன்னம்பிக்கை இருக்கும். இருப்பினும், நாம் நம்மையே தகுதியானவர் என நிரூபிக்கவோ, நமது திறனைத் தாண்டிச் சாதிக்க
நினைக்கும் பொழுதோ, சில நேரங்களில் நமக்கு மிகையான
நம்பிக்கை இருப்பதும் உண்டு, அது சில வேளைகளில் பலன் அளிக்கும், ஆனால் நாம் தாழ்மையாக இருப்பது அவசியம், நமது திறனுக்கு மிகுந்த காரியங்களை
முடியாது என ஒற்றுக்கொள்வதும், இல்லையெனில் முடிந்த வரை முயல்கிறேன் என்பதும் சிறந்ததாகும். நமக்குத் தவறான நம்பிக்கை இருக்கும்
பொழுதும், நம்மை நாமே போலியாக உயர்த்திக்கொள்ள
நினைக்கும் பொழுதும், மற்றவருடைய இகழ்ச்சிக்கு உட்பட்டு தன்மானத்தை இழக்க நேரிடும்.
நீங்கள் ஆளுகை செய்ய வேண்டியவை,
உங்களை ஆளுகைக்க விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
நம்மைச் சுற்றி உள்ள காரியங்களில்
நமக்கு நிறைய வரையறைகளும், வழி முறைகளும், நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியாய் இருக்கிறது. நிறைய நேரங்களில் ஒரு காரியத்தை
எப்படியாகக் கையாள வேண்டுமோ, அப்படியே கையாள வேண்டும். நாம் ஒரு காரியத்தில் உடல் அல்லது மனதால் சார்ந்திருப்பது
ஏமாற்றத்தைத் தரும், அது உணர்வுள்ள வாழ்வாய் இருக்காது. நாம் மிகவும் முக்கியமில்லாத சில
விஷயங்களை நமக்கு எஜமானனாக வைத்திருப்பதால், தன்மானத்தை இழக்க நேரிடும்.
உங்களை மகிழ்ச்சியாக
வைத்துக்கொள்ளுங்கள், எவரும் உங்கள் மகிழ்ச்சியை
திருடவிடாதிருங்கள்
நம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில்
கொண்டிருக்கும் தேர்வுகளுக்கு நாமே பொறுப்பாளிகளாய் உள்ளோம். முழுமையாக அழிந்தவற்றிலிருந்து சிறு
விஷயத்தையாகிலும் நம்மால் பெற முடியாது, அது மிக மோசமாகப் பாதித்த உணர்வுரீதியான காரியமானாலும் அதைப் பற்றிக்
கவலைக்கொள்வது காரணமற்றதாகும். சந்தோசம் என்பது அறிவு சார்ந்தது அல்ல உணர்வு சார்ந்தது என்பதை மறுக்கமுடியாவிட்டாலும், நாம் காரணத்தோடு உணர்வைச் செலுத்துவதன்
மூலம் கடின காலங்களிலும் சந்தோஷமாக இருக்க முடியும், உலகில் எந்த மூலையில் உள்ள எந்த
நபராலும் நமது சந்தோஷத்தைத் திருட முடியாது, இது தன்மானத்தையும் காக்கும்.
உங்களது சூழலுக்கு நீங்களே பொறுப்பு,
அது உங்களை ஆட்கொள்ளாதபடி தேர்ந்தெடுங்கள்
நம் அனைவருக்கும் நிறைய நண்பர்கள்
மற்றும் உறவினர்கள் உள்ளனர். நம்மைச் சுற்றி வெவ்வேறு நபர்களும்
உள்ளனர். நம்மைச் சுற்றி உள்ள நபர்களால்
நம்முடைய சூழ்நிலைகள் மாறுப்பட்டாலும், நாமே அதைத் தேர்ந்தெடுக்கின்றோம். அது நம்மைப் பாதிக்காதபடி
தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்,
அதைத் திரும்பச் செய்யாதிருங்கள். நீங்கள் அறிந்தும் அறியாமலும் ஒரு சில
வழிகளில் அதில் ஈடுபட்டு இருக்கின்றீர்கள்
நிறைய காரியங்களில் நாம் தெரிந்தோ
தெரியாமலோ ததும்ப வாய்புகள் உள்ளன. நாம் நமது தவறுகளிலிருந்து கவனத்துடனும், விழிப்புடனும் காரியங்களைக் கற்று, நமக்கு எதிர்மறை விளைவுகள் தரும்
காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் மனதையும்,
சிந்தனையையும் ஒருங்கிணைத்து, வேண்டிய நேரத்திற்கு ஏற்றவாறு உங்களை
மாற்றிக்கொள்ளுங்கள்
நம்முடைய முயற்சிகள் வீணாகும்
சூழ்நிலைகளிலிருந்து நாம் விலக வேண்டும். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வதை, நம்முடைய உணர்வுகள் சிந்தனைகள் மூலம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
தன்மானத்தில் வெற்றிப்பெறுதல்
உங்களையே தெரிந்துக்கொள்ளுங்கள்
உங்களுக்குத் தெரிந்ததைச் செய்யுங்கள்
நீங்கள் செய்ய விரும்புவதை
கற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் செய்ய வேண்டியதை
தெரிந்துக்கொள்ளுங்கள்
சரியான நேரத்தில் அதைச் செய்யுங்கள்
நீங்கள் எப்படி இருக்க
வேண்டியிருக்கிறதோ அப்படியே இருங்கள்
நமது மனதிலும் சிந்தனையிலும்,
கீழே உள்ள வாக்கியத்தில் உள்ள உறுதியை
ஏற்போம்
“நான் இது முதல் எனக்குச் சிறந்ததையே செய்வேன்”
ஏனெனில் “ஒருவரின் தன்மானம் தாக்குதலுக்கு,
அழிவிற்கு, கடுமையான கேலிக்கு உட்படலாம்,
ஆனால் ஒருவர் சரணடையாதவரை அதை யாராலும்
எடுத்துக்கொள்ள முடியாது” என்பது எப்பொழுதும் உண்மையாய்
இருக்கிறது.
Comments
Post a Comment